நிபாரன் சந்திர லாசுகர்
நிபாரன் சந்திர லாசுகர் (Nibaran Chandra Laskar) (14 ஜனவரி 1902-25 ஜூன் 1987)[1] ஓர் இந்தியப் பாடகரும், இசைக்கலைஞரும், விளையாட்டு வீரரும், சமூக சேவகரும் , பேராசிரியரும் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்தார். மேலும், 1952 மற்றும் 1957 ஆம் ஆண்டுகளில் அசாமின் கச்சார் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பேராசிரியர் லாசுகர் இந்திய அரசியலமைப்புச் சபையின் உறுப்பினராகவும் இருந்தார்.[2][3][4]
நிபாரன் சந்திர லாசுகர் Nibaran Chandra Laskar | |
---|---|
பேராசிரியர் நிபாரன் சந்திர லாசுகர் | |
இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைஉறுப்பினர் | |
பதவியில் 1952–1962 | |
தொகுதி | கச்சார், அசாம் |
தொகுதி | கச்சார், அசாம் |
இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினர் | |
பதவியில் 9 டிசம்பர் 1946 – 24 ஜனவரி 1902 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நிஸ் புல்பாரி, அசாம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 25 ஜூன் 1987 (வயது 85) சில்சர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | கிருஷ்ணகுமாரி தேவி (திருமணம் 1921) |
பிள்ளைகள் | 9 |
வாழிடம்(s) | புல்பாரி, சில்லொங்கப்பட்டி, சில்சர், அசாம் |
முன்னாள் கல்லூரி | எம்சி கல்லூரி, டாக்கா பலகலைக்கழகம் (முதுகலை) |
ஆரம்பகால வாழ்க்கை.
தொகுநிபாரன் சந்திர லாசுகர் 1902 ஜனவரி 14 அன்று பிறந்தார். டாக்கா பல்கலைக்கழகத்தில் சமசுகிருதம் மற்றும் வங்காள மொழிகளில் இரட்டை முதுகலைப்பட்டத்துடன் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.
தொழில் வாழ்க்கை
தொகுநிபாரன் சந்திர லாசுகர் அசாம் மாநிலத்தில் உள்ள கச்சார் மாவட்டத்தின் முதல் கல்லூரியான குரு சரண் கல்லூரியின் நிறுவனர் பேராசிரியராக இருந்தார். இவர் கச்சார் கல்லூரியின் நிறுவனர் முதல்வராகவும் இருந்தார். பின்னர் 1944இல் அரசியலில் நுழைந்தார்.
அசாம் சட்டப்பேரவைக்கு (1947-1952) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு சபையின் வரைவுக் குழுவில் உறுப்பினராக இருந்தார். பேராசிரியர் முதலாவது மக்களவையில் உறுப்பினராக (1952-1957) இருந்தார். மேலும் இரண்டாவது முறையாக 1957இல் இரண்டாவது மக்களவைக்கு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் 1955-1957 வரை பொதுக் கணக்குக் குழுவில் பணியாற்றினார்.[5]
இந்தியாவின் கச்சார் (சில்சார்) மற்றும் பராக் பள்ளத்தாக்கின் பிற பகுதிகளை தக்கவைத்துக்கொள்வதில் நிபாரன் சந்திர லாசுகர் ஈடுபட்டார், மேலும் இந்தியப் பிரிவினையின் போது இப்பகுதி பாக்கித்தானுடன் (கிழக்கு) இணைவதைத் தடுத்தார். இந்தியாவின் சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் ஆசாதி கா அமிர்த மகோத்சவ் காப்பகம் இவருடைய இந்த பங்களிப்பை ஆவணப்படுத்தியுள்ளது.[6]
மாநில மொழியாக அசாமிய மொழியை மாற்ற அசாம் சட்டப் பேரவை எடுத்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து 1961 ஆம் ஆண்டில் இவர் அரசியலில் இருந்து விலகினார். ஏனெனில் வங்காள மொழி மாநிலத்தின் முக்கிய மொழியாகவும், பராக் பள்ளத்தாக்கின் 90% மக்கள் அதை பேசுபவர்களாகவும் இருந்தனர். 1961 மே 19 அன்று சில்சர் ரயில் நிலையத்தில் அமைதியான போராட்டத்தின் போது காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பேராசிரியர் லாசுகர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டப்பேரவிட்டி விலகினர். அதன்பிறகு இவர் சமூக சேவை மற்றும் தொண்டுப் பணிகளில் ஈடுபட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Nikhil Ranjan Laskar. (2019). Memoirs of life. Vicky publishers.
- ↑ Rāmacandra Kshīrasāgara (1994). Dalit Movement in India and Its Leaders, 1857-1956. M.D. Publications Pvt. Ltd. pp. 257–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85880-43-3. பார்க்கப்பட்ட நாள் 5 March 2019.
- ↑ India. Parliament. Lok Sabha (2003). Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat. p. 272. பார்க்கப்பட்ட நாள் 24 December 2020.
- ↑ Ramesh Chandra (2003). Dalit Identity in the New Millennium: Dalit leaders. Commonwealth Publishers. p. 126. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7169-765-6. பார்க்கப்பட்ட நாள் 24 December 2020.
- ↑ parliament. second lok sabha bio profile.
- ↑ Mahotsav, Amrit. "Freedom Movement in Cachar Valley". Azadi Ka Amrit Mahotsav, Ministry of Culture, Government of India (in English). பார்க்கப்பட்ட நாள் 2024-01-27.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)