கடோலினியம்(III) நைட்ரைடு

வேதிச் சேர்மம்

கடோலினியம்(III) நைட்ரைடு (Gadolinium(III) nitride) என்பது GdN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிமச் சேர்மம் ஆகும். கடோலினியமும் நைட்ரசனும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[2][3]

கடோலினியம்(III) நைட்ரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அசானிலைடைன்கடோலினியம்
வேறு பெயர்கள்
கடோலினியம் மோனோநைட்ரைடு
இனங்காட்டிகள்
25764-15-2
EC number 247-250-9
InChI
  • InChI=1S/Gd.N
    Key: FLATXDRVRRDFBZ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 117632
  • [Gd]#N
பண்புகள்
GdN
வாய்ப்பாட்டு எடை 171.26 g·mol−1
தோற்றம் கருப்பு நிறத்தூள்
அடர்த்தி 9.10 கி/செ,மீ3[1]
உருகுநிலை 2,360 °C (4,280 °F; 2,630 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

1600 ° செல்சியசு வெப்பநிலை மற்றும் 1300 வளிமண்டல அழுத்தத்தில் கடோலினியம் உலோகமும் நைட்ரசன் வாயுவிம் நேரடியாக சேர்ந்து வினை புரிவதன் மூலம் கடோலினியம்(III) நைட்ரைடு உருவாகும்.[4]

2Gd + N2 → 2GdN

பண்புகள்

தொகு

இயற்பியல் பண்புகள்

தொகு

கடோலினியம்(III) நைட்ரைடு ஒரு கருப்பு நிறத்தூளாக உருவாகிறது..[5][6] F3m3 இடக்குழுவில்[7] சோடியம் குளோரைடு உருவொத்த கட்டமைப்பை ஏற்றுக் கொண்டுள்ளது.[8]

வேதிப் பண்புகள்

தொகு

கடோலினியம்(III) நைட்ரைடு சேர்மம் ஈரப்பதமான காற்றில் நீராற்பகுப்பு வினைக்கு உட்பட்டு கடோலினியம்(III) ஐதராக்சைடையும் அம்மோனியாவையும் உருவாக்குகிறது.[9] இது தண்ணீரில் கரையாது ஆனால் அமிலங்களில் கரையும்.[10]

பயன்கள்

தொகு

கடோலினியம்(III) நைட்ரைடு குறைக்கடத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது.[11] ஒரு காந்தப் பொருளாகவும், இரசாயன வினைகளில் ஒரு வினையூக்கியாகவும், கதிர்வீச்சுக் கண்டறிவாளர்களுக்கான நியூட்ரான் மாற்றிகளில் ஓர் அங்கமாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.[10]

மேற்கோள்கள்

தொகு
  1. Haynes, William M. (22 June 2016). CRC Handbook of Chemistry and Physics (in ஆங்கிலம்). CRC Press. pp. 4–63. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4987-5429-3. பார்க்கப்பட்ட நாள் 6 February 2024.
  2. "Gadolinium(III) Nitride GdN" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 6 February 2024.
  3. Yaws, Carl L. (20 June 2014). Thermophysical Properties of Chemicals and Hydrocarbons (in ஆங்கிலம்). William Andrew. p. 358. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-323-29060-9. பார்க்கப்பட்ட நாள் 6 February 2024.
  4. Li, D. X.; Haga, Y.; Shida, H.; Suzuki, T. (2 April 1994). "Magnetic properties of ferromagnetic GdN". Physica B: Condensed Matter 199-200: 631–633. doi:10.1016/0921-4526(94)91928-3. பன்னாட்டுத் தர தொடர் எண்:0921-4526. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0921452694919283. பார்த்த நாள்: 6 February 2024. 
  5. "Gadolinium(III) nitride, 99.5% (REO), Thermo Scientific Chemicals | Fisher Scientific". Fischer Scientific. பார்க்கப்பட்ட நாள் 6 February 2024.
  6. "Gadolinium (III) Nitride Powder (GdN) (CAS No. 25764-15-2)" (in ஆங்கிலம்). samaterials.com. பார்க்கப்பட்ட நாள் 6 February 2024.
  7. Standard X-ray Diffraction Powder Patterns (in ஆங்கிலம்). U.S. Department of Commerce, National Bureau of Standards. 1953. p. 57. பார்க்கப்பட்ட நாள் 6 February 2024.
  8. Perry, Dale L. (19 April 2016). Handbook of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 181. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-1462-8. பார்க்கப்பட்ட நாள் 6 February 2024.
  9. "Gadolinium Nitride Powder, GdN, CAS 25764-15-2 - Heeger Materials" (in அமெரிக்க ஆங்கிலம்). Heeger Materials Inc. பார்க்கப்பட்ட நாள் 6 February 2024.
  10. 10.0 10.1 "Gadolinium Nitride Powder GdN, CAS No 25764-15-2" (in ஆங்கிலம்). CG MATERIAL. பார்க்கப்பட்ட நாள் 6 February 2024.
  11. O'Bannon, Loran (6 December 2012). Dictionary of Ceramic Science and Engineering (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 115. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4613-2655-7. பார்க்கப்பட்ட நாள் 6 February 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடோலினியம்(III)_நைட்ரைடு&oldid=3908440" இலிருந்து மீள்விக்கப்பட்டது