நியாமுராகிரா மலை
நியாமுராகிரா மலை (Mount Nyamuragira) கொங்கோ மக்களாட்சிக் குடியரசில் விருங்கா மலைத்தொடரில் உள்ள ஒரு சீறும் எரிமலை ஆகும். இது கிவு ஆற்றில் இருந்து 25 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.
நியாமுராகிரா மலை Mount Nyamuragira | |
---|---|
நியாமுராகிரா (இடது), நியிராகொங்கோ (வலது) | |
உயரம் | 3,058 மீட்டர் (10,033 அடி) |
அமைவு | கொங்கோ மக்களாட்சிக் குடியரசு |
மலைத்தொடர் | விருங்கா மலைகள் |
ஆள்கூறுகள் | 1°24′30″S 29°12′0″E / 1.40833°S 29.20000°E |
வகை | எரிமலை |
கடைசி வெடிப்பு | ஜனவரி 2, 2010 |
ஆப்பிரிக்காவின் சீறும் எரிமலைகளில் இது முதன்மையானதாகக் கருதப்படுகிறது. 1880 ஆம் ஆண்டில் இருந்து இது 30 தடவைக்கு மேல் தீக்கக்கி உள்ளது. இதன் உச்சியில் இருந்து மட்டுமல்லாமல், பக்கவாட்டுகளில் இருந்தும் இவ்வெரிமலை தீக்கக்கியுள்ளது. இப்படியாக பல சிறிய எரிமலைகள் உண்டாகி நாட்போக்கில் அழிந்துள்ளன.
இதன் அருகே 13 கிமீ தெற்கேயுள்ள நியுராகொங்கோ என்ற எரிமலை 2002 ஆம் ஆண்டில் தீக்கக்கியதில் கோமா நகர் பலத்த சேதத்துக்குள்ளாகியது.
நியாமுராகிரா எரிமலை 500 கனமீட்டர் கவவளவுடையது, 1500 சதுர கிமீ பரப்பளவு விஸ்தீரணம் கொண்டது.
2010 வெடிப்பு
தொகு2010 ஜனவரி 2 அதிகாலையில் இவ்வெரிமலை வெடிப்புக் கண்டு பெருமளவு கற்குழம்புகளைக் கக்கியது[1]. அதிலிருது கிளம்பிய எரிமலைக் குழம்புகள் அம்மலையைச் சுற்றியிருந்த விருங்கா தேசியப் பூங்கா வரையில் வந்து வீழ்ந்தன. இதனால் அப்பகுதியில் வாழும் மிக அரிதான சிம்பன்சிகளுக்கு ஆபத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.