நிதிப் புலனாய்வு அலகு
நிதிப் புலனாய்வு அலகு (Financial Intelligence Unit – India (FIU-IND) இந்திய அரசின் நிதி அமைச்சகத்தில் உள்ள வருவாய்த் துறையின் கீழ் இயங்கும் ஒரு புலனாய்வு அமைப்பாகும்.[1]நவம்பர் 2004ல் நிறுவப்பட்ட இந்த அமைப்பு இந்தியாவில் 2002 பணமோசடி தடுப்புச் சட்டத்தை அமலாக்கம் செய்கிறது. இந்த அமைப்பு தனது புலனாய்வு அறிக்கைகளை நேரடியாக நிதி அமைச்சர் தலைமையில் செயல்படும் மத்தியப் பொருளாதார புலனாய்வுக் குழுவிடம் அளிக்கும்.[2]
वित्तीय आसूचना एकक — भारत | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | நவம்பர் 18, 2004 |
வகை | நிதிப் புலனாய்வு அமைப்பு |
ஆட்சி எல்லை | இந்திய அரசு |
நிலை | செயற்பாட்டில் |
தலைமையகம் | கன்னாட்டு பிளேசு, புது தில்லி |
பணியாட்கள் | 75 |
அமைச்சர் | |
அமைப்பு தலைமை |
|
மூல நிறுவனம் | வருவாய்த் துறை |
வலைத்தளம் | fiuindia |
பணிகள்
தொகு- தகவல் சேகரிப்பு: பல்வேறு நிதிப் புலனாய்வு அமைப்புகளிடமிருந்து பின்வரும் அறிக்கைகளைப் பெறுவதற்கான முகமையாக செயல்படுகிறது.
- பண பரிவர்த்தனை அறிக்கைகள்
- இலாப நோக்கற்ற நிறுவனங்களின் பரிவர்த்தனை அறிக்கைகள்
- எல்லை கடந்த தொலைதொடர்பு பணப்பரிமாற்ற அறிக்கைகள்
- அசையா சொத்துக்கள் வாங்குதல் அல்லது விற்றல் பற்றிய அறிக்கைகள்
- சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனை அறிக்கைகள்
- தகவலின் பகுப்பாய்வு: பணமோசடி மற்றும் தொடர்புடைய குற்றங்களின் சந்தேகத்தை பரிந்துரைக்கும் பரிவர்த்தனைகளின் வடிவங்களைக் கண்டறிதல்.
- தகவல் பகிர்வு: நடுவண் புலனாய்வுச் செயலகம் மற்றும் அமலாக்க இயக்குனரகம் அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு நிதி நுண்ணறிவு பிரிவுகளுடன் தகவல்களை பரிமாறிக் கொள்ளல்.
- மத்திய தகவல் களஞ்சியமாக செயல்படுதல்:பிற புலனாய்வு அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் தேசிய தரவுத் தளத்தை பராமரித்தல்.
- ஒருங்கிணைப்பு: பணமோசடி மற்றும் தொடர்புடைய குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு பயனுள்ள தேசிய, பிராந்திய மற்றும் உலகளாவிய வலைப்பின்னல் மூலம் நிதி நுண்ணறிவின் சேகரிப்பு மற்றும் பகிர்வுகளை ஒருங்கிணைத்து வலுப்படுத்துதல்.
- ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு: பணமோசடி போக்குகள், அச்சுக்கலைகள் மற்றும் வளர்ச்சிகள் பற்றிய மூலோபாய முக்கிய பகுதிகளை கண்காணித்து அடையாளம் காணுதல்.
- தப்பியோடிய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்தல்:பண மோசடி செய்து விட்டு வெளிநாடுகளுக்கு தப்பியோடிய பொருளாதாரக் குற்றவளிகள் மீது நடவடிக்கை எடுத்தல்.
அமைப்பு
தொகுஇந்த அமைப்பில் பல்வேறு துறைகளிலிருந்து 75 அதிகாரிகள் அயல் பணியில் செயல்படுகிறார்கள். அவைகள் பின்வருமாறு:
- மத்திய நேரடி வரிகள் வாரியம்
- மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம்
- இந்திய ரிசர்வ் வங்கி
- இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்
- இந்திய சட்ட விவகாரத் துறை
- இந்தியப் புலனாய்வு அமைப்புகள்:
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Scheduled Offences under the PMLA, from FIU-IND website
- ↑ About FIU-IND, from official website இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.