நில அளவாய்வாளர் சக்கரம்

நில அளவாய்வாளர் சக்கரம் (surveyor's wheel) என்பது துாரத்தை அளக்க உதவும் இயந்திரமாகும்.

நில அளவாய்வாளர் சக்கரம்

வரலாறு

தொகு
 
18 ஆம் நுாற்றாண்டில் இங்கிலாந்தில் சாலைகள் அமைத்த சான் மெட்கால்வ் என்ற கட்டடப் பொறியாளர் நில அளவாய்வாளர் சக்கரத்துடன் அமர்ந்திருக்கும் படம்.

ஓட்ட அளவி (odometer) கண்டுபிடிக்கப்பட்டதற்கும், நில அளவாய்வாளர் சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டதற்கும் நேரடியாக தொடர்புள்ளது. நில அளவாய்வாளர் சக்கரம் துாரத்தை அளக்கவும், ஓட்ட அளவி, வாகனங்கள் கடந்த துாரத்தை அளக்கவும் உதவுகிறது. ஆரம்ப காலத்தில் ஓட்ட அளவியின் பல பாகங்கள், நில அளவாய்வாளர் சக்கரம் உருவாக்க பயன்பட்டது.

17ஆம் நூற்றாண்டில் நில அளவாய்வாளர் சக்கரம் துாரத்தை அளக்க பயன்படுத்தப்பட்டது. இவ்இயந்திரத்தில் கைப்பிடியுடன் கூடிய ஒரு சக்கரம் இணைக்கப்பட்டுள்ளது. நடக்கும் ஒரு நபர் இவ்இயந்திரத்தை தள்ளியோ, இழுத்தோ இயக்க இயலும். ஆரம்ப காலத்தில் இரும்புச் சட்டம் பொருத்தப்பட்ட மரச் சக்கரங்களே பயன்படுத்தப்பட்டது. பின்னர் சுமை வண்டியில் பயன்படுத்தப்படும் சக்கரங்கள் பொருத்தப்பட்டது. அறிவியல் கருவிகளை உருவாக்கும் நிறுவனங்களே, துாரத்தை அளக்கும் இயந்திரத்தை உருவாக்கி, அதை சக்கரத்துடன் இணைக்கிறது. சில நேரங்களில் இரண்டு சக்கரங்களுடன் கூடிய நில அளவாய்வாளர் சக்கரமும் பயன்படுத்தப்படுகிறது.

1827 ஆம் ஆண்டு பிரான்சிசு ரொனால்ட்சு (Francis Ronalds) என்பவர் நில அளவாய்வு துாரத்தை வரைகலையுடன் இணைத்து பதிவு செய்யும் இயந்திரத்தை கண்டறிந்தார்.[1] நவீன நில அளவாய்வாளர் சக்கரங்கள் அலுமினியம் என்ற உலோகத்தினால் செய்யப்பட்டு, காற்றடைத்த இரப்பர் சக்கரங்களைப் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை மடித்து வைப்பதோ, நிறுத்தி வைப்பதோ எளிது.

நில அளவாய்வாளர் சக்கரம் செயல்படும் விதம்

தொகு
 
நில அளவாய்வாளர் சக்கரம் அளப்பதை விளக்கும் படம்

நில அளவாய்வாளர் சக்கரத்தில், ஒரு தொடக்கப் புள்ளியிலிருந்து தொடங்கி சிறிது சிறிதாக அளவுகள் குறிப்பிடப்பட்டிருக்கும். தொடக்கப் புள்ளியிலிருந்து, தற்போதுள்ள புள்ளி வரையுள்ள சுழற்சி பகுதியே அளவிடப்படுகிறது. சக்கரம் முழு சுழற்சியை முடிக்கும் போது, (அதாவது 3600 சுழற்சி) கடக்கும் தூரம், அதன் சுற்றளவு ஆகும். சக்கரம் கடந்த தூரம் என்பது சுற்றளவையும் சுழற்சிப் பகுதியையும் பெருக்குவதால் வரும் அளவாகும். படத்தின் வலப்புறத்தில், நீல நிறத்தில் இருப்பது தொடக்கப் புள்ளியாகும். இந்த சுழற்சியில் சக்கரம்   ரேடியன் கோணம் அல்லது 1350 கோணம் அல்லது முழு சுழற்சியில்   பகுதி உள்ளது.

நில அளவாய்வாளர் சக்கரத்தின் பயன்கள்

தொகு
  • நில அளவாய்வாளர் சக்கரம் என்பது சுழற்சி மூலம் தூரத்தை அளக்கும் இயந்திரமாகும். இது தூரத்தை நேரடியாக மீட்டர் என்ற அளவால் அளக்கிறது. எவ்விதமான நிலப்பகுதியையும் இதனால் அளக்க இயலும்.
  • நில அளவாய்வாளர் சக்கரம் சாலைகளை அமைப்பதிலும், விவசாய நிலங்களை அளப்பதிலும் பயன்படுகிறது.
  • கிடைமட்டமாகவே நில அளவாய்வாளர் சக்கரம் அளப்பதால், மேடுபள்ளமுள்ள நிலத்தில் அளக்கும் தூரம், உண்மையான தூரத்தை விட குறைவாகவே இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Ronalds, B.F. (2016). Sir Francis Ronalds: Father of the Electric Telegraph. London: Imperial College Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-78326-917-4.
  1. Gerard L'E. Turner, Nineteenth Century Scientific Instruments, Sotheby Publications, 1983, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85667-170-3
  2. Gerard L'E. Turner, Antique Scientific Instruments, Blandford Press Ltd. 1980, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7137-1068-3

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நில_அளவாய்வாளர்_சக்கரம்&oldid=3502690" இலிருந்து மீள்விக்கப்பட்டது