அம்பஷ்டர் (Ambashtha or Ambastha), பண்டைய இந்தியாவில் தோன்றிய வருணக் கலப்பு சாதிகளில் ஒன்று. சுவாயம்பு மனுவின் மனுதரும சாத்திரத்தின்படி, பிராமணத் தந்தைக்கும், வைசியத் தாய்க்கும் பிறந்தவர்களை அம்பஷ்டர் எனும் வகுப்பினர் ஆவார். அம்பஷ்டர்களின் குலத்தொழில் மருத்துவம் பார்த்தல் மற்றும் முக அலங்காரம் செய்தல் ஆகும்.[1][2]தெற்கு பிகாரின் கிராமப்புறங்களில் சித்திரகுப்த வம்ச காயஸ்தர்களின் ஒரு உட்பிரிவினரான அம்பஷ்தர்கள் முக அலங்காரம், மருத்துவம் மற்றும் இரண அறுவை சிகிச்சைத் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.[3][4]அம்பஷ்தன் எனும் பெயர் அவத் இராச்சியத்தின் அமேத் பிரதேசம் அல்லது குல தெய்வமான அம்பாஜியின் பெயரால் வழங்கப்பட்டிருக்கலாம்.[4]அம்பஷ்தர்கள் தொடர்பான வட இந்தியா இனக்குழு காயஸ்தர் மற்றும் தென்னிந்திய இனக்குழுக்கள் மங்களா மற்றும் நாவிதர் ஆவர்.

தொன்மவியல் மற்றும் வர்ண நிலை

தொகு

இருக்கு வேதம் மற்றும் மனுதரும சாத்திரத்தில் பண்டைய இந்திய சமூகத்தை நால்வகை வர்ணத்தவர்களாகப் பிரித்துள்ளது.[1] காலப்போக்கில் இந்த நால்வகை வர்ண சமூகத்தவர்களிடையே திருமண உறவால் பிறந்த குழந்தைகளின் சந்ததியினர் மூலம் கலப்பு சாதிகள் தோன்றியது.

இருபிறப்பாளர்களான பிராமணத் தந்தைக்கும், வைசியத் தாய்க்கும் பிறந்த குழந்தைகளின் சந்ததியினர் அம்பஷ்தர்கள் எனும் கலப்பு சாதியினர் ஆவார். இக்கலப்பு சாதியினரை மனுதரும சாததிரம் அனுலோம சாதியினர் (தீண்டத் தக்கவர் என்று பொருள்) பிரிவில் சேர்த்துள்ளது. இவர்களது தொழில் முக அலங்காரம் செய்தல், மருத்துவம் மற்றும் இரண சிகிச்சை செய்தல் ஆகும். மேலும் அம்பஷ்த சாதி பெண்கள் மகப்பேறு மருத்துவம் செய்வர். [5][6][7]

பராசர சம்ஹிதையில் பிராமண ஆண்களை தீண்டும் உரிமை அம்பஷ்தர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. இதனால் அம்பஷ்த சமூகத்தினரை, பிராமண வர்ணத்திற்கு கீழாகவும், சத்திரியர் வர்ணத்திற்கு மேலாகவும் பராசர சம்ஹிதையில் வைத்துள்ளது. மேலும் அம்பஷ்தர்கள் இருபிறப்பாளர்களாக கருதப்பட்டு, பூணூல் அணியும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. [7]மனுதரும சாத்திரம் அம்பஷ்தர்களை சராசரி வைத்தியர் சாதிகளிடமிருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. வைத்திய சாதியினர் அசுத்தமானவர்கள் என்று கருதப்பட்டு அம்பஸ்தருக்கு வழங்கப்பட்ட சமூக அந்தஸ்து மறுக்கப்பட்டது.[7]

மகாபாரத இதிகாசம், வடமேற்கு இந்தியாவின் லாகூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த அம்பஷ்த மன்னரிடம் 60,000 காலாட் படை, 6,000 குதிரைப்படை வீரர்கள் மற்றும் 500 தேர்ப் படைகள் இருந்தன என்று கூறுகிறது. இம்மன்னரை நகுலன் வென்று, இந்திரப்பிரஸ்தத்தில் தருமன் செய்யும் இராசசூய வேள்விக்கு யானைகள், குதிரைகள், தங்கம், வைரம் போன்ற பொருட்களை பரிசாகப் பெற்று வந்தார். குருச்சேத்திரப் போரில் அம்பஷ்தப் படைகள் முதலில் பாண்டவ அணியில் சேர்ந்து போரிட்டதாகவும், பின்னர் கௌரவர் அணியில் சேர்ந்து துரோணர் தலைமையில் போரிட்டதாக மகாபாரதம் கூறுகிறது. அம்பஷ்தர்கள் சமூகத்தில் முக அலங்காரம், மருத்துவம், இரண சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், கோயில் பூஜை, வேளாண்மைத் தொழில்களில் ஈடுப்பட்டனர். காலப்போக்கில் இச்சமூகத்தினரின் ஒரு குழுவினர் கிழக்கு இந்தியா மற்றும் தென்னிந்தியாவில் குடியேறினர்.[8] தெலுங்கு மொழி பேசும் மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் இச்சமூகத்தினரை மங்களா என்றும், தமிழ்நாட்டில் நாவிதர் என்றும் அழைப்பர்.

காயஸ்தர் சமூகத்தின் பெரிய உட்பிரிவான அம்பஷ்தர் சமூகத்தினர் உள்ளனர். இவர்கள் மருத்துவம் மற்றும் இரண சிகிச்சை மேற்கொண்டனர்.[9][4]

துவக்க மத்தியகால வங்காளம்

தொகு

பிரகத்தர்ம புராணத்தில் அம்பஷ்தர்களையும், வைத்தியர்களையும் ஒரே சமூகமாக கருதினாலும், இச்சமூகத்தில் 36 உட் சாதியினர் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. பிரம்ம வைவர்த்த புராணத்தில் அம்பஷ்தர்களும், வைத்தியர் சாதியினரும் இரண்டு தனி சாதியினராகக் குறித்துள்ளது. சந்திரபிரபா மற்றும் பட்டிடீக்கா நூலாசிரியரான பாரத்மாலிக் (17ஆம் நூற்றான்டு) என்பவர் தன்னை வைத்தியர் மற்றும் அம்பஷ்தர் சமூகத்தைச் சார்ந்தவர் எனக்குறித்துள்ளார். இதனால் மத்திய கால வங்காளத்தில் அம்பஷ்தர் மற்றும் வைத்தியா சாதியினர் ஒரே எனத்தெரிகிறது.[10]

தற்போதைய நிலைமை

தொகு

சித்திரகுப்த வம்ச காயஸ்த சமூகத்தின் உட்பிரிவிவான அம்பஷ்தர்கள் இந்தி மொழி பேசும் உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தில் அதிகம் வாழ்கின்றனர்.[4]

தொடர்புடைய இனக்குழுக்கள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Ridgeon, Lloyd (2003). Major World Religions: From Their Origins To The Present. RoutledgeCurzon. p. 45. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-13442-935-6.
  2. Manu, Patrick Olivelle; Suman Olivelle (2005). Manu's Code of Law. Oxford University Press. p. 208. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19517-146-4.
  3. Gupta, Chitrarekha (1996). The Kāyasthas: a study in the formation and early history of a caste (in ஆங்கிலம்). K.P. Bagchi & Co. p. 60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170741565. But Bihar was not the original homeland of the Ambashthas. The Ambashthas were a famous tribe from Western Punjab and have been mentioned in the Mahabharata.
  4. 4.0 4.1 4.2 4.3 Russell, R.V. (28 September 2020). The Tribes and Castes of the Central Provinces of India, Volume III of IV. Library of Alexandria. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-46558-303-1.
  5. Ghurye, G.S. (1969). Caste and Race in India. p. 85. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788171542055.
  6. Muir, J. The People of India, Their religions and institutions.
  7. 7.0 7.1 7.2 Leslie, Charles M. (1976). Asian Medical Systems: A Comparative Study. University of California Press. p. 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-52003-511-9.
  8. Garg, G.R. (1992). Encyclopaedia of the Hindu World. p. 377. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170223757.
  9. Gupta, Chitrarekha (1996). The Kāyasthas: a study in the formation and early history of a caste (in ஆங்கிலம்). K.P. Bagchi & Co. p. 60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170741565. But Bihar was not the original homeland of the Ambashthas. The Ambashthas were a famous tribe from Western Punjab and have been mentioned in the Mahabharata.
  10. Roy, Niharranjan (1993). Bangalar Itihas:Adiparba (in Bengali), Kolkata:Dey's Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7079-270-3, pp.227,246-7
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பஷ்டன்&oldid=3860466" இலிருந்து மீள்விக்கப்பட்டது