நீண்ட அலகு நெட்டைக்காலி
நீண்ட அலகு நெட்டைக்காலி அல்லது பழுப்புப் பாறை நெட்டைக்காலி ( long-billed pipit or brown rock pipit ) என்பது குருவி வரிசையைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இது பரவலான வாழிடப் பரப்பைக் கொண்டுள்ளது. அரேபிய தீபகற்பம் மற்றும் தெற்கு ஆசியா வழியாக ஆப்பிரிக்காவரை பரவியுள்ள இப்பறவைகள் பல துணையினங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றின் சரியான வடிவங்கள் இன்னும் தீர்மானிக்கபடவில்லை. இந்தப் பறவைகளில் பெரும்பாலானவை ஒரே பகுதியில் வசிப்பவை அல்லது குறுகிய தூரத்திற்கு வலசை போகக்கூடியவை .
நீண்ட அலகு நெட்டைக்காலி | |
---|---|
Anthus similis decaptus | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Anthus |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/AnthusA. similis
|
இருசொற் பெயரீடு | |
Anthus similis (ஜெர்டன், 1840) | |
வேறு பெயர்கள் | |
Agrodroma similis |
வகைபாடும் முறைமையும்
தொகுஇது ஒரே மாதிரியான தோற்றமுடைய பல பறவைகளைக் கொண்ட ஒரு சிக்கலான பறவைக் குழுவாகும். இது மிகவும் வேறுபட்ட வாழிட எல்லையைக் கொண்டுள்ளது. மேலும் சாதிவரலாறின் சரியான வடிவங்கள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. இந்த இனத்திற்குள் முன்னர் வைக்கப்பட்ட பல துணையினங்கள் முழு தனி இனங்கள் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளன.
தென்-மத்திய ஆபிரிக்காவில் உள்ள மியோம்போ வனப்பகுதியில் வசிக்கும் மர நெட்டைக்காலி ( அந்தஸ் நியாஸ்ஸே ), முன்பு இந்தப் பறவையின் துணையினமாகக் கருதப்பட்டது, ஆனால் இப்போது பொதுவாக ஒரு தனி இனமாக கருதப்படுகிறது. சில ஆய்வாளர்கள் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மலை புல்வெளிப் பறவையான பேனர்மேன் நெட்டைக்காலியையும் ( அந்தஸ் (சிமிலிஸ்) பேனர்மணி ) பிரித்தனர். நிக்கல்சன் நெட்டைக்காலி என்பது தென்னாப்பிரிக்காவில் அண்மையில் தனி இனமாக பிரிக்கபட்ட புலம்பெயர்ந்த பறவை இனமாகும்.
1840 இல் தீபகற்ப இந்தியாவிலிருந்து தாமஸ் சி. ஜெர்டன் என்பவரால் பரிந்துரைக்கப்பட்டு இந்த இனம் விவரிக்கப்பட்டது. இவர் விவரித்த வடிவம் மேற்கு தொடர்ச்சி மலைகள், நீலகிரி மற்றும் பழனி மலைகளில் காணப்படுகிறது. 1953 ஆம் ஆண்டில் சிட்னி தில்லன் ரிப்லியால் ஒரு இருண்ட இனமான டிராவன்கோரியென்சிஸ் விவரிக்கப்பட்டது, இது பாலக்காடு கணவாய்க்கு தெற்கே காணப்படும் வடிவமாகும். [2] ரிச்சர்ட் மீனெர்ட்ஜாகனால் விவரிக்கப்பட்ட டிகாப்டஸ் துணையினங்கள் ஆப்கானித்தான், பாக்கித்தான் மற்றும் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் காணப்படுகின்றது. அதே சமயம் ஜெர்டோனி இமயமலை அடிவாரத்தில் கிழக்கே நேபாளத்தில் காணப்படுகிறது. யமேதினி துணையினம் மியான்மரில் காணப்படுகிறது. மேற்கு ஆசிய பிராந்தியத்திலும் ஆப்பிரிக்காவிலும் பல இனங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
விளக்கம்
தொகுஇது ஒரு நடுத்தர-பெரிய நெட்டைக்காலி ஆகும். இப்பறவை 16-17.5 செ.மீ. நீளம் இருக்கும். இது பொதுவாக தரையில் காணப்படக்கூடிய இனமாகும். இதன் உடல் மேற்புரத்தில் மணல் சாம்பலாகவும், கீழே வெண்மை அல்லது வெளிர் மங்கலான மஞ்சள் நிறத்திலும் இருக்கும். இது கபில நிற நெட்டைக்காலியைப் போலவே இருக்கும், ஆனால் சற்று பெரியதாகவும், நீண்ட வாலுடனும், நீண்ட கருமையான அலகுடனும் இருக்கும்.
நீண்ட அலகு நெட்டைக்காலி நன்கு பறக்கக்கூடியது. இது பாலைவன லார்க்கைப் போன்ற பண்புடைய ஒலி அழைப்பை விடுக்கிறது. இதன் பாடல் திவ்னி நெட்டைக்காலியைப் போன்றது, ஆனால் மெதுவாகவும் மிகவும் மாறுபட்டதாகவும், ஸ்ரீ... சுர்ர்...ஸ்ரீ... சுர்ர்...ஸ்ரீ..சுர்ர் என்று உள்ளது. இது தன் உறவினர்களைப் போலவே, விதைகள் மற்றும் பூச்சிகளை உண்கிறது.
நீண்ட அலகு நெட்டைக்காலி பாறைகள் மற்றும் குட்டையான தாவரங்கள் கொண்ட வறண்ட திறந்த சரிவுகளில் இனப்பெருக்கம் செய்து வாழ்கிறது. தரையில் கூடு அமைக்கும் இது, 2-4 முட்டைகளை இடுகிறது.
காட்சியகம்
தொகு-
A. s. similis மைசூருக்கு அருகில்
-
நீண்ட அலகு நெட்டைக்காலி A. s. travancoriensis, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில்
-
இந்தியாவின் ஆரவல்லி பல்லுயிர் பூங்காவில், நீண்ட அலகு நெட்டைக்காலி
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2019). "Anthus similis". IUCN Red List of Threatened Species 2019: e.T103821527A155459664. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T103821527A155459664.en. https://www.iucnredlist.org/species/103821527/155459664. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Ripley, S D (1953) Notes on Indian Birds V. Postilla 17:1-6 scan
வெளி இணைப்புகள்
தொகு- The Internet Bird Collection
- Long-billed pipit - Species text in The Atlas of Southern African Birds.