நிக்கல்(II) நைட்ரேட்டு
நிக்கல்(II) நைட்ரேட்டு (Nickel(II) nitrate) என்பது Ni(NO3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இதைத் தவிர வேறு சில நிக்கல்(II) நைட்ரேட்டு நீரேற்றுகளும் அறியப்படுகின்றன. நிக்கல்(II) நைட்ரேட்டு அறுநீரேற்றில் நைட்ரேட்டு அயனிகள் நிக்கலுடன் பிணைக்கப்பட்டிருக்காது. Ni(NO3)2.9H2O, Ni(NO3)2.4H2O, and Ni(NO3)2.2H2O. ஆகிய நீரேற்றுகளும் அறியப்படுகின்றன.[3]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
நிக்கல்(II) நைட்ரேட்டு
| |
வேறு பெயர்கள்
நிக்கல் நைட்ரேட்டு
நிக்கலசு நைட்ரேட்டு , நிக்கல்(2+) உப்பு | |
இனங்காட்டிகள் | |
13138-45-9 நீரிலி 13478-00-7 அறுநீரேற்று 72937-94-1 நான்கு நீரேற்று (அரிதாக) 16456-84-1 இரண்டாவது நான்கு நீரேற்று (அரிதாக) | |
ChemSpider | 23976 |
EC number | 238-076-4 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 25736 |
| |
UNII | 50L0S38I2D XBT61WLT1J |
UN number | 2725 |
பண்புகள் | |
Ni(NO3)2 | |
வாய்ப்பாட்டு எடை | 182.703 கி/மோல் (அறுநீரேற்று) 290.79 கி/மோல் (அறுநீரேற்று) |
தோற்றம் | மாணிக்கப் பச்சை நீர் உறிஞ்சும் திறன் திண்மம் |
மணம் | நெடியற்றது |
அடர்த்தி | 2.05 கி/செ.மீ3 (அறுநீரேற்று) |
உருகுநிலை | 56.7 °C (134.1 °F; 329.8 K) (அறுநீரேற்று) |
கொதிநிலை | 120–145 °C (248–293 °F; 393–418 K) (அறுநீரேற்று, நிக்கல் நைட்ரேட்டாக சிதைவடையும்[1] |
243 (அறுநீரேற்று) கி/100மி.லி (0 °செல்சியசு)[2] | |
கரைதிறன் | எத்தனால் கரைப்பானில் கரையும் |
+4300.0·10−6 செ.மீ3/மோல் (+6 H2O) | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.422 (அறுநீரேற்று) |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | ஒற்றைச் சரிவச்ச்சு (அறுநீரேற்று) |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H272, H302, H315, H317, H318, H332, H334, H341, H350, H360, H372, H410 | |
P201, P202, P210, P220, P221, P260, P261, P264, P270, P271, P272, P273, P280, P281 | |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
1620 மி.கி/கி.கி (வாய்வழி, எலி) |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | நிக்கல்(II) சல்பேட்டு நிக்கல்(II) குளோரைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | பலேடியம்(II) நைட்ரேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுநிக்கல் ஆக்சைடுடன் நைட்ரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் நிக்கல்(II) நைட்ரேட்டு உருவாகிறது.
- NiO + 2 HNO3 + 5 H2O → Ni(NO3)2.6H2O
நீரற்ற நிக்கல் நைட்ரேட்டை பொதுவாக நீரேற்றுகளை சூடாக்குவதன் மூலம் தயாரிக்க முடிவதில்லை. மாறாக நீரேற்றுடன் டைநைட்ரசன் பெண்டாக்சைடு அல்லது டைநைட்ரசன் டெட்ராக்சைடுடன் நிக்கல் கார்பனைலை சேர்த்து வினைபுரியச் செய்தால் நீரிலி நிலை நிக்கல்(II) நைட்ரேட்டு உருவாக்கப்படுகிறது.
- Ni(CO)4 + 2 N2O4 → Ni(NO3)2 + 2 NO + 4 CO
நீரேற்றப்பட்ட நைட்ரேட்டு பெரும்பாலும் நிக்கல் வினையூக்கிகளுக்கு முன்னோடியாகப் பயன்படுத்தப்படுகிறது.
கட்டமைப்பு
தொகுஆக்சிசனேற்றப்பட்ட ஈந்தணைவிகள் கொண்ட நிக்கல்(II) சேர்மங்கள் பெரும்பாலும் எண்முக ஒருங்கிணைப்பு வடிவவியலைக் கொண்டுள்ளன. இரண்டு பல்லுருவ நான்குநீரேற்றுகள் (Ni(NO3)2.4H2O) படிகமாக்கப்பட்டுள்ளன. ஒரு நான்குநீரேற்றில் ஈதல்பிணைப்பு நைட்ரேட்டு ஈந்தணைவிகள் மாறுபக்கத்திலும் [4] மற்றொன்றில் அவை சிசு எனப்படும் அதேபக்கத்திலும் காணப்படுகின்றன.[5]
பயன்
தொகுநிக்கல்(II) நைட்ரேட்டு முதன்மையாக உலோக நிக்கலின் மின்முலாம் பூசவும் மற்றும் மின்னச்சுத் தகடுகளாக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பன்முக வினையூக்கத்தில், நிக்கல் (II) நைட்ரேட்டு அலுமினாவை செறிவூட்ட பயன்படுத்தப்படுகிறது. வெப்பச்சிதைவின் போது விளையும் பொருள்களில் இரானே நிக்கல் மற்றும் உருசிபரா நிக்கல் வடிவங்கள் கிடைக்கின்றன.[6] ஒரே மாதிரியான வினையூக்க வினையில் அறுநீரேற்று குறுக்கு இணைப்பு வினைகளுக்கு ஒரு முன் வினையூக்கியாகும்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ Pietsch, E. H. E. (1966). Gmelins Handbuch der Anorganischen Chemie, Nickel Teil B 2 (in German) (8th ed.). Weinheim/Bergstr.: Verlag Chemie GmbH. p. 509.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Perry's Chem Eng Handbook, 7th Ed
- ↑ Lascelles, Keith; Morgan, Lindsay G.; Nicholls, David; Beyersmann, Detmar (2005), "Nickel Compounds", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a17_235.pub2
- ↑ Morosin, B.; Haseda, T. (1979). "Crystal Structure of the β Form of Ni(NO3)2.4H2O". Acta Crystallographica Section B: Structural Crystallography and Crystal Chemistry 35 (12): 2856–2858. doi:10.1107/S0567740879010827.
- ↑ Gallezot, P.; Weigel, D.; Prettre, M. (1967). "Structure du Nitrate de Nickel Tétrahydraté". Acta Crystallographica 22 (5): 699–705. doi:10.1107/S0365110X67001392. Bibcode: 1967AcCry..22..699G.
- ↑ Sarko, Christopher R.; Dimare, Marcello; Yus, Miguel; Alonso, Francisco (2014). "Nickel Catalysts (Heterogeneous)". Encyclopedia of Reagents for Organic Synthesis. pp. 1–8. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/047084289X.rn011.pub2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-84289-8.
- ↑ Xiao, Yu-Lan; Zhang, Xingang (2017). "Nickel(II) Nitrate Hexahydrate". Encyclopedia of Reagents for Organic Synthesis. pp. 1–3. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/047084289X.rn02013. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-84289-8.