நிர்மலா ஜோஷி

அருட்சகோதரி நிர்மலா, என்றும் பரவலாக அறியப்படும் நிர்மலா ஜோஷி, பி.ப.(M.C.) (23 சூலை 1934 – 23 சூன் 2015), என்பவர் நோபல் பரிசு பெற்ற அன்னை தெரேசாவை அடுத்து, பிறரன்புப் பணியாளர் அமைப்பிற்குத் தலைமை வகித்து பன்னாடுகளுக்கு இவ்வமைப்பை எடுத்துச் சென்ற ஓர் கத்தோலிக்க அருட்சகோதரி ஆவார்.[1][2] 1997-இல் அன்னை தெரேசாவின் இறப்பிற்குப் பின், நிர்மலா அவர்கள் அமைப்பின் தலைமையை ஏற்ற பின்னர், ஆப்கானித்தான், இசுரேல், தாய்லாந்து போன்ற நாடுகளில் அமைப்பு மையங்களைத் துவக்கி, இவ்வமைப்பின் நீட்சியை 134 நாடுகளுக்கு எடுத்துச் சென்றார்.

அருட்சகோதரி நிர்மலா ஜோஷி, பி.ப.
சால்ட் + லைட் தொலைக்காட்சியின் விட்னஸ் நிகழ்ச்சியில் அருட்சகோதரி நிர்மலா
பதவிமடத்தலைவர்
சுய தரவுகள்
பிறப்பு(1934-07-23)23 சூலை 1934
சியாங்ஜா, நேபாளம்
இறப்பு23 சூன் 2015(2015-06-23) (அகவை 80)
சமயம்இந்துத்துவம் (1934-1958), கத்தோலிக்கம் (1958-2015)
தேசியம்இந்தியன்
Alma materஅரசறிவியலில் முதுநிலைப் பட்டம், சட்டத் துறையில் முனைவர்
பதவிகள்
பதவிக்காலம்1997-2009
முன் இருந்தவர்அன்னை தெரேசா
பின் வந்தவர்மேரி பிரேமா பியெரிக்

வாழ்க்கை வரலாறு தொகு

வாழ்க்கைப் போக்கும் பணியும் தொகு

நிர்மலா ஜோஷி (முன்னர்: குசும்), 1934 சூலை 23[3] அன்று ரெக்மி கிராமம், நேபாளம், சியாங்ஜாவில் ஒரு பிராமணக் குடும்பத்தில், பத்துக் குழந்தைகளுள் மூத்தவராகப் பிறந்தார்.[4][5][6] அவரது தந்தை ஆங்கிலேய இந்தியப் படையில், 1947-இல் நாடு விடுதலையடையும் வரை அதிகாரியாகப் பணிபுரிந்தார்.[6] நிர்மலாவிற்கு ஒரு வயது ஆன நிலையில், அவரது தந்தை அவரது குடும்பத்தை இந்தியாவிற்கு அழைத்து வந்தார். இந்துக் குடும்பத்தில் பிறந்திருந்தபோதும், ஹசாரிபாக்கில் உள்ள, கார்மல் மலை கிறித்துவப் பணியாளர்களிடம் கல்வி பயின்றார். அச்சமயம் அவர் அன்னை தெரேசாவின் அறப்பணி குறித்துக் கேள்விபட்டு, அதில் தானும் பங்குபெற விழைந்தார். விரைவில் கத்தோலிக்கத்திற்கு மதம் மாறி, அன்னை தெரேசா நிறுவியிருந்த பிறரன்பு பணியாளர் அமைப்பில் இணைந்தார்.[7] அவர் அரசறிவியலில் முதுநிலை பட்டம் பெற்று, பின்னர் சட்டத் துறையில், கொல்க்கத்தா பல்கலைக்கழகத்திடம் முனைவர் பட்டம் பெற்றார்.[4][8] பனாமாவில் பணி மேற்கொண்டபோது வெளிநாட்டில் பணி புரிந்த முதல் சில அருட்சகோதரிகளுள் ஒருவரானார். 1976-இல் அவர் பிறரன்பு பணியாளர் அமைப்பின் சிந்தனை நிலை கிளையினைத் துவங்கி, 1997-இல் நிறுவனத்தின் அடுத்த மடத்தலைவராக அன்னை தெரேசாவைத் தொடர்ந்து பணி மேற்கொள்ளும் வரை, தலைமை வகித்தார்.[8]

நாட்டிற்காக அருட்சகோதரி நிர்மலா ஆற்றிய சேவையைப் பாராட்டி, இந்திய அரசு, நாட்டின் இரண்டாவது உயரிய குடிமை விருதான, பத்ம விபூசணை அவருக்கு 2009-ஆம் ஆண்டு, குடியரசு தினத்தில் (ஜன 26) வழங்கியது.[9][10] மடத்தலைவராக அவர் மார்ச் 25, 2009 வரை தொடர்ந்தார். அவரைத் தொடர்ந்து, ஜெர்மனியில் பிறந்த அருட்சகோதரி மேரி பிரேமா பியெரிக் மடத்தலைமை ஏற்றார்[6]

இறப்பு தொகு

நிர்மலா சூன் 23, 2015-இல், கொல்கத்தாவில், இதயக் கோளாறினால் இறந்தார்.[11] பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல இந்திய தலைவர்களும் அவரது இறப்பிற்குத் தங்கள் இரங்கல்களைத் தெரிவித்தனர்.[12]

சான்றாதாரங்கள் தொகு

  1. Asianews
  2. "Letter to Coworkers". Archived from the original on 3 மார்ச்சு 2016. பார்க்கப்பட்ட நாள் 4 சனவரி 2016.
  3. [1]
  4. 4.0 4.1 "We are 'little pencils' in God's hand". Eternal World Television Network. 2015. Archived from the original on 13 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 24 சூன் 2015.
  5. "Sister Nirmala is no more". Indian Express. 24 சூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 24 சூன் 2015.
  6. 6.0 6.1 6.2 "Sister Nirmala Bio". Celebs Bio. 2015. Archived from the original on 24 ஜூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 24 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "How India remembers Mother Teresa". Catholic Archdiocese of மெல்பேர்ண். Archived from the original on 29 ஜூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 11 September 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
  8. 8.0 8.1 "Indian-born nun to succeed Mother Teresa". CNN. 13 மார்ச்சு 1997. பார்க்கப்பட்ட நாள் 3 ஆகத்து 2014.
  9. "Padma Awards Directory (1954–2013)" (PDF). உள்துறை அமைச்சு. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 4 சனவரி 2016.
  10. "Padma Vibhushan". Archived from the original on 26 ஏப்பிரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 சனவரி 2016.
  11. "Sister Nirmala passes away - The Times of India". பார்க்கப்பட்ட நாள் 23 சூன் 2015.
  12. "Mother Teresa's Successor, Sister Nirmala Joshi, Dies at 81". பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2015.

வெளி இணைப்புகள் தொகு

கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
அன்னை தெரேசா
பிறரன்பு பணியாளர் அமைப்பின்
மடத்தலைவர்

1997–2009
பின்னர்
அருட்சகோதரி மேரி பிரேமா பியெரிக்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிர்மலா_ஜோஷி&oldid=3560759" இலிருந்து மீள்விக்கப்பட்டது