நியோடிமியம்(III) நைட்ரைடு

வேதிச் சேர்மம்


நியோடிமியம்(III) நைட்ரைடு (Neodymium(III) nitride) என்பது NdN என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நியோடிமியமும் நைட்ரசனும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. இச்சேர்மத்தில் நியோடிமியம் அணுக்கள் +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையிலும் எஐட்ரசன் அணுக்கள் -3 என்ற ஆக்சிசனேற்ற நிலையிலும் காணப்படுகின்றன. கடோலினியம்(III) நைட்ரைடு, டெர்பியம்(III) நைட்ரைடு மற்றும் டிசிப்ரோசியம்(III) நைட்ரைடு சேர்மங்கள் போன்ற பெர்ரோகாந்தப் பண்பு கொண்ட சேர்மமாகும்.[2] நியோடிமியம்(III) நைட்ரைடு பொதுவாக விகிதவியல் அளவில் இருப்பதில்லை. மேலும் தூய விகிதவியல் அளவில் நியோடிமியம்(III) நைட்ரைடை உருவாக்குவது மிகவும் கடினமாகும்.[3]

நியோடிமியம்(III) நைட்ரைடு
Neodymium(III) nitride
பெயர்கள்
வேறு பெயர்கள்
நியோடிமியம் மோனோநைட்ரைடு, அசானிலிடைன்நியோடிமியம்
இனங்காட்டிகள்
25764-11-8 Y
ChemSpider 105116 Y
EC number 247-246-7
InChI
  • InChI=1S/N.Nd[1]
    Key: OVMJQLNJCSIJCH-UHFFFAOYSA-N[1]
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 117628
  • N#[Nd]
பண்புகள்
NdN
வாய்ப்பாட்டு எடை 158.25 கி/மோல்[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு பாறை உப்பு (கனசதுரம்)
புறவெளித் தொகுதி Fm3m (No. 225)
Lattice constant a = 512.4 பைக்கோமீட்டர்
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் நியோடிமியம்(III) ஆர்சனைடு
நியோடிமியம்(III) பாசுபைடு]]
நியோடிமியம்(III) ஆண்டிமோனைடு
நியோடிமியம் பிசுமுத்தைடு
நியோடிமியம்(III) ஆக்சைடு
ஏனைய நேர் மின்அயனிகள் PrN
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

இலித்தியம் நைட்ரைடு மற்றும் நீரற்ற நியோடிமியம்(III) குளோரைடு ஆகியவற்றுக்கு இடையேயான வெப்பவுமிழ் அணுப்பரிமாற்ற வினையின் மூலம் நியோடிமியம்(III) நைட்ரைடு தயாரிக்கப்படுகிறது. வினையில் உருவாகும் இலித்தியம் குளோரைடை டெட்ரா ஐதரோ பியூரானில் கரைத்து நீக்கப்படுகிறது.[4]

NdCl3 + Li3N → NdN + 3 LiCl

நியோடிமியம் நேரடியாக நைட்ரசனுடன் வினைபுரிவதாலும் நியோடிமியம்(III) நைட்ரைடு உருவாகிறது.

2 Nd + N2 → 2 NdN

நியோடிமியம் அமைடை வேதிச் சிதைவுக்கு உட்படுத்தியும் நியோடிமியம்(III) நைட்ரைடை தயாரிக்கலாம்.

Nd(NH2)3 → NdN + N2 + 3H2

நியோடிமியத்தை காற்றில் பற்ற வைக்கும்போதும் நியோடிமியம்(III) நைட்ரைடு உருவாகிறது. காற்றில் உள்ள நைட்ரசன் வாயு இவ்வினையில் பங்கேற்கிறது.[5] ஆனால் வினையில் நியோடிமியம் ஆக்சைடு போன்ற பிற வேதிப்பொருள்களும் உருவாகும்.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Neodymium nitride (NDN)".
  2. Temmerman, W. M. (2009). "Chapter 241: The Dual, Localized or Band‐Like, Character of the 4f‐States". In Gschneider Jr., K. A. (ed.). Handbook on the Physics and Chemistry of Rare Earths vol 39. Elsevier. pp. 100–110. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-53221-3.
  3. Nasirpouri, Farzad and Nogaret, Alain (eds.) (2011) Nanomagnetism and Spintronics: Fabrication, Materials, Characterization and Applications. World Scientific. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789814273053
  4. Fitzmaurice, J.C.; Hector, A.; Rowley, A.T.; Parkin, I.P. (1994). "Rapid, low energy synthesis of lanthanide nitrides". Polyhedron (Elsevier BV) 13 (2): 235–240. doi:10.1016/s0277-5387(00)86597-3. பன்னாட்டுத் தர தொடர் எண்:0277-5387. https://archive.org/details/sim_polyhedron_1994-01_13_2/page/235. 
  5. Cotton, Simon (2006). Lanthanide and Actinide Chemistry. John Wiley & Sons Ltd.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியோடிமியம்(III)_நைட்ரைடு&oldid=3962995" இலிருந்து மீள்விக்கப்பட்டது