நாவி அல்லது சைன் (Nai Or Sain), வட இந்தியா, மத்திய இந்தியா மற்றும் மேற்கிந்தியப் பகுதிகளில் முடிதிருத்தும் தொழில் செய்பவர்களைக் குறிப்பிடும் பொதுவான பெயர் ஆகும். இப்பெயர் சமஸ்கிருதச் சொல்லான नापित (நாபிதா) (nāpita) இருந்து பெறப்பட்டதாகும்.[2]நாவி என்பதற்கு பதிலாக, தற்போது வட இந்தியாவில் முடிதிருத்துபவர்களை சைன் எனும் சாதிப் பெயரில் அழைக்கப்படுகிறார்கள்.[3]மாநில அரசுகள் இம்மக்களை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் வைத்துள்ளனர்.

நாவி/சைன்
1870களில் முடிதிருத்தும் நாவி (நாவிதர்)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
  • பஞ்சாப்
  • கோவா
  • மகாராட்டிரம்
  • கர்நாடகா
  • பீகார்
  • உத்தரப் பிரதேசம்
  • ஆந்திரப் பிரதேசம்
  • தெலங்காணா
  • அசாம்
  • சண்டிகர்
  • ஒடிசா
  • குஜராத்
  • மத்தியப் பிரதேசம்
  • நேபாளம்
  • வங்காளதேசம்
  • பாக்கித்தான்
சமயங்கள்

வட இந்தியாவில் இவர்களது மக்கள் தொகை 1,44,06,000 ஆக உள்ளது. இச்சாதியினரில் 99.93% இந்தி மொழி பேசும் இந்துக்கள் ஆவர்[4]

தோற்றம்

தொகு

புராண காலப் பார்வையில்

தொகு

புராணங்களின்படி, நாவிகள் இச்வாகு வம்ச மன்னரான நாபி என்பவரது வழித்தோன்றல்கள் என அறியப்படுகிறது.[5]

பிற பார்வை

தொகு

தமிழ்நாட்டில் முடிதிருத்துபவர்களின் சாதிப் பெயர் நாவிதர் ஆகும். இவர்களில் மருத்துவத் தொழில் செய்பவர்களை அம்பஷ்டன் என்று அழைப்பர்[6]. இவர்களது குடும்ப மூத்த பெண்கள், கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்த்தனர். தற்போது இவர்கள் முடிதிருத்துவதைத் தவிர மருத்துவம் மற்றும் பிரசவம் பார்ப்பதில்லை.

தொழில்

தொகு

இவர்களது பரம்பரைத் தொழிலான முடிதிருத்துவதைத் தவிர திருமணத் தரகர் வேலையும் செய்தனர்.[7][8][9] இச்சாதியினரில் படித்தவர்கள் சேவை மற்றும் வணிகத்திலும் ஈடுபடுகின்றனர்.[10]

புகழ் பெற்றவர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Nai (Sikh traditions) in India
  2. Rangachari, Edgar Thurston (1855-1935) K. "Castes and Tribes of Southern India: Volume VII—T to Z". www.gutenberg.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-05.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  3. Nai (caste system)
  4. Nai (Hindu traditions) in India
  5. Mani, Vettam (1975). Puranic encyclopaedia : a comprehensive dictionary with special reference to the epic and Puranic literature. Robarts - University of Toronto. Delhi : Motilal Banarsidass.
  6. Leslie, Charles M. (1998). Asian Medical Systems: A Comparative Study (in ஆங்கிலம்). Motilal Banarsidass Publishers. p. 38. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1537-7.
  7. K.S Singh (1998). India's communities. Anthropological Survey of India. p. 2550. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-563354-2. Hair-cutting, shaving and match-making are the traditional occupations of the Nai.
  8. Indu Banga, ed. (1997). Five Punjabi Centuries: Policy, Economy, Society, and Culture, C. 1500-1990 : Essays for JS Grewal. Manohar. p. 410. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 817304175X. பிறர் கேட்டுக் கொண்டால், நாவிகள் உரியவர்களுக்கு திருமண அழைப்பிதழ்கள் வழங்குவதுடன் மற்றும் உறவினர்களுக்கு நல்ல நிகழ்வுகளின் செய்திகளைத் தெரிவிப்பார்.
  9. Brij Mohan (2021). Life Lessons from Gitaji on New Society. Notion Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1638326274. A 'Nai' was a trusted marriage match maker and the skill of a good physio-therapist too.
  10. K.S Singh (1998). India's communities. Anthropological Survey of India. p. 2550. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-563354-2. Some are still pursuing their traditional occupation, but the educated among them have taken up various other occupations, such as business and service.
  11. Selections from the Sacred Writings of the Sikhs (in ஆங்கிலம்). Orient Blackswan. 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-250-1790-5.
  12. Grewal, J.S. (2011), "The Sikh Faith and the Khalsa Panth: Chhibber's Bansāvalīnāma", History, Literature, and Identity, Delhi: Oxford University Press, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/acprof:oso/9780198070740.001.0001, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-807074-0, பார்க்கப்பட்ட நாள் 2021-11-05
  13. "एक आम आदमी, जो बना भोजपुरी का शेक्सपियर!". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-11-05.
  14. Singh, Aastha (2019-01-24). "Karpoori Thakur, the other Bihar CM who banned alcohol". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாவி_(சாதி)&oldid=4150996" இலிருந்து மீள்விக்கப்பட்டது