நானக் சிங் (ஆங்கிலம்: Nanak Singh) பிறப்பு: 1897 சூலை 4 - இறப்பு: 1971 டிசம்பர் 28 ) 'ஹன்ஸ்ராஜ்' என்றப் பெயரில் பிறந்த இவர் ஒரு இந்திய கவிஞரும், பாடலாசிரியரும் மற்றும் பஞ்சாபி மொழியின் புதின ஆசிரியரும் ஆவார். இந்தியாவின் சுதந்திர இயக்கத்திற்கு ஆதரவாக அவரது இலக்கியப் படைப்புகள் ஆங்கிலேயர்கள் அவரைக் கைது செய்ய வழிவகுத்தன. அவர் இலக்கியப் பாராட்டைப் பெற்ற பல புதினங்களை வெளியிட்டுள்ளார்.

நானக் சிங்
பிறப்பு(1897-07-04)4 சூலை 1897
சக் கமீது ஜீலம் மாவட்டம் (தற்போதைய பாக்கித்தானில்)
இறப்பு28 திசம்பர் 1971(1971-12-28) (அகவை 74)
பஞ்சாப் பகுதி
தொழில்நாடக ஆசிரியர், கவிஞர், புதின ஆசிரியர்
தேசியம்இந்தியா
துணைவர்ராஜ் கௌர்
பிள்ளைகள்குல்வந்த் சிங் சூரி (மகன்)
குல்பீர் சிங் சூரி (மகன்)
கன்வால்ஜித் சிங் சூரி (மகன்)
கர்த்தார் சிங் சூரி (மகன்)
குல்தீப் சிங் சூரி (மகன்)
புஷ்பிந்தர் கவுர் (மகள்)

ஆரம்பகால வாழ்க்கை தொகு

பாக்கித்தானின் ஜீலம் மாவட்டத்தில் ஏழை பஞ்சாபி இந்து குடும்பத்தில் 'ஹன்ஸ் ராஜ்' என்ற பெயரில் நானக் சிங் பிறந்தார். பின்னர் அவர் சீக்கிய மதத்தை ஏற்றுக்கொண்ட பிறகு தனது பெயரை நானக் சிங் என்று மாற்றினார். அவர் முறையான கல்வியைப் பெறவில்லை என்றாலும், வரலாற்று நிகழ்வுகள் குறித்த வசனங்களை சிறு வயதிலேயே எழுதத் தொடங்கினார். பின்னர், குருத்வாரா சீர்திருத்த இயக்கத்தில் சேர சீக்கியர்களை ஊக்குவித்ததில், அதற்கான பக்திப் பாடல்களை சிங் எழுதத் தொடங்கினார். 1918 ஆம் ஆண்டில், அவர் தனது முதல் புத்தகமான சத்குரு மெக்மாவை எழுதினார். [1] அதில் சீக்கிய குருக்களைப் புகழ்ந்து பாடும் பாடல்கள் இருந்தன. இது அவரது வணிக ரீதியாக வெற்றிகரமான முதல் இலக்கியப் படைப்பாகக் கருதப்படுகிறது.

இந்திய சுதந்திர இயக்கம் தொகு

1919 ஏப்ரல் 13, அன்று, அமிர்தசரசில் வைசாக்கி (பஞ்சாபி புத்தாண்டு) நாளில் ஜலியன்வாலா பாக் படுகொலை என அறியப்பட்ட அமைதியான பேரணியில் பங்கேற்றவர்களில் 379 பேர் பிரித்தன் துருப்புக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். படுகொலையில் கொல்லப்பட்ட இரண்டு நண்பர்களுடன் சிங் இருந்தார். இந்த சம்பவம் காலனித்துவ ஆட்சியை கேலி செய்து கோமெய்னி விசயன்ஸ் - ப்ளடி வைசாக்கி (பஞ்சாபி புத்தாண்டு) என்ற ஒரு காவியக் கவிதையை எழுதத் தூண்டியது. அவரது ஆத்திரமூட்டும் வெளியீடு குறித்து பிரித்தன் அரசு கவலைப்பட்டு புத்தகத்தை தடை செய்தது.

அகாலி இயக்கத்தில் சேர்ந்து இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் சிங் பங்கேற்றார். அகாலி இதழ்களின் ஆசிரியரானார். இதை பிரித்தன் அரசு கவனித்து வந்தது. சட்டவிரோத அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்றதாக சிங் மீது குற்றம் சாட்டப்பட்டு லாகூரின் போர்ஸ்டல் சிறைக்கு அனுப்பப்பட்டார். குரு கா பாக் மோச்சா ஆர்ப்பாட்டத்தின் போது அமைதியான சீக்கியர்கள் மீது ஆங்கிலேயர்கள் காட்டுமிராண்டித்தனத்தையும் அடக்குமுறையையும் தனது இரண்டாவது கவிதைத் தொகுப்பான ஜாக்மி தில் என்பதில் விவரித்தார். இது 1923 சனவரயில் வெளியிடப்பட்டது, இதுவும் வெளியிடப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் தடை செய்யப்பட்டது.

சிறையில் இருந்த காலத்தில் சிங் பல புதினங்களை எழுதினார், இதில் குர்முகியின் சாதாரண எழுத்து முறையில் (பஞ்சாபி) 40,000 பக்கங்கள் உள்ளன.

1960 இல் பஞ்சாபின் மிக உயர்ந்த இலக்கிய விருது உட்பட பல விருதுகளுடன் அவர் பகிரங்கமாக அங்கீகரிக்கப்பட்டார். இவரது சிறந்த வரலாற்று புதினமான இக் மியான் தோ தல்வரன் ( ஒரு உறை மற்றும் இரண்டு வாள், 1959), அவருக்கு 1962 இல் இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய கௌரவமான சாகித்திய அகாதமி விருதைவென்றது .

மரபுரிமை தொகு

1997 இல் இவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. சிங்கின் நினைவாக, இந்தியாவின் பிரதமர் இந்தர் குமார் குஜ்ரால் 1998 இல் அவரது உருவத்துடன் கூடிய ஒரு அஞ்சல் முத்திரையை வெளியிட்டார். [2]

குறிப்புகள் தொகு

  1. "NANAK SINGH NOVELIST". H C Singh. Archived from the original on 2019-07-31. பார்க்கப்பட்ட நாள் 2019-12-15.
  2. "Nanak Singh". Sikh-heritage.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2012-11-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நானக்_சிங்&oldid=3685166" இலிருந்து மீள்விக்கப்பட்டது