நாமதேவர்

(நாம்தேவ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

துறவி நாம்தேவ் (29 அக்டோபர், 1270 - 1350) (மராத்தி: संत नामदेव) (ஒரு வர்க்காரி வைணவத் துறவி. இவர் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள இங்கோலி மாவட்டத்தில் உள்ள நர்சி-பாமனி என்னும் கிராமத்தில் பிறந்தார். இவருடைய தந்தை தாம்சேட் ஒரு தையற்கலைஞர், இவருடைய தாயார் கோனாபாய்.

நாமதேவர்
நாமதேவர்
பிறப்புகிபி அண். 26 அக்டோபர் 1270
நர்சி-பாமனி, ஹிங்கோலி மாவட்டம், மகாராட்டிரா, இந்தியா
இறப்புகிபி அண். 3 சூலை 1350
பண்டரிபுரம்
சமயம்இந்து சமயம்
தத்துவம்வர்க்காரி, இந்து சமயம் / சீக்கியம்

இவருடைய சமயக்கருத்துக்கள், வாழ்க்கையை வாழும் முறை பற்றியும்(गृहस्थ जीवन), திருமணத்தின் மூலமும் குடும்ப பொறுப்பு ஏற்பதின் மூலமும் ஒருவர் வாழ்க்கையில் தெளிவு பெறலாம் என்னும் கருத்தை வலியுறுத்தின.[1]இவர் பண்டரிபுரத்தில் வாழ்ந்து பகவான் விட்ட்லரின் பெரும் பக்தனாக வாழ்ந்தவர்.[2] விட்டலர் மீது பல பதிகங்களைப் பாடியவர். இவரது பாடல்களில் சில சீக்கியர்களின் குரு கிரந்த் சாகிப் நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. இவரது சீடர்களில் ஒருவர் ஜனாபாய் ஆவார்.

மேற்கோள்கள்தொகு

  1. Namdev By Sri Swami Sivananda
  2. நாமதேவரின் பக்திக்கு வந்த சோதனை!

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாமதேவர்&oldid=3614323" இருந்து மீள்விக்கப்பட்டது