சாகிப் சிங் (சீக்கிய குரு)
சீக்கிய குரு
சாகிப் சிங் (Sahib Singh) (17 ஜூன் 1663-7 டிசம்பர் 1704 அல்லது 1705) பாஞ்ச் பியாரே எனப்படும் “ஐந்து அன்புக்குரியவர்கள்” பட்டியலில் இவரும் ஒருவர். நாவி சாதியில் பிறந்த இவர் முன்பு சாகிப் சந்த் என்றும் அழைக்கப்பட்டார்.
பாய் சாகிப் சிங் Sahib Singh ஜீ | |
---|---|
ਸਾਹਿਬ ਸਿੰਘ | |
பாக்கித்தானின் பஞ்சாப் பகுதியின் அட்டோக்கில் கைவிடப்பட்ட சீக்கிய சமாதியின் உள்ளே வரையப்பட்டிருந்த சாகிப் சிங்கின் ஓவியம். | |
பாஞ்ச் பியாரே | |
பதவியில் 1699 – 1704 or 1705 | |
சுய தரவுகள் | |
பிறப்பு | சாகிப் சாந்த் நை 17 சூன் 1663 பீதர் (நவீன கருநாடகம், இந்தியா) |
இறப்பு | 7 திசம்பர் 1704 அல்லது 1705 சாம்கௌர், பஞ்சாப், இந்தியா |
இறப்பிற்கான காரணம் | களச்சாவு |
சமயம் | சீக்கியம் |
பெற்றோர்கள் |
|
அறியப்படுதல் | தொடக்க பாஞ்ச் பியாரே உறுப்பினர் |
Occupation | முடிதிருத்துபவர் |
Institute | கால்சா |
இவரது பிறப்பிடம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் குறித்து வெவ்வேறு கருத்துகள் உள்ளன. இருப்பினும் இவர் ஒரு முடிதிருத்தும் குடும்பத்தில் பிறந்தார் என்ற உண்மையை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். சாகிப் சிங், பகத் சைனின் மறுபிறவி என்று ஆரம்பகால சீக்கிய இலக்கியங்கள் கூறுகின்றன.[1] இவர் இன்றைய கர்நாடகாவிலுள்ள பீதரில் பிறந்தார் என பலரும் ஏற்றுக்கொள்கின்றனர். பஞ்சாப்பின் ஹோசியார்பூர் மாவட்டத்தில் பிறந்தார் என மகான் கோஷ் கூறுகிறார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Fenech, Louis E. (2021). The Cherished Five in Sikh History. Oxford University Press. pp. 53–54. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780197532843.
- ↑ Fenech, Louis E.; McLeod, W. H., eds. (2014). Historical Dictionary of Sikhism (3rd ed.). Rowman & Littlefield. p. 269. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781442236011. பார்க்கப்பட்ட நாள் 18 March 2017.
மேலும் வாசிக்க
தொகு- Encyclopedia of Sikhism, by Harbans Singh.Published by Punjabi University, Patiala