நீல்சு என்றிக்கு ஏபெல்
நீல்சு என்றிக்கு ஏபெல் (Niels Henrik Abel, ஆகத்து 5, 1802 – ஏப்ரல் 6, 1829) நோர்வீசிய கணிதவியலாளர் ஆவார். இவர் பல்வேறு துறைகளிலும் முன்னோடியாக பங்களித்துள்ளார். விகிதமுறா மூலங்களின் பொது ஐந்துபடிச்சமன்பாட்டிற்கு தீர்வு காண்பது இயலாதவொன்று என்பதற்கு முதன்முதலில் முழுமையான சான்றளித்தது இவரது மிகவும் குறிப்பிடத்தக்க பங்களிப்பாக கருதப்படுகின்றது. அவரது காலத்தில் இதுவே 250 ஆண்டுகளாக தீர்க்கப்படாத, முதன்மையான கணிதச் சிக்கலாகவும் இருந்து வந்தது. நீள்வட்டச்சார்பு, ஏபெல் சார்புகளை கண்டறிந்தவர். இத்தகைய சாதனைகள் புரிந்திருந்தாலும் அவரது வாழ்நாளில் ஏபெல் அங்கீகாரம் எதனையும் பெறவில்லை. மிகவும் வறியநிலையில் வாழ்ந்து கொண்டு தமது கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தினார். 26 அகவையிலேயே மறைந்தார்.
நீல்ஸ் ஹென்றிக் ஏபெல் | |
---|---|
நீல்சு என்றிக்கு ஏபெல் | |
பிறப்பு | நெட்சுட்ராண்டு, நோர்வே | 5 ஆகத்து 1802
இறப்பு | 6 ஏப்ரல் 1829 பிரோலாந்து, நோர்வே | (அகவை 26)
வாழிடம் | நோர்வே |
தேசியம் | நோர்வே |
துறை | கணிதம் |
கல்வி கற்ற இடங்கள் | வேந்திய பிரெடெரிக் பல்கலைக்கழகம் (இளங்கலை, 1822) |
கற்கை ஆலோசகர்கள் | பெர்ன்ட் மைக்கேல் ஓம்போ |
அறியப்படுவது | ஏபலின் ஈருறுப்புத் தேற்றம் Abelian category Abelian variety Abel equation Abel equation of the first kind Abelian extension ஏபெல் சார்பு பரிமாற்றுக் குலம் Abel's identity Abel's inequality Abel's irreducibility theorem Abel–Jacobi map Abel–Plana formula Abel–Ruffini theorem Abelian means Abel's summation formula Abelian and tauberian theorems Abel's test Abel's theorem Abel transform Abel transformation Abelian variety Abelian variety of CM-type Dual abelian variety |
கையொப்பம் |
தன் வாழ்நாளில் ஆறேழு ஆண்டுகளிலேயே பெரும்பாலானப் பணிகளை முடித்தார்.[1] இவரைக் குறித்தது பிரான்சியக் கணிதவியலாளர் ஹெர்மைட் கூறுகையில்: "ஏபெல் ஐந்நூறு ஆண்டுகளுக்கான வேலையை கணிதவியலாளர்களுக்கு விட்டுச் சென்றுள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.[1][2] மற்றொரு பிரான்சியக் கணிதவியலாளர், அத்ரியன்-மாரி லெஜாந்தர், கூறுகையில்: "கெல் தெத் செல் து ஷென் நோர்வீஜியன்!" ("இளம் நோர்வீசியருக்கு எத்தகைய தலை!") என வியந்தார்.[3]
இவற்றையும் காண்க
தொகு-
கியெர்சுடாடில் உள்ள நீல்சு என்றிக் ஏபெல்லின் நினைவுச்சிலை
-
நோர்வே அஞ்சல்தலை
மேற்சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "Charles Hermite Quotes - 2 Science Quotes - Dictionary of Science Quotations and Scientist Quotes". பார்க்கப்பட்ட நாள் 12 September 2015.
- ↑ http://www.goodquotes.com/quote/charles-hermite/abel-has-left-mathematicians-enough-to
- ↑ "Niels Abel". Archived from the original on 9 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 12 September 2015.
நூற்றொகை
தொகு- Livio, Mario (2005). The Equation That Couldn't be Solved. New York: Simon & Schuster. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7432-5821-5.
- Stubhaug, Arild (2000). Niels Henrik Abel and his Times. Trans. by Richard R. Daly. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-66834-9.
வெளி இணைப்புகள்
தொகு- Biographies and handwritten manuscripts பரணிடப்பட்டது 2012-03-25 at the வந்தவழி இயந்திரம் from the Abel Prize website
- O'Connor, John J.; Robertson, Edmund F., "நீல்சு என்றிக்கு ஏபெல்", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
- Biography of Niels Henrik Abel
- கணித மரபியல் திட்டத்தில் நீல்சு என்றிக்கு ஏபெல்
- Translation of Niels Henrik Abel's "Research on Elliptic Functions" at Convergence பரணிடப்பட்டது 2006-02-12 at the வந்தவழி இயந்திரம்
- Famous Quotes by Niels Henrik Abel பரணிடப்பட்டது 2006-02-12 at the வந்தவழி இயந்திரம் at Convergence பரணிடப்பட்டது 2006-02-12 at the வந்தவழி இயந்திரம்
- The Niels Henrik Abel mathematical contest, The Norwegian Mathematical Olympiad
- Family genealogy
- நீல்சு என்றிக்கு ஏபெல் at Find a Grave