நான்காம் பௌத்த சங்கம்
நான்காம் பௌத்த சங்கம் (Fourth Buddhist Council), கிபி முதல் நூற்றாண்டில், இலங்கையில் தேரவாத பௌத்தர்கள் கூட்டிய சங்கத்தினையும் மற்றும் சர்வாஸ்திவாத பௌத்தர்கள் காஷ்மீரத்தில் கூட்டிய பௌத்த சங்கத்தினையும் குறிக்கும்.
இலங்கையில் முதன்முறையாக நடைபெற்ற நான்காம் பௌத்த சங்கத்தின் முடிவிகளின் படி, பௌத்த இலக்கியங்களை பனை ஓலைகளில் எழுதி ஆவணப்படுத்தப்பட்டது.
நான்காம் பௌத்த சங்கம், இலங்கை
தொகுபன்னாட்டு தேரவாத பௌத்தர்களின் மாநாடு, கிபி 27ம் ஆண்டில் அனுராதபுர நாட்டு மன்னர் வட்டகாமினி அபயன் ஆதரவில் அபயகிரி விகாரையில் நடைபெற்றது.[1][2] இலங்கையின் மகாவம்சம் எனும் பௌத்த இலக்கியம், நான்காம் பௌத்தச் சங்கத்தின் போது, அனைத்து பௌத்த இலக்கியங்களுக்கு பாலி மொழியில் விளக்கங்கள், விரிவுரைகள் எழுதப்பட்டது.
நான்காம் பௌத்த சங்கம் முடிவுற்ற போது, பனை ஓலைகளில் எழுதப்பட்ட பௌத்த இலக்கியங்களின் பிரதிகள் பர்மா, தாய்லாந்து, கம்போடியா மற்றும் லாவோஸ் நாடுகளின் பௌத்த விகாரைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
நான்காம் பௌத்த சங்கம், காஷ்மீரம்
தொகுகுசானப் பேரரசின் காலத்தில் கிபி 100ல் 500 பிக்குகள் கலந்து கொண்ட, சர்வாஸ்திவாத பௌத்தர்களின் மாநாடு, ஜலந்தர் அல்லது காஷ்மீரத்தில், சுங்க வம்ச அரசர் வசுமித்திரன்[3] தலைமையில் நடைபெற்றதாக அறியப்படுகிறது. இப்பௌத்த மாநாட்டில் திரிபிடகத்தின் ஒன்றான அபிதம்மபிடகத்திற்கு விளக்க உரைகள் ஓலைகளில் எழுதப்பட்டது. மேலும் முந்தைய பௌத்தப் பிரிவுகளின் தத்துவக் கோட்பாடுகளின் நூல்கள் எழுதப்பட்டது. மேலும் சிலர் இப்பௌத்த மாநாடு கனிஷ்கர் ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாக கூறுகின்றனர்.
சர்வாஸ்திவாத பௌத்த சங்கத்தால் இயற்றப்பட்ட பௌத்த இலக்கியங்கள், மகாயான மரபில் இருந்ததாக அறியப்படுகிறது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ The Fourth Buddhist Council
- ↑ Norman page 10, A History of Indian Literature, Edited by Jan Gonda, Volume VII, 1983, Otto Harrassowitz, Wiesbaden
- ↑ Vasumitra
ஆதார நூற்பட்டியல்
தொகு- Buswell, Robert; Lopez, Donald S. (2013). The Princeton Dictionary of Buddhism. Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-15786-3.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)