நிரங்காரிகள்


நிரங்காரிகள் (Nirankari) (பஞ்சாபி: ਨਿਰੰਕਾਰੀ, இந்தி: निरंकारी உருவமற்ற இறைக் கொள்கை உடைய சீர்திருத்த கருத்துக்கள் கொண்ட சீக்கிய சமயத்தின் ஒரு உட்பிரிவினர் ஆவார்.[1]

நிரங்காரிகள்
உருவாக்கம்1890
ஆட்சி மொழி
பஞ்சாபி
தலைவர்நிரங்காரி

தோற்றம்தொகு

குரு நானக்கின் போதனை அடிப்படையில் உருவான, பாபா தயாள் சிங்கின் கருத்துக்களை தொகுத்து பாபா தர்பார் சிங் என்பவர் தற்கால பாகிஸ்தானின் இராவல்பிண்டி நகரத்தில் நிரங்காரி சீக்கியப் பிரிவை உருவாக்கினார். நிரங்காரி சீக்கிய சமய பிரிவின் தலைவரான சாகிப் இரத்தாஜி (1870-1909) காலத்தில் சில ஆயிரம் நிரங்காரிகள் இருந்தனர்.[2]

பிரிட்டிஷ் ராஜ் காலத்தில் நிரங்காரி சீக்கிய பிரிவினர்கள் ஓரங்கட்டப்பட்டனர். நிரங்காரிகளால் 1929இல் சந்த் நிரங்காரி இயக்கம் துவக்கப்பட்டது. குரு கிரந்த் சாகிப்பிற்குப் பின்னர், தற்போது வாழும் சீக்கிய குருவின் மீது நிரங்காரிகள் நம்பிக்கை வைத்தனர். நிரங்காரிகள் இதனை தங்களுக்கென தனிப்பட்ட சிறப்பான ஆன்மீக இயக்கமாக வளர்த்தனர். 1947 இந்தியப் பிரிவினையின் போது இராவல்பிண்டியில் இருந்த நிரங்காரிகளின் தலைமையகம் பாகிஸ்தான் நாட்டவர்களால் சிதைக்கப்பட்டதால், நிரங்காரிகளின் தலைமையகத்தை விடுதலை இந்தியாவில் நிறுவினர்.

வரலாறுதொகு

சீக்கியப் பேரரசர் ரஞ்சித் சிங் ஆட்சி காலத்தில், பஞ்சாப் பகுதியின் வடமேற்கு பகுதியில் வாழ்ந்த சீக்கியர்கள், குரு கிரந்த சாகிப்பை மீள்நோக்கு முகமாக, குரு நானக்கின் உபதேசங்களின் அடிப்படையிலும் மற்றும் பாபா தயாள் சிங்கின் கருத்துகளின் தொகுப்பின் அடிப்படையிலும், பாபா தர்பாரா சிங் என்பவரால் நிரங்காரி சீக்கிய சமயப் பிரிவு ராவல்பிண்டியில் 1890களில் தோற்றுவிக்கப்பட்டது. பின்னர் சாகிப் இரத்தாஜி என்பவர் நிரங்காரி இயக்கத்தில் கால்சா உணர்வை முன்னிறுத்தினார்.

நிரங்காரிகளின் நான்காம் குருவான் பாபா குர்தித் சிங் காலத்தில், சில நிரங்காரிகள் சீக்கிய சபா இயக்கத்தில் ஆர்வம் கொண்டனர். சீக்கியத் திருமணங்களின் போது நடைபெறும் பொதுவான சடங்குகளில் எழும் ஐயங்களை நீக்கும் 1909ஆம் ஆண்டு ஆனந்த் திருமணச் சட்டத்திற்கு சீக்கிய நிரங்காரி பிரிவினர் ஆதரித்தனர். [3]

குரு நானக்கின் உபதேசங்களில் பற்று கொண்ட நிரங்காரி இயக்கத்தின் ஐந்தாம் குருவான சாகிப் ஹர சிங் (1877-1971), தங்கள் நிரங்காரி இயக்கத்தை சீக்கியர்களிடையே அங்கீகாரம் பெற பாடுபட்டார். பின்னர் நிரங்காரிகளிடையே உண்மையான நிரங்காரிகள் என்றும் சந்த் நிரங்காரி இயக்கம் என இரண்டாக பிளவு பட்டது. வாழும் குருவை போற்றிய சந்த் நிரங்காரி இயக்கத்தை, 1978ஆம் ஆண்டில் அகால் தக்த் அவையால் சீக்கிய சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டது.

பின்பற்றுபவர்கள்தொகு

1891-ஆம் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 14,001 இந்துக்கள் மற்றும் 46,610 சீக்கியர்கள் நிரங்காரி சீக்கிய சமயத்தை பின்பற்றினார்கள்.[4]

கொள்கைகள்தொகு

  1. உருவமற்ற இறைவனை வழிபடுதல்.
  2. உருவமுடைய தெய்வங்களை ஒதுக்கி வைத்தல்.
  3. வேத சடங்குகள், விழாக்கள் மற்றும் நம்பிக்கைகளை மறுத்தல். எடுத்துக்காட்டாக தீர்த்த யாத்திரை மேற்கொள்வதை மறுத்தல்; இறந்தவர் உடலை இந்துக்கள் போன்று எரிக்காமலும்; இசுலாமியர் போன்று புதைக்காமலும், ஆற்றில் எறிந்துவிடுவார்கள்.
  4. மாமிசம், மது, புகையிலைப் பொருட்களை மறுத்தல்
  5. ஜோதிடம் பார்பதை மறுத்தல்.

மேற்கோள்கள்தொகு

  1. "Nirankari". Encyclopedia Britannica. 20 December 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. McLeod, W.H. Textual Sources for the Study of Sikhism Manchester University Press ND, 1984
  3. THE ANAND MARRIAGE ACT, 1909[தொடர்பிழந்த இணைப்பு]
  4. (Census of India, 1891, Vol.XX, and vol.XXI, The Punjab and its Feudatories, by Sir Edward Douglas MacLagan, Part II and III, Calcutta, 1892, pp. & 826–9 and pp.& 572–3.)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிரங்காரிகள்&oldid=3218549" இருந்து மீள்விக்கப்பட்டது