ஜீலம் மாவட்டம்
ஜீலம் மாவட்டம் (உருது: ضلع جہلم) பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ளது. ஜீலம் மாவட்டம் பஞ்சாப் மாநிலத்தின் பழமையான மாவட்டம் ஆகும். இம்மாவட்டம் 23 மார்ச் 1849ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியினரால் துவக்கப்பட்டது.[1]
ஜீலம்
جہلم | |
---|---|
மாவட்டம் | |
நாடு | பாகிஸ்தான் |
மாநிலம் | பஞ்சாப் |
தலைமையிடம் | ஜீலம் நகரம் |
அரசு | |
• பாகிஸ்தான் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் | சௌத்திரி காதிம் உசேன் (தொகுதி எண் 62) இக்பால் மேஹதி (தொகுதி எண் 63) |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,587 km2 (1,385 sq mi) |
மக்கள்தொகை (2006) | |
• மொத்தம் | 11,03,000 |
• அடர்த்தி | 261/km2 (680/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
No. of Tehsils | 4 |
வருவாய் வட்டங்கள் | ஜீலம் பிந்த் தாதன் கான் சொஹாவா தினா |
மொழிகள் | பஞ்சாபி, உருது |
இணையதளம் | www |
1998ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, ஜீலம் மாவட்டத்தின் மக்கட்தொகை 9,36,957 ஆக இருந்தது. மக்கட்தொகையில் நகர மக்கட்தொகை 31.48% ஆகும். ஜீலம் மாவட்டத்தின் பெரும்பான்மை இனக்குழுவினர் பஞ்சாபியர் ஆவர். இவ்வினக்குழு மக்கள் பாகிஸ்தான் இராணுவத்தில் பெரும்பான்மையினராக உள்ளனர்.[2] ஜீலம் மாவட்டம், ஜீலம் ஆற்றின் இரு கரையின் நெடுகிலும் பரந்துள்ளது. இங்கு பாறை உப்பு மலைக் குன்றுகளும், இரண்டு நிலக்கரி சுரங்கங்களும் உள்ளது.
அமைவிடம்
தொகுபாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் அமைந்த ஜீலம் மாவட்டத்தின் தெற்கில் சர்கோதா மாவட்டம், மண்டி பகாவூத்தின் மாவட்டமும், தென்மேற்கில் குஷாப் மாவட்டமும், தெற்கிலும், கிழக்கிலும் ஜீலம் ஆறும், கிழக்கில் குஜராத் மாவட்டமும், மேற்கில் சக்வால் மாவட்டமும், வடகிழக்கில் மிர்பூர் மாவட்டமும், வடக்கில் இராவல்பிண்டி மாவட்டமும் அமைந்துள்ளது.
நிர்வாகம்
தொகுஜீலம் மாவட்டம் 3,587 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.2,[3]இம்மாவட்டம் நான்கு வருவாய் வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது; அவைகள் ஜீலம் வட்டம், சோஹாவா வட்டம், பிந்த் தாதன் கான் வட்டம் மற்றும் தினா வட்டம் ஆகும். [4] மேலும் ஜீலம் மாவட்டம் 53 ஒன்றியக் குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது.[5]ஜீலம் நகரம், ஜீலம் மாவட்டத்தின் தலைமையிடமாக உள்ளது.
மொழிகள்
தொகு1998ஆம் ஆண்டில் எடுத்த மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி ஜீலம் மாவட்டத்தில் பஞ்சாபி மொழி பெரும்பாலான மக்களால் பேசப்படுகிறது. மேலும் தேசிய மொழியான உருது மொழி அனைவராலும் புரிந்து கொள்ளப்படுகிறது. நன்கு படித்தவர்கள் ஆங்கில மொழியை பேசுகின்றனர்.
- பஞ்சாபி 99.6%
- பிற மொழிகள் 0.4%
மக்கள் பரம்பல்
தொகு1998ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, ஜீலம் மாவட்டத்தின் மக்கட்தொகை 9,36,957 ஆகும். மக்கள் தொகை அடர்த்தி, இங்கு ஒரு சதுர கிலோ மீட்டரில் 261 மக்கள் வாழ்கின்றனர்.[6]மக்கட்தொகையில் பெரும்பாலன மக்கள் பஞ்சாபியர்கள். 2006ஆம் ஆண்டு, பஞ்சாப் மாநில கல்வித்துறையின் புள்ளி விவரப்படி, பாகிஸ்தானில் அதிகம் எழுத்தறிவு உடையவர்கள், ஜீலம் மாவட்டத்தினர் ஆவர். இம்மாவட்டத்தின் எழுத்தறிவு விகிதம் 79%ஆக உள்ளது.[7] ஜீலம் மாவட்டத்தின் மனித மேம்பாட்டுச் சுட்டெண் 0.770 ஆகும். இது பாகிஸ்தானில் கராச்சிக்கு அடுத்து மிக உயர்ந்ததாகும் 2004-2005ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, ஜீலம் மாவட்டம், பாகிஸ்தானில் நான்காவது வளமை மிக்க மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள், மொத்த மக்கட்தொகையில் 12.32% ஆவர்.[8] 1904ஆம் ஜீலம் அரசிதழில் வெளியிட்ட விவரப்படி, ஜீலம் மாவட்டத்தின் பெரும்பான்மையான மக்கள் இசுலாம் சமயத்தை பின்பற்றுகின்றனர்.[9]
வரலாறு
தொகுவரலாற்றுக்கு முந்தைய காலம்
தொகுகிரேக்க மாவீரன அலெக்சாண்டர் மற்றும் போரஸ் என்ற இந்திய மன்னருக்கும், ஜீலம் பகுதியில் கி மு 326இல் போர் நடந்தது.
தில்லி சுல்தானகம்
தொகுகஜினி முகமது கி பி 1005இல் ஜீலம் மாவட்டத்தை உள்ளடக்கிய வடக்கு பஞ்சாப் பகுதியினை கைப்பற்றினார். தில்லி சுல்தானகம் மற்றும் மொகலாயப் பேரரசின் ஆட்சியில் இருந்த பெரும்பாலான ஜீலம் மாவட்ட மக்கள் இசுலாமிய சமயத்திற்கு மதம் மாறினர்.
மொகலாயர் காலம்
தொகுமொகலாயர் காலத்தில் ஜீலம் பகுதியை ஆண்ட குறுநில மன்னர்கள் மொகலாயப் பேரரசுக்கு திறை செலுத்தி, அடங்கி ஆட்சி செய்தனர்.
சீக்கியர் காலம்
தொகுமொகலாயப் பேரரசு வீழ்ச்சி கண்ட பிறகு, எழுச்சியுற்ற சீக்கியப் பேரரசு, ஜீலம் மாவட்டத்தை சீக்கியர்கள் கைப்பற்றி சீக்கியப் பேரரசில் ஜீலம் மாவட்டத்தை இணைத்தனர்.
பிரித்தானிய இந்தியா ஆட்சியில்
தொகு1848–1849 ஆண்டில் நடந்த இரண்டாம் ஆங்கிலேய-சீக்கியப் போரில் சீக்கியப் பேரரசு, கிழக்கிந்திய கம்பெனியிடம் தோல்வியுற்றது. இதனால் ஜீலம் மாவட்டமும் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. பிரித்தானிய இந்திய அரசு காலத்தில் 1 ஏப்ரல் 1904இல் ஜீலம் மாவட்டத்தில் இருந்த தலாகாங் வட்டத்தை அட்டாக் மாவட்டத்துடன் இணைத்தனர்.
இட அமைப்பியல்
தொகுஜீலம் நகரம்
தொகுஜீலம் மாவட்டத்தின் தலைமையிடமான ஜீலம் நகரம், ஜீலம் ஆற்றின் வலது மற்றும் இடது புறங்களின் கரையில் அமைந்துள்ளது. ஜீலம் ஆற்றின் இடது கரையில் அமைந்த பகுதியை சராய் ஆலம்கீர் பகுதி அமைந்துள்ளது. இங்கு ஜீலம் இராணுவக் கல்லூரி உள்ளது. ஜீலம் நகரத்தின் மக்கட்தொகை 1,72,073 ஆகும்.[10] 16வது நூற்றாண்டின் நெடுஞ்சாலை ஜீலம் நகரைக் கடந்து செல்கிறது. பேரரசர் அலெக்சாந்தருக்கும் இப்பகுதியை ஆண்ட மன்னர் போரஸ் என்பவருக்கும் ஜீலம் ஆற்றாங்கரையில் கி மு 326இல் போர் நடைபெற்றது. மக்கட்தொகை அடிப்படையில் ஜீலம் நகரம், பாகிஸ்தான் நாட்டில் 35வது இடத்தில் உள்ளது.
வேளாண்மை
தொகுஜீலம் மாவட்டத்தின் வேளாண்மை நிலப் பரப்பளவு 8,58,767 ஏக்கராகும். ஆண்டின் சராசரி மழையளவு 20 முதல் 40 அங்குலம். கோதுமை அதிக அளவில் பயிரிடப்படுகிறது. ஜீலம் ஆறு வளமை மிக்க வண்டல மண்னை இமயமலையிலிருந்து கொண்டு வருகிறது.
தட்ப வெப்ப நிலை
தொகுகோடைகாலத்தில் கடும் வெப்பமும், குளிர்காலத்தில் கடுங்குளிரும் காணப்படுகிறது. ஆண்டின் சராசரி மழையளவு 48 முதல் 69 அங்குலம் ஆகும். 2008 மற்றும் 2015ஆம் ஆண்டில் பதிவான தட்ப வெப்பநிலைகள் காட்டப்பட்டுள்ளது.
தட்பவெப்ப நிலைத் தகவல், ஜீலம், பாகிஸ்தான் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 20 (68) |
22 (72) |
27 (81) |
33 (91) |
37.8 (100) |
40 (104) |
36 (97) |
34 (93) |
35 (95) |
33 (91) |
28 (82) |
21 (70) |
31 (87) |
தாழ் சராசரி °C (°F) | 5 (41) |
8 (46) |
12 (54) |
18 (64) |
22 (72) |
26 (79) |
26.1 (79) |
25 (77) |
23 (73) |
17 (63) |
10 (50) |
6 (43) |
16 (62) |
பொழிவு mm (inches) | 34 (1.3) |
50 (2) |
60 (2.4) |
36 (1.4) |
32 (1) |
52 (2) |
237 (9.3) |
221 (8.7) |
78 (3.1) |
12 (0.5) |
10 (0.4) |
30 (1.2) |
85.2 (32.2) |
ஆதாரம்: Weatherbase 2008[11] |
தட்பவெப்ப நிலைத் தகவல், ஜீலம், பாகிஸ்தான் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 19 (66) |
21 (69) |
27 (80) |
33 (91) |
38 (100) |
40 (104) |
36 (96) |
34 (93) |
34 (93) |
33 (91) |
27 (80) |
21 (69) |
30 (86) |
தாழ் சராசரி °C (°F) | 4 (39) |
7 (44) |
12 (53) |
17 (62) |
22 (71) |
26 (78) |
26 (78) |
25 (77) |
23 (73) |
16 (60) |
9 (48) |
5 (41) |
16 (60) |
பொழிவு mm (inches) | 35 (1.4) |
46 (1.8) |
45 (1.8) |
32 (1.2) |
27 (1) |
51 (2) |
223 (8.8) |
225 (8.9) |
79 (3.1) |
18 (0.7) |
12 (0.5) |
25 (1) |
81.8 (32.2) |
ஆதாரம்: Weatherbase 2015[11] |
கல்வி
தொகுஜீலம் மாவட்டத்தில் பஞ்சாப் பல்கலைகழகத்தின் வளாகமும், கலை, அறிவியல், வணிகம், கல்வி இயல் கல்லூரிகள், இராணுவப் பயிற்சிப் பள்ளிகள், மதக் கல்வி நிறுவனங்களும் மற்றும் சட்டக் கல்லூரிகள் உள்ளது:
- பஞ்சாப் பல்கலைக்கழக வளாகம்
- அரசு முதுநிலை பட்டப் படிப்பு கல்லூரி, ஜீலம்.
- அரசுக் கல்லூரி, ஜீலம்
- அரசு பெண்கள் கல்லூரி, ஜீலம்
- அரசு வணிக்க் கல்லூரி, பிலால் நகரம், ஜீலம்
- அரசு மகளிர் கல்லூரி, ஜலால்பூர் ஷெரீப்
- அரசு கல்வி இயல் கல்லூரி, ஜீலம்
- பன்னாட்டு இசுலாமிய இஸ்லாமாபாத் பல்கலைக்கழகம், ஜீலம்
- இராணுவப் படைப் பயிற்சி பள்ளி, ஜீலம்
- ஜின்னா சட்டக் கல்லூரி, ஜீலம்
- பாத்திமா பட்டமேற்படிப்பு மகளிர் கல்லூரி, ஜீலம்
- ஜீலம் கல்வி இயல் கல்லூரி, ஜீலம்
- பஞ்சாப் கல்லூரி, பி டி கான்
- அரசு பட்டப் படிப்பு கல்லூரி
மேற்கோள்கள்
தொகு- ↑ "Jhelum Report". Crprid.org. Archived from the original on 2012-03-14. பார்க்கப்பட்ட நாள் 2013-01-25.
- ↑ BBC NEWS – City of Soldiers
- ↑ "Jhelum District Overview - Punjab Police". Archived from the original on 2008-01-04. பார்க்கப்பட்ட நாள் 2015-11-10.
- ↑ "Administrative Units of Pakistan". Archived from the original on 2010-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-11-10.
- ↑ "Tehsils & Unions in the District of Jhelum -Government of Pakistan". Archived from the original on 2012-02-09. பார்க்கப்பட்ட நாள் 2015-11-10.
- ↑ Population of Jhelum District
- ↑ Literacy rate figures still not updated - Daily Times
- ↑ Haroon Jamal (June 2007). Income Poverty at District Level: An Application of Small Area Estimation Technique (PDF) (Report). Social Policy and Development Centre. pp. 15–18. Archived from the original (PDF) on 1 February 2014. பார்க்கப்பட்ட நாள் 28 January 2014.
- ↑ Gazetteer of the Jhelum District, 1904, Part 1 ,Page 129 ,Sang-e-Meel Publications.
- ↑ Population of Jhelum City[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 11.0 11.1 "Weatherbase: Historical Weather for Jhelum, Pakistan". Weatherbase. 2008.
வெளி இணைப்புகள்
தொகு- Jhelum District பரணிடப்பட்டது 2008-08-29 at the வந்தவழி இயந்திரம்