நாமத சிலுமே
நாமத சிலுமே (Namada Chilume) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் தும்கூருக்கு அருகில் உள்ள தேவராயனதுர்கத்தில் அமைந்துள்ள ஒரு இயற்கை ஊற்று ஆகும். [1] பாறையின் மேற்பரப்பில் அமைந்துள்ள ஒரு சுனையிலிருந்து இந்த நீருற்று வெளியாகிறது. இராமர், சீதை, இலட்சுமணருடன் வனவாசத்தின் போது இங்கு தங்கியதாக செவிவழிக் கதைகள் உள்ளன. இராமர் தன் நெற்றியில் நாமம் பூச நீர் தேடினார் என்றும், தண்ணீர் கிடைக்காததால் பாறையில் அம்பு எய்ய, அந்த அம்பு பாறையை ஊடுருவி, அதனால் ஏற்பட்ட துளை வழியாக தண்ணீர் வெளியேறியது என்கின்றனர். இந்த சுனை கன்னடத்தில் நாமத சிலுமே என்று அழைக்கப்படுகிறது. அதாவது "நாமத்தின் ஊற்று". (நாம = நாமம் மற்றும் சிலுமே = ஊற்று) படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, இங்குள்ள சிறிய துளையிலிருந்து ஆண்டு முழுவதும் நீரூற்று வற்றாமல் உள்ளது. இந்த ஊற்று நீர் புனித நீராக ( தீர்த்தம் ) கருதப்படுகிறது. இது தோராயமாக தும்கூரிலிருந்து 14 ஆகும் கிமீ தொலைவிலும், பெங்களூரில் இருந்து 80 கி.மீ. தொலைவிலும் உள்ளது. [2]
நாமத சிலுமே Namada chilume | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | தும்கூர் |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 572 146 |
தொலைபேசி குறியீடு | 0816 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-KA |
வாகனப் பதிவு | KA-06 |
இணையதளம் | karnataka |