நூக் நகரம்

விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம்

நூக் நகரம் (Nuh), இந்தியாவின் அரியானா மாநிலத்தின் தென்கிழக்கில் அமைந்த நூக் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும்.[1]இது அரியானா தலைநகரான சண்டிகருக்கு தென்கிழக்கே 337.7 கிலோ மீட்டர் தொலைவிலும், குருகிராமிற்கு தெற்கே 46.4 கிலோ மீட்டர் தொலைவிலும்; தில்லிக்கு தெற்கே 83.6 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. குருகிராம்-அல்வார் நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 248 (48) நூக் நகரம் வழியாகச் செல்கிறது.

நூக்
மேவாத்
நகரம்
நூக் is located in அரியானா
நூக்
நூக்
நூக் is located in இந்தியா
நூக்
நூக்
ஆள்கூறுகள்: 28°07′N 77°01′E / 28.12°N 77.02°E / 28.12; 77.02
நாடு India
மாநிலம்அரியானா
மாவட்டம்நூக்
 • சட்டமன்ற உறுப்பினர்(சௌத்திரி அப்டாப் அகமது, இந்திய தேசிய காங்கிரசு)
ஏற்றம்199 m (653 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்10,767
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி, ஆங்கிலம்
 • பேச்சு மொழிமேவாதி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-HR
வாகனப் பதிவுHR-27
இணையதளம்haryana.gov.in
http://www.mewat.gov.in

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 13 வார்டுகளும், 2,636 குடும்பங்களும் கொண்ட நூக் நகரத்தின் மக்கள் தொகை 16,260 ஆகும். அதில் ஆண்கள் 8,502 மற்றும் பெண்கள் 7,758 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 912 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 19% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 69.6% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,321 மற்றும் 0 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 49.1%, இசுலாமியர் 50.09%, பௌத்தர்கள் , சமணர்கள் 0.36%, சீக்கியர்கள் 0.38% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர்.[2]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நூக்_நகரம்&oldid=3772118" இலிருந்து மீள்விக்கப்பட்டது