நிஸ்தாரிணி மகளிர் கல்லூரி
நிஸ்தாரிணி மகளிர் கல்லூரி என்பது , இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் புருலியா மாவட்டத்தில் 1957 ஆகஸ்ட் 17 அன்று நிறுவப்பட்டதும் பழமையானதுமான மகளிர் கல்லூரியாகும். கலை மற்றும் அறிவியலில் இளங்கலை படிப்புகளை வழங்கும் இக்கல்லூரி, சித்தோ கன்கோ பிருசா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது இதன் தற்போதைய முதல்வர் டாக்டர் இந்திராணி தேப் ஆவார்.
வகை | இளங்கலை கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 17 August 1957 |
சார்பு | சிதோ கன்கோ பிருசா பல்கலைக்கழகம் |
தலைவர் | முனைவர் சுபால் சே |
முதல்வர் | முனைவர் இந்திராணி தெப் |
அமைவிடம் | தேசபந்து சாலை , , , 723101 , 23°20′36″N 86°21′58″E / 23.3433277°N 86.365997°E |
வளாகம் | நகர்ப்புறம் |
இணையதளம் | கல்லூரி இணையதளம் |
படிமம்:Nistarini Women's College.jpg | |
வரலாறு
தொகுபுருலியா மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெண்களின் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக இந்தியாவின் சுதந்திர இயக்கத்தின் முன்னோடியான தேஷ்பந்து சித்தரஞ்சன் தாசுவின் பெற்றோரான பூபன் மோகன் தாசு மற்றும் நிஸ்தாரிணி தேவி ஆகியோர் வசித்து வந்த வீட்டிலேயே அவர்களின் மகளான அமலா தேவியால் இந்த கல்லூரி புருலியாவில் முதன்முதலில் பள்ளியாக நிஸ்தாரிணி வித்யாலயா என நிறுவப்பட்டது.
ஆனால் எதிர்பாரதவிதமாக பூபன் மோகன் தாசு, நிஸ்தாரிணி தேவி மற்றும் அமலா தேவி ஆகியோரின் மரணத்தால் இந்த கல்வி நிறுவனம் தற்காலிகமாக மூடப்பட்டது. மீண்டும், மேற்கு வங்காளத்தின் அப்போதைய முதல்வர் டாக்டர் பிதான் சந்திர ராய், இந்த கல்வி நிறுவனத்தை புதுப்பிக்க முன்முயற்சி எடுத்து, அவர்களின் கோடைக்கால வீட்டையே இன்றைய நிஸ்தாரிணி மகளிர் கல்லூரியாக ஸ்ரீ. ஜிமுத் பஹான் சென் போன்றோரின் உதவியுடன் மாற்றியுள்ளார். [1]
அங்கீகாரம்
தொகுஇக்கல்லூரி சிதோ கன்கோ பிருசா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது அதோடு, பல்கலைக்கழக மானியக் குழுவால் (UGC) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. [2] மேலும் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார அவையால் (NAAC) அங்கீகாரம் பெற்றது மற்றும் 2016 இல் ஏ தகுதியும் வழங்கப்பட்டுள்ளது [3]
துறைகள்
தொகுஅறிவியல் பிரிவு
தொகு- வேதியியல்
- இயற்பியல்
- கணிதம்
- தாவரவியல்
- விலங்கியல்
- ஊட்டச்சத்து
- கணினி அறிவியல்
- சுற்றுச்சூழல் அறிவியல்
கலைப்பிரிவு
தொகு- கல்வி
- பெங்காலி
- ஆங்கிலம்
- சமஸ்கிருதம்
- ஹிந்தி
- வரலாறு
- நிலவியல்
- அரசியல் அறிவியல்
- தத்துவம்
- பொருளாதாரம்
- உடற்கல்வி
- இசை
மேற்கோள்கள்
தொகு- ↑ "History of the college". Archived from the original on 18 March 2013. பார்க்கப்பட்ட நாள் 26 December 2012.
- ↑ Colleges in WestBengal, University Grants Commission பரணிடப்பட்டது 16 நவம்பர் 2011 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "List of Institutions Recommended For Accreditation by NAAC (5th November 2016)" (PDF).