முதலாம் பௌத்த சங்கம்
முதல் பௌத்த சங்கம், கௌதம புத்தர் கிமு 483ல் பரிநிர்வாணம் அடைந்த பிறகு, புத்தரின் தலைமைச் சீடரான மகாகாசியபர் தலைமையில் கிமு 543ல் மகதப் பேரரசர் அஜாதசத்ருவின் ஆதரவில், இந்தியாவின் பிகார் மாநிலத்தில் உள்ள ராஜகிரகத்தில் நடைபெற்றது.[1]
முதல் பௌத்த சங்கக் கூட்டத்தில், புத்தரின் முதன்மைச் சீடர்கள் உட்பட ஏறத்தாழ 500 அருகதர்கள் கலந்து கொண்டனர்.[2] முதல் பௌத்த சங்கக் கூட்டத்தில் கௌதம புத்தரின் பல்வேறுபட்ட போதனைகளை சுத்தபிடகம் [3], அபிதம்மபிடகம்[4], மற்றும் விநயபிடகம்[5] என மூன்று தலைப்புகளில் புத்தரின் முதன்மைச் சீடர்களான ஆனந்தர், மகாகாசியபர் மற்று உபாலி ஆகியோர் தொகுத்தனர். இம்மூன்று தொகுப்புகளைச் சேர்த்து திரிபிடகம் என்று அழைப்பர். இதுவே பௌத்தர்களின் மூலமான புனித நூல் ஆகும் [6].
மேலும் பௌத்த விகாரையில் வசிக்கும் பிக்குகள் மற்றும் பிக்குணிகளின் நடத்தைகளை நெறிப்படுத்துவதற்கும் மற்றும் பௌத்த உபாசகர்கள் இல்லற வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய அறங்களையும் நெறிப்படுத்துவதற்குமான விதிகளை வகுப்பதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ The First Buddhist Council
- ↑ The First Buddhist Council[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Sutta Pitaka
- ↑ Abhidhamma Pitaka
- ↑ Vinaya Pitaka
- ↑ "Buddhist Books and Texts: Canon and Canonization." Lewis Lancaster, Encyclopedia of Religion, 2nd edition, pg 1252