நாத்ராவ் நேரல்கர்
பண்டிட் [1][2]நாத்ராவ் நேரல்கர் (Nathrao Neralkar) (16 நவம்பர் 1935 - 28 மார்ச் 2021) இந்திய நாட்டின் மகாராட்டிரம் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய இந்துசுதானி குரல் இசைக்கலைஞர் மற்றும் இசை ஆசிரியர் ஆவார். இவருக்கு 2014 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் கலைத்துறையின் உயரிய விருதான சங்கீத நாடக அகாதமி விருது வழங்கப்பட்டது.
நாத்ராவ் நேரல்கர் | |
---|---|
2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்சியால் சங்கீத நாடக அகாதமி விருது (இடது) பெறும் படம் | |
பிறப்பு | 16-நவம்பர்-1935 நாந்தேடு, ஐதராபாத் இராச்சியம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (இன்றைய நாளில் மகாராட்டிரம்) |
இறப்பு | 28-மார்ச்-2021 அவுரங்காபாத், மகாராட்டிரம் , மகாராட்டிரம், இந்தியா |
பணி |
|
அறியப்படுவது | இந்துசுதானி குரல் இசை |
பிள்ளைகள் | 3 |
விருதுகள் | சங்கீத நாடக அகாதமி விருது |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுநாத்ராவ் நேரல்கர் 1935 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் தேதி ஐதராபாத் மாநிலத்தின் (இன்றைய மகாராட்டிராவில் ) நாந்தேடில் பிறந்தார். இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர்.[1]
இந்துசுதானி இசை
தொகுநேரல்கர் இந்துசுதானி கிளாசிக்கல் இசையில் ஒரு பாராட்டப்பட்ட குரல் கலைஞர் ஆவார். இவர் "ஆனந்த் சங்கீத் மகாவித்யாலயா" என்ற இசைப் பள்ளியை நிறுவினார்.[1] 1973 ஆம் ஆண்டில் இவர் அவுரங்காபாத்தில் உள்ள சரசுவதி புவன் கல்லூரியில் இசை கற்பிக்கத் தொடங்கினார். இறுதியில் இசைத் துறையின் தலைவராக ஆனார். மேலும் 1995 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.[2]
விருதுகள்
தொகுஇந்துஸ்தானி இசைக்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக 2014 ஆம் ஆண்டிற்கான இந்திய அரசால் கலைத்துறையில் இந்தியாவின் [3] விருதான சங்கீத நாடக அகாடமி விருதை நேரல்கர் பெற்றார்.[4]
இறப்பு
தொகுநேரல்கர் 10 நாட்களுக்கு முன்பு இவரது வீட்டில் விபத்து காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவுரங்காபாத்தில் மாரடைப்பு காரணமாக 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் தேதியன்று இறந்தார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Renowned vocalist Pandit Neralkar passes away". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in ஆங்கிலம்). 29 March 2021. பார்க்கப்பட்ட நாள் 4 December 2022.
- ↑ 2.0 2.1 2.2 "Pandit Neralkar: End of a musical phase". Lokmat Times. 28 March 2021. பார்க்கப்பட்ட நாள் 4 December 2022.
- ↑ "Sangeet Natak Akademi Award to UoH professor" (in en-IN). The Hindu. 20 July 2019. https://www.thehindu.com/news/cities/Hyderabad/sangeet-natak-akademi-award-to-uoh-professor/article28614913.ece.
- ↑ "President gives away Sangeet Natak Akademi awards, fellowships". இந்தியன் எக்சுபிரசு (in ஆங்கிலம்). 24 October 2015. Archived from the original on 10 December 2016. பார்க்கப்பட்ட நாள் 4 December 2022.