நான்கீத்தைலமோனியம் அயோடைடு
நான்கீத்தைலமோனியம் அயோடைடு (Tetraethylammonium iodide) என்பது C8H20N+I−.என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நான்கிணைய அமோனியச் சேர்மமான இது மருந்தியல் மற்றும் உடலியங்கியல் ஆய்வுகளுக்கு அவசியமான நான்கீத்தைலமோனியம் அயனிகளுக்கு ஆதாரமாகப் பயன்படுகிறது. கரிம வேதியியல் தொகுப்பு வினைகளுக்கும் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
N,N,N- டிரையெத்திலீத்தமினியம் அயோடைடு
| |
வேறு பெயர்கள்
தெட்டமோன் அயோடைடு;
| |
இனங்காட்டிகள் | |
68-05-3 | |
ChemSpider | 5990 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6225 |
| |
பண்புகள் | |
C8H20IN | |
வாய்ப்பாட்டு எடை | 257.16 g·mol−1 |
தோற்றம் | நிறமற்றது அல்லது மஞ்சள்நிற படிகத் திண்மம் |
அடர்த்தி | 1.566 கி/செ.மீ3[1] |
உருகுநிலை | 280 °C (536 °F; 553 K) (சிதைவடையும்) |
கரைகிறது | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுமூவெத்திலமைன் மற்றும் எத்தில் அயோடைடு ஆகியனவற்றை வினைபுரியச் செய்து நான்கீத்தைலமோனியம் அயோடைடு தயாரிக்கப்படுகிறது[2]. வணிக ரீதியாகவும் இது விற்பனைக்குக் கிடைக்கிறது.
அமைப்பு
தொகுநான்கீத்தைலமோனியம் அயோடைடின் படிக அமைப்பும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது[3].
செயற்கைப் பயன்பாடுகள்
தொகு- நான்கீத்தைலமோனியம் அயோடைடு முன்னிலையில் ஆல்க்கைன்களுடன் அயோடின் ஒருகுளோரைடு சேர்த்து வினைபுரியச் செய்து ஈரயோடோ ஆல்க்கீன்கள் தயாரிக்கப்படும் முப்பரிமாண தேர்திறன் உருவாக்கத்தில் பயன்படுகிறது[4].
- கார்பாக்சிலிக் அமிலங்களின் எத்திலீன் கார்பனேட்டு மற்றும் அமில N-H குழுக்களைக் கொண்ட வேற்றணு வளையங்கள் வழியாக 2-ஐதராக்சி எத்திலேற்றம் (CH2-CH2-OH இணைதல்) அடைதல் வினை. உதாரணமாக பென்சோயிக் அமிலம் 2- ஐதராக்சி எத்தில் பென்சோயேட்டு எசுத்தராக மாற்றமடையும் வினையைக் குறிப்பிடலாம். நான்கீத்தைலமோனியம் அயோடைடு முன்னிலையில் பென்சோயிக் அமிலத்துடன் எத்திலீன் கார்பனேட்டு சேர்க்கப்பட்டுதான் இம்மாற்றம் நிகழ்கிறது[5]
- புளோரினின் ஓரிடத்த ஈரால்கைலேற்ற வினை, அனிலீனின் N,N- ஈரால்கைலேற்றம் மற்றும் நீர்த்த சோடியம் ஐதராக்சைடு மற்றும் ஆல்க்கைல் ஆலைடுகள் பயன்படுத்தி நிகழும் கார்பசோலின் N ஆல்கைலேற்ற வினை ஆகியவற்றில் தறுவாய் மாற்று வினையூக்கியாகப் பயன்படுகிறது[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ The Merck Index, 10th Ed., p.1316, Rahway: Merck & Co.
- ↑ A. A. Vernon and J. L. Sheard (1948). "The solubility of tetraethylammonium iodide in benzene-ethylene dichloride mixtures." J. Am. Chem. Soc. 70 2035-2036.
- ↑ E. Wait and H. M. Powell (1958). "The crystal and molecular structure of tetraethylammonium iodide." J. Chem. Soc. 1872-1875.
- ↑ N. Hénaff and A. Whiting (2000). "Stereoselective formation of 1,2-diiodoalkenes and their application in the stereoselective synthesis of highly functionalised alkenes via Suzuki and Stille coupling reactions." J. Chem. Soc., Perkin 1 395-400.
- ↑ T.Yoshino et al. (1977). "Synthetic studies with carbonates. Part 6. Syntheses of 2-hydroxyethyl derivatives by reactions of ethylene carbonate with carboxylic acids or heterocycles in the presence of tetraethylammonium halides or under autocatalytic conditions." J. Chem. Soc., Perkin 1 1266-1272.
- ↑ G. Saikia and P. K. Iyer (2010)."Facile C-H alkylation in water: enabling defect-free materials for optoelectronic devices." J. Org. Chem. 75 2714-2717.
.