நுரானாங் அருவி
நுரானாங் அருவி (Nuranang Falls) என்பது அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள அருவிகளுள் ஒன்றாகும்.
நுரானாங் அருவி | |
---|---|
நுரானாங் அருவி | |
அமைவிடம் | தவாங், அருணாச்சலப் பிரதேசம், இந்தியா |
ஆள்கூறு | 27°35′22″N 91°59′03″E / 27.5895355°N 91.9840622°E |
வகை | திரை அருவி |
மொத்த உயரம் | 100 m |
வீழ்ச்சி எண்ணிக்கை | 2 |
நீர்வழி | நுரானாங் சூ |
அருவி
தொகுபோங் பாங் அருவி என்றும் அழைக்கப்படுகிறது. சுமார் 100 மீட்டர் உயரமுள்ள இந்த அருவி இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1] நுரானாங் அருவி இந்த பகுதியில் உள்ள மிகவும் கண்கவர் நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும்.[2] இருப்பினும் இந்த அருவி குறித்த தகவல்கள் பல சுற்றுலாப் பயணிகள் அறிந்திருக்கவில்லை. இது டவாங் மற்றும் பொம்டிலா நகரினை இணைக்கும் சாலையில் ஜாங் நகரத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எனவே இது ஜாங் அருவி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அருவியின் அடிப்பகுதியில் சிறிய நீர் மின் ஆற்றல் நிலையம் உள்ளது. இங்கு உள்ளூர் பயன்பாட்டிற்கு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. நூரானாங் ஆறு செலா கணவாயின் வடக்கு சரிவுகளிலிருந்து உருவாகிறது. நீர்வீழ்ச்சியின் கீழே இது தவாங் ஆற்றில் விழுகிறது.
வரலாறு
தொகுபுராண கருத்தின் படி, நுரானாங் ஆறு மற்றும் நுரானாங் நீர்வீழ்ச்சிகள் 1962 சீன-இந்தியப் போரில் சிப்பாய், ரைபிள்மேன் ஜஸ்வந்த் சிங் ராவத், மகா வீர் சக்ரா (மரணத்திற்குப் பின்) உதவிய நூரா என்ற உள்ளூர் மோன்பா பழங்குடி பெண்ணின் பெயரால் பெயரிடப்பட்டன. பின்னர் சீனப் படைகள் இப்பகுதியினைக் கைப்பற்றியது. ஆனால் ஜஸ்வந்தின் வீரம் உண்மையான சூழ்நிலையினை விட மிகவும் புத்திசாலித்தனமானவை. எனவே 1962ஆம் ஆண்டுக்கு முன்னரே நூரானாங் என்ற பெயர் வழங்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
திரைப்படத்தில்
தொகுபாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் நடித்து 1997-ல் திரைப்படமாக்கப்பட்ட கோய்லா திரைப்படப் பாடலான தன்ஹாய் தன்ஹாய் தன்ஹாய் பாடல் சாங்கெசுடர் ஏரியில் படமாக்கப்பட்டதன் மூலம் இப்பகுதி நன்கு வெளி உலகுக்குத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 2000ஆம் ஆண்டில் இரண்டாவதாக ஹியா தியா நியாவில் "மிதா மிதா" என்ற பாடல் படமாக்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Nuranang Falls (Tawang) - 2021 What to Know Before You Go (with Photos)". Tripadvisor (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-07.
- ↑ "Nuranang Waterfall Jang, Tawang" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-07.
{{cite web}}
: Text "India" ignored (help); Text "Tawang District, Government of Arunachal Pradesh" ignored (help)