நீர்நாய் வேட்டை

நீர்நாய் வேட்டை (Seal hunting அல்லது sealing) என்பது நீர்நாய்களை தனிப்பட்ட முறையிலோ வணிக ரீதியிலோ வேட்டையாடுதல் ஆகும். உலக அளவில் நீர்நாய் வேட்டை தற்போது ஒன்பது நாடுகளில் நடைமுறையில் உள்ளது. அவையாவன ஐக்கிய அமெரிக்கா (அலாஸ்காவில் உள்ள ஆர்க்டிக் வட்டத்திற்கு மேலே), கனடா, நமீபியா, டென்மார்க் (சுயஆச்சி நிலமான கிரீன்லாந்தில் மட்டும்), ஐஸ்லாந்து, நார்வே, ரஷ்யா, பின்லாந்து மற்றும் ஸ்வீடன். உலகின் பெரும்பாலான நீர்நாய் வேட்டை கனடா மற்றும் கிரீன்லாந்தில் நடைபெறுகிறது.

நீர்நாய்களைக் கொல்லுதல், செயின்ட் பால் தீவு, அலாஸ்கா, 1890கள்
நீர்நாய்களைக் கொன்று தோலை உரித்தல், 1880கள், கிரீன்லாந்து

கனடாவில் நீர்நாய் வேட்டை கனேடிய மீன்பிடி மற்றும் பெருங்கடல் துறையால் (DFO எனப்படும் Canadian Department of Fisheries and Oceans) ஒழுங்குபடுத்துகிறது. இது ஒதுக்கீட்டை அமைத்தல், வேட்டையை கண்காணித்தல், நீர்நாய்களின் எண்ணிக்கையை ஆய்வு செய்தல், தனது இணையதளம் மூலமும் செய்தித் தொடர்பாளர்கள் மூலமும் நீர்நாய் வேட்டையை ஊக்குவித்தல் போன்றவற்றை கவனித்துக் கொள்கிறது. மேலும் கனடிய சீலர்கள் சங்கத்துடன் இணைந்து வேட்டையாடுபவர்களுக்குப் புதிய விதிமுறைகளை பயிற்றுவித்தலையும் செய்கிறது. இத்துறை 2007-ல் 90,000 நீர்நாய்களையும், 2008-ல் 275,000 நீர்நாய்களையும், 2009-ல் 280,000 நீர்நாய்களையும், 2010-ல் 330,000 நீர்நாய்களையும் வேட்டையாட ஒதுக்கீடு செய்தது.[1] சமீபத்திய ஆண்டுகளில் மொத்த ஒதுக்கீட்டை விட வேட்டையாடப்படுதல் சற்று குறைவாகவே உள்ளது: 2007-ல் 82,800, 2008-ல் 217,800, 2009-ல் 72,400, மற்றும் 2010-ல் 67,000.[2] 2007-ம் ஆண்டு நார்வே 29,000 ஹார்ப்பு நீர்நாய்களையும், ரஷ்யா 5,479 ஹார்ப்பு நீர்நாய்களையும், கிரீன்லாந்து 90,000 நீர்நாய்களையும் கொன்றதாக அறிவித்தன.

1952 முதல் 1970 வரை சராசரியாக 291,000 ஆக இருந்த கனடாவின் வருடாந்திர கொல்லும் விகிதங்களின் விளைவாக 1960களின் பிற்பகுதியில் வடமேற்கு அட்லாண்டிக்கில் ஹார்ப் நீர்நாய்களின் எண்ணிக்கை சுமார் 2 மில்லியனாக குறைந்தது.[3] ஹார்ப்பு நீர்நாய்களின் அழிவைத் தடுக்க அவற்றைக் கொல்லும் விகிதங்களைக் குறைக்க வேண்டும் என்றும் வலுவான விதிமுறைகளைக் கொண்டு வரவேண்டும் என்றும் பல்வேறு இயற்கைப் பாதுகாப்பு ஆர்வலர்களும் கோரத் துவங்கினர். இதன் விளைவாக 1971-ல் கனேடிய அரசாங்கம் ஒரு ஒதுக்கீட்டு முறையை நிறுவியது. இந்த முறையால் அந்த ஆண்டின் ஒதுக்கீட்டிற்கேற்ப மீன்பிடி மற்றும் கடல்சார் துறையால் விதிக்கப்பட்ட அவகாசத்திற்குள் ஒவ்வொரு படகும் தங்களால் முடிந்தவரை நீர்நாய்களைப் பிடிக்குமாறு ஒரு போட்டியை உருவாக்கியது. இப்போட்டித் தன்மை வேட்டையாடுதலைச் சீரமைக்கும் என்று கருதப்பட்டு ஒரு நாளைக்கு 400 நீர்நாய்கள் என்றும் ஒரு படகிற்கு மொத்தம் 2000 நீர்நாய்கள் என்றும் வரையறை செய்யப்பட்ட புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. DFO-ஆல் நடத்தப்பட்ட 2007-ம் ஆண்டு எண்ணிக்கைக் கணக்கெடுப்பில் 5.5 மில்லியன் நீர்நாய்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டது.

கிரீன்லாந்தில் நீர்நாய்கள் துப்பாக்கியால் வேட்டையாடப்படுகின்றன. நீர்நாய்க் குட்டிகள் முழுமையாக பாதுகாக்கப்படுகின்றன.[4] இது மற்ற நீர்நாய் வேட்டை நடக்கும் நாடுகளுடன் சில எதிர்ப்பை உருவாக்கியது. ஏனெனில் கிரீன்லாந்தில் நீர்நாய் குட்டிகள் கொல்லப்படாத போதும் இளம் குட்டிகளை அடித்துக் கொல்வதை எதிர்க்கும் போராட்டங்களிலும் பிரசாரங்களிலும் அந்நாடும் குற்றம்சாட்டப்பட்டது.[5] கனடாவில் புதிதாகப் பிறந்த ஹார்ப்பு நீர்நாய்களையும் இளம் ஹூடட் நீர்நாய்களையும் வேட்டையாடுவது சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது. நீர்நாய் குட்டிகள் பிறந்த 12 முதல் 14 நாட்களில் தங்களது வெள்ளை நிற ரோமங்களை உதிர்க்கத் தொடங்கும் நிலையில் அவற்றைத் தலையில் அடித்துக் கொல்வது வணிக ரீதியாக அனுமதிக்கப்படுகிறது.[6][7]

நீர்நாய் வேட்டை மிகவும் சர்ச்சைக்குரியதாக உருவாகியுள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிடத்தக்க அளவில் ஊடகங்களால் பேசப்பட்டும் விலங்குரிமை ஆர்வலர்களால் எதிர்க்கப்பட்டும் வந்துள்ளது.[8] கடந்த கால வேட்டைகளின் புகைப்படங்கள் விலங்குப் பாதுகாப்பு, விலங்குகள் நலன் மற்றும் விலங்குரிமை செயற்பாடுகளின் சின்னங்களாக மாறியுள்ளன. 2009-ம் ஆண்டில், ஒரு வருடத்திற்கும் குறைவான வயதையுடைய ஹார்ப்பு நீர்நாய் குட்டிகளை வேட்டையாடுவதை ரஷ்யா தடை செய்தது.

மேலும் காண்க

தொகு

மேற்கோள் தரவுகள்

தொகு
  1. "Frequently Asked Questions About Canada's Seal Harvest". Fisheries and Oceans Canada. 2011-03-17. Archived from the original on 2011-07-06. பார்க்கப்பட்ட நாள் 2011-07-23.
  2. Canadian Science Advisory Secretariat (March 2010). "Current Status of Northwest Atlantic Harp Seals, Pagophilus groenlandicus". Science Advisory Report (Fisheries and Oceans Canada). https://waves-vagues.dfo-mpo.gc.ca/Library/340358.pdf. 
  3. Fink, Sheryl. Canada's Commercial Sea Slaughter 2009 (PDF) (Report). International Fund for Animal Welfare.
  4. "Sæl". Erhvervsportalen, Naalakkersuisut (Government of Greenland). பார்க்கப்பட்ட நாள் 30 December 2019.
  5. "Greenland bans Canadian sealskins". United Press International. 2011-02-27. Archived from the original on 2008-05-16. பார்க்கப்பட்ட நாள் 2011-03-03.
  6. "Myths and Facts: The Truth about Canada's Commercial Seal Hunt". Human Society International: Canada. 2011-02-04. பார்க்கப்பட்ட நாள் 2009-05-26.
  7. Brown, DeNeen L. (2004-04-18). "Activists Decry Growth Of Canadian Seal Hunt". The Washington Post. https://www.washingtonpost.com/ac2/wp-dyn/A20625-2004Apr17?language=printer. [தொடர்பிழந்த இணைப்பு]
  8. Lariviere, Serge (2008). "harp seal (mammal): The sealing industry". Encyclopædia Britannica.  

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்நாய்_வேட்டை&oldid=4015942" இலிருந்து மீள்விக்கப்பட்டது