நாம் ஷபானா
நாம் ஷபானா (Naam Shabana (ஆங்கில மொழி: The name is Shabana) என்பது 2017 ஆண்டைய இந்திய அதிரடி உளவாளி திரில்லர் திரைப்படமாகும். இப்படத்தை சிவம் நாயர் இயக்க, நீரஜ் பாண்டே, அருணா பாஷியா ஆகியோர் தயாரித்துள்ளார். இது 2015 ஆம் ஆண்டு திரைப்படமான பேபி படத்தில் டாப்சி பன்னு ஏற்று நடித்த ஷபனா என்னும் பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது.[2] இப்படத்தில் அக்ஷய் குமார் மற்றும் பிரித்விராஜ் சுகுமாரன் ஆகியோர் முக்கிய துணைப் பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.[a][5] இந்தத் திரைப்படம் தெலுங்கு மற்றும்தமிழ் மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 2017 மார்ச் 31 அன்று வெளியிடப்பட்டது. இப்படத்துக்கு நான்தான் ஷபானா எனப் பெயரிடப்பட்டது.[6] பாக்கித்தானில் வெளியாகி ஒரு நாளுக்குப் பிறகு இப்படமானது இந்திய பக்கச் சார்பு நிலை கொண்டதாக தடை செய்யப்பட்டது.[7]
நாம் ஷபானா | |
---|---|
இயக்கம் | சிவம் நாயர் |
தயாரிப்பு |
|
கதை | நீரஜ் பாண்டே |
மூலக்கதை | நீரஜ் பாண்டேவின் 2015 ஆண்டைய திரைப்படமான பேபி படத்தின் பாத்திரமான ஷபானா கான் என்னும் பாத்திரம் |
திரைக்கதை | நீரஜ் பாண்டே |
இசை |
|
நடிப்பு | |
ஒளிப்பதிவு | சுதீர் பலசனா |
படத்தொகுப்பு | பிரவீன் கதிகுலோத் |
கலையகம் |
|
விநியோகம் | ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் |
வெளியீடு | மார்ச்சு 31, 2017 |
ஓட்டம் | 147 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
ஆக்கச்செலவு | ₹25 கோடி (US$3.1 மில்லியன்) |
மொத்த வருவாய் | மதிப்பீடு.₹56.06 கோடி (US$7.0 மில்லியன்)[1] |
கதை
தொகுமும்பையில் ஷபானா கான் (டாப்சி பன்னு) தன் தாயான பார்டா பேகம் கானுடன் (நடாஷா ரஸ்தோகி) வாழ்ந்து வருகிறார். ஷபானா கான் ஒரு கல்லூரி மாணவி மேலும் அவர் ஜூடோ தற்காப்புக்கலையை பயின்றவர். அவரை அவருடன் கல்லூரியில் பயிலும் மாணவரான தாகிர் ஷபீர் மித்தாவாலா (ஜெய்) காதலிப்பதாகக் கூறுகிறார். அதேநேரத்தில் மர்ம நபர் ஒருவர் ஷபானா கானை உளவு பார்த்து, அவர் குறித்த தகவல்களை சேகரிக்கிறார்.
ஒருநாள் ஷபானா கானும், அவரது காதலரான பார்டா பேகம் கானுடன வெளியே செல்லும்போது, அவர்களை ஒரு கும்பல் கிண்டல் செய்கிறது. இதனால் கோபமடையும் ஷபானா கான், அந்த கும்பலுடன் சண்டை போடுகிறாள். இந்த சண்டையின்போது பார்டா பேகம் கானை அந்த கும்பல் கொன்றுவிடுகிறது.
இதனையடுத்து, தன் காதலரைக் கொன்றவர்களைப் பழிவாங்கும் வெறியுடன் ஷபானா கான் காவல் துறையிடம் புகார் அளித்தும் அவர்கள் தீவிரமான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இருப்பது ஷபானா கானுக்கு கவலையை அளிக்கிறது. இந்நிலையில் ஷபானா கானுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அது அவரை உளவு பார்த்த இந்திய உளவாளியான மனோஜ் பாஜ்பாயியின் (ரன்வீர் சிங்) குரல். அவர்,ஷபானா கானுக்கு அவரின் காதலரை கொன்றவர்களை பழிவாங்க உதவுவதாக கூறுகிறார். அவ்வாறு உதவினால் அவர்கள் கொடுக்கும் வேலையை ஷபானா கான் செய்து முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்கிறார்.
இந்த ஒப்பந்ததத்திற்கு சம்மதம் தெரிவிக்கும் ஷபானா கான், அவரிடம் கொலை செய்தவன் தங்கியுள்ள இடத்தினைப் பற்றிய தகவலைப் பெறுகிறார், மேலும் அவர்களை கொலை செய்வதற்காக தேவையான உதவிகளை உளவாளிகள் செய்கிறார்கள். இதற்காக ஷபானா கோவாவுக்குச் செல்கிறார், அங்கு ஒரு விடுதியில் அவரது காதலனை கொன்ற பிரதான குற்றவாளி தங்கியிருந்தார். திட்டப்படி, ஷபனா அந்த அறைக்குள் நுழைந்து அவனைக் கொன்று, பின்னர் அஜய் சிங் (அக்ஷய் குமார்) உதவியுடன் அங்கிருந்து தப்புகிறார். இதையடுத்து ஷபானா கானுக்கு மனோஜ் பாஜ்பாய் கொடுத்த வேலை என்ன? அவர் கொடுத்த வேலையை ஷபானா கான் முடித்தாரா என்பது படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
தொகு- டாப்சி பன்னு - ஷபானா கான்
- அக்ஷய் குமார் - அஜய் சிங் ராஜ்புத் (விரிவான கௌரவத் தோற்றம்)
- பிரித்விராஜ் சுகுமாரன் - டோனி / மைக்கேல்
- மனோஜ் பாஜ்பாயி - ரன்வீர் சிங்
- அனுபம் கெர் - ஓம் பிரகாஷ் சுக்லா
- டேனி டென்சோங்கோ - பெரோஸ் அலி கான்
- அர்ஜூன் சிங் ஷெகாவத் - பிரசாந்த்
- மாதுரிமா துலி - அஞ்சலி சிங் ராஜ்புத்
- முரளி ஷர்மா - குப்தா
- ஜாகிர் உசைன் - அசீம் குப்தா, ஒரு ரா உளவாளி
- புவனோ அரோரா - கரண்
- தாகிர் ஷபீர் மித்தாவாலா - ஜெய்
- நடாஷா ரஸ்தோகி - பார்டா பேகம் கான், ஷபானாவின் தாய்
- மனவ் விஜ் என்னும் ரவி - ரா உளவாளி
- மோகன் கபூர் - கல்லூரி பேராசிரியர்
- எல்லி அவரம் - சோனா, டோனியின் நண்பர் மாலிக்கின் காதலி. (சிறப்புத் தோற்றம்)
- ஷிபனி தண்டேகர் "பாபி பெஷாம்" பாடலில் சிறப்பு தோற்றம்
- விரேந்த் சாக்ஸனா - வடப் பணியாளர்
- ருத்ரன் கோஷ் - அஜய்
- அபர்ணா உபாத்யாய் - ஜெய்யின் தாய்
குறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Hungama, Bollywood (1 April 2017). "Box Office: Worldwide collections and day wise break up of Naam Shabana - Bollywood Hungama". பார்க்கப்பட்ட நாள் 17 April 2017.
- ↑ "'Naam Shabana' is spin-off, not prequel to 'Baby' Taapsee Pannu". DNA India. 15 March 2017.
- ↑ Pandey, Prachita (10 February 2017). "'Naam Shabana' Trailer: Taapsee Pannu DARES to do what no other man does in this action packed film!". DNA India.
- ↑ Shiksha, Shruthi (29 March 2017). "Naam Shabana: Why Akshay Kumar Has Lesser Portions Than Taapsee Pannu In Baby Spin-Off". என்டிடிவி.
- ↑ "Meet 'Naam Shabana's' strong and interesting mix of characters".
- ↑ "Naam Shabana: Taapsee Pannu shares Tamil, Telugu trailers, leaving fans asking for more". இந்தியன் எக்சுபிரசு. 26 February 2017.
- ↑ Jha, Subhash K (Apr 9, 2017). "Now, Naam Shabana banned in Pakistan". Deccan Chronicle. http://www.deccanchronicle.com/entertainment/bollywood/090417/now-naam-shabana-banned-in-pakistan.html.