நிசாமாபாத் கிராமப்புற சட்டமன்றத் தொகுதி

நிசாமாபாத் கிராமப்புற சட்டமன்றத் தொகுதி (Nizamabad Rural Assembly constituency) என்பது இந்தியாவின் தெலங்காணா சட்டப் பேரவையின் ஒரு தொகுதியாகும். 3,22,781 மக்கள்தொகை கொண்ட நிசாமாபாத் நகரின் 2 தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும். இது நிஜாமாபாது மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1]

நிசாமாபாத் கிராமப்புறம்
தெலங்காணா சட்டப் பேரவை, தொகுதி எண் 18
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்நிசாமாபாத் மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்1,94,625
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
3-ஆவது தெலங்காணா சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
ரெகுலபள்ளி பூபதி ரெட்டி
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

இந்தியத் தேசிய காங்கிரசின் ரெகுலபள்ளி பூபதி ரெட்டி தற்போது இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

மண்டலங்கள்

தொகு
 
நிசாமாபாத் நகரின் கிழக்குப் பகுதியில் கங்காசுதான் கட்டம் 1,2 மற்றும் 3 மற்றும் நிஜாமாபாத் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கூட்டமைப்பு ஆகியவை அடங்கும்.

இச்சட்டமன்றத் தொகுதி தற்போது பின்வரும் மண்டலங்களைக் கொண்டுள்ளது:

மண்டல்
நிசாமாபாத் கிராமம்
சக்ரன்பள்ளி
மோபால்
இந்தல்வாய்
சிர்கொண்டா
திச்பல்லே
தார்பள்ளே

நிசாமாபாத் கிராமப் புற சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு

ஒருங்கிணைந்த ஆந்திரப்பிரதேசம்

தொகு
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1952 டி. சிறீனிவாச ராவ் சமூக நீதிக் கட்சி
1978 பால்ரெட்டி அந்தரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
1983 மாண்டவா எம்.ஜே. தாமசு சௌத்ரி தெலுங்கு தேசம் கட்சி
1985 மாண்டவ வெங்கடேசுவர ராவ்
1989
1994
1999
2004 கடம் கங்கா ரெட்டி பாரத் இராட்டிர சமிதி
2008 இடைத்தேர்தல் அகுல லலிதா இந்திய தேசிய காங்கிரசு

தெலங்காணா சட்டமன்றம்

தொகு
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2009 மாண்டவ வெங்கடேசுவர ராவ் தெலுங்கு தேசம் கட்சி
2014 பாஜிரெட்டி கோவர்தன் பாரத் இராட்டிர சமிதி
2018
2023 ரெகுலபள்ளி பூபதி ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு

தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல், 2023

தொகு
2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்: நிசாமாபாத்து கிராமப்புறம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ரெகுலபள்ளி பூபதி ரெட்டி 78,378 40.19
பா.இரா.ச. பஜ்ஜிரெட்டி கோவர்தன் 56,415 28.93
பா.ஜ.க தினேஷ் குமார் குலாசாரி 49,723 25.5
பசக மத்தம்லா சேகார் 2,293 1.18
நோட்டா நோட்டா 2,268 1.16
வாக்கு வித்தியாசம் 21,963 11.26
பதிவான வாக்குகள் 1,95,018
காங்கிரசு gain from பா.இரா.ச. மாற்றம்

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு