நீல வயிறு ஓலைப்பாம்பு

நீல வயிறு ஓலைப்பாம்பு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கோலுபிரிடே
பேரினம்:
ஒலிகோடான்
இனம்:
ஒ. மெலனியசு
இருசொற் பெயரீடு
ஒலிகோடான் மெலனியசு
(வால், 909[2]

நீல வயிறு ஓலைப்பாம்பு எனும் ஒலிகோடான் மெலனியசு (Oligodon Melaneus) என்பது கொலுபிரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாம்பு சிற்றினம் ஆகும். இது கிழக்கு இந்தியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[3] டார்ஜிலிங்கின் திந்தாரியாவிலிருந்து பெறப்பட்ட இரண்டு மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு 1909ஆம் ஆண்டில் பிராங்க் வால் இதை விவரித்தார்.[2][3]

விளக்கம்

தொகு

நீல வயிறு ஓலைப்பாம்பின் பெண் பாம்பின் மொத்த நீளம் 30 செ.மீ. ஆகும். இதனுடைய வாலின் நீளம் 4 செ.மீ. ஆகும். இது நான்கு முட்டைகள் வரை இடும். ஆண் பெண் பாம்பு போன்று நீளமானது. உடல் மேற்பகுதி ஒரே மாதிரியாகக் கருப்பு நிறத்தில் உள்ளது. பக்கவாட்டுப் பகுதிச் சாம்பல் நிறமாக உள்ளது. வயிறு நீல-சாம்பல் நிறத்தில் உள்ளது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Das, A. (2021). "Oligodon melaneus". IUCN Red List of Threatened Species 2021: e.T202846A2757299. doi:10.2305/IUCN.UK.2021-3.RLTS.T202846A2757299.en. https://www.iucnredlist.org/species/202846/2757299. பார்த்த நாள்: 13 June 2023. 
  2. 2.0 2.1 2.2 Wall, F. (1909). "Notes on snakes from the neighbourhood of Darjeeling". Journal of the Bombay Natural History Society 19: 337–357. https://www.biodiversitylibrary.org/part/33733#/summary. 
  3. 3.0 3.1 Oligodon melaneus at the Reptarium.cz Reptile Database. Accessed 23 May 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீல_வயிறு_ஓலைப்பாம்பு&oldid=4030018" இலிருந்து மீள்விக்கப்பட்டது