நிவேதிதா மேனன்
நிவேதிதா மேனன் (Nivedita Menon) ஓர் இந்திய பெண்ணிய எழுத்தாளரும் தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அரசியல் சிந்தனை பேராசிரியரும் ஆவார்.[1] இவர் முன்பு லேடி ஸ்ரீ ராம் கல்லூரியிலும், தில்லி பல்கலைக்கழகத்திலும் அரசியல் அறிவியல் துறையில் கற்பித்தார். அணுசக்தி மற்றும் காஷ்மீர் பிரச்சினை உள்ளிட்ட பல அரசியல் விஷயங்களில் இவர் வலுவான நிலைப்பாடுகளுக்கு பெயர் பெற்றவர்.
நிவேதிதா மேனன் | |
---|---|
2015 மே மாதத்தில் நிவேதிதா மேனன் | |
தேசியம் | இந்தியா |
பணி | எழுத்தாளர், பேராசிரியர் |
அறிவார்ந்த தொழில்
தொகுநிவேதிதா மேனன் ஒரு பெண்ணிய அறிஞர் ஆவார். இவர் 2009 முதல் தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் [2][3][4] சேருவதற்கு முன்பு இவர் லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் 15 ஆண்டுகள் ஆசிரியராகவும், தில்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையிலும் ஏழு ஆண்டுகள் ஆசிரியராகவும் இருந்தார். மேனன் கூறுகையில், கல்லூரியில் தான் வெளிப்படுத்தப்பட்ட இந்திய பெண்ணிய இயக்கம், அத்துடன் உலகளாவிய பெண்ணியவாதிகளின் எழுத்துக்கள், பாலியல் மற்றும் அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக ஒரு சிறந்த நனவை உருவாக்க உதவியது. பெட்டி பிரீடன், ஜெர்மைன் கிரீர், குளோரியா இசுடீனெம் போன்ற உலகளாவிய பெண்ணியவாதிகளின் பணியால் இவர் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளார்.
இவர், பெண்ணியம் மற்றும் அரசியல் பற்றி பல புத்தகங்களை எழுதி அல்லது வெளியிட்டுள்ளார்.[5] ஆங்கில ஆய்விதழான எக்னாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி, இணையவழி செய்தி வலைப்பதிவு kafila.org போன்ற பல செய்தித்தாள்களிலும் தற்போதைய பிரச்சினைகள் குறித்து எழுதுகிறார்.[6][7]
தேர்ந்தெடுக்கப்பட்டப் படைப்புகள்
தொகுவிருதுகள்
தொகு1994 ஆம் ஆண்டில், இந்தி மற்றும் மலையாளத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததற்காக நிவேதிதா மேனன் ஏ.கே. இராமானுஜன் விருதை (கதாவால் நிறுவப்பட்டது) வென்றார் [13]
மேற்கோள்கள்
தொகு- ↑ Dixit, Neha. "The Instigator: A Portrait of Nivedita Menon - The Wire". thewire.in. பார்க்கப்பட்ட நாள் 2016-10-18.
- ↑ Menon, Nivedita (1970-01-01). "Nivedita Menon | Jawaharlal Nehru University - Academia.edu". Jnu.academia.edu. பார்க்கப்பட்ட நாள் 2013-11-15.
- ↑ "Nivedita Menon: We're witnessing new interventions by feminists of all genders - Times Of India". Articles.timesofindia.indiatimes.com. 2013-01-07. Archived from the original on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் 2013-11-15.
- ↑ "Training the eye". The Hindu. 2013-02-14. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/training-the-eye/article4413132.ece.
- ↑ ":::Welcome to the official website of Women Unlimited". Womenunlimited.net. பார்க்கப்பட்ட நாள் 2013-11-15.
- ↑ "About". Kafila. 2011-08-28. Archived from the original on 2013-11-12. பார்க்கப்பட்ட நாள் 2013-11-15.
- ↑ "Search | Economic and Political Weekly". Economic and Political Weekly, Economic and Political Weekly, Economic and Political Weekly, Economic and Political Weekly, Economic and Political Weekly (Epw.in) 50, 50, 50, 50, 50 (23, 23, 23, 23, 23): 7, 7, 7, 7, 7–8, 8, 8, 8, 8. http://www.epw.in/search/apachesolr_search/nivedita%20menon. பார்த்த நாள்: 2013-11-15.
- ↑ "Power and Contestation: India since 1989 by Nivedita Menon and Aditya Nigam". PopMatters. http://www.popmatters.com/review/120643-power-and-contestation-india-since-1989-by-nivedita-menon-and-aditya/.
- ↑ Sharma, Nalini (2016-08-19). "Book Review: Seeing Like a Feminist by Nivedita Menon". Feminism in India. பார்க்கப்பட்ட நாள் 2016-10-18.
- ↑ Menon, Nivedita. "UI Press | Nivedita Menon | Recovering Subversion: Feminist Politics beyond the Law". www.press.uillinois.edu. பார்க்கப்பட்ட நாள் 2016-10-18.
- ↑ Menon, Nivedita (2001). Gender And Politics In India - Google Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195658934. பார்க்கப்பட்ட நாள் 2013-11-15.
- ↑ Singh, Jyoti. "Feminist writings". The Tribune. பார்க்கப்பட்ட நாள் 20 August 2015.
- ↑ "Show Profile". Jnu.ac.in. 2011-08-05. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-03-18.
- ஆதாரங்கள்
- Young, Sandra (2017). "Beyond Indigenisation: Hamlet, Haider, and the Pain of the Kashmiri People". Shakespeare 14 (4): 1–16. doi:10.1080/17450918.2017.1351486. பன்னாட்டுத் தர தொடர் எண்:1745-0918.