நூர்மகால் (NurMahal ) என்பது இந்திய மாநிலமான பஞ்சாபில் உள்ள ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சி மன்றமாகும். இது பஞ்சாபில் உள்ள லோகியன் காச்-நகோதர் - லூதியானா நகரத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். இந்த நகரம் அருகிலுள்ள நகரங்களான பில்லௌர் மற்றும் நகோதருடன் இரயில் பாதைகளில் செல்லும் சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. நூர்மகால் நகோதரில் இருந்து 13 கி.மீ தொலைவிலும், ஜலந்தரில் இருந்து 33 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. பல கிராமங்கள் நூர்மகாலுக்கு அருகில் உள்ளன.

நூர்மகால்
கோட் கக்லூர்
நகரம்
நூர்மகால் செராய்
நூர்மகால் செராய்
நூர்மகால் is located in பஞ்சாப்
நூர்மகால்
நூர்மகால்
நூர்மகால் is located in இந்தியா
நூர்மகால்
நூர்மகால்
ஆள்கூறுகள்: 31°05′42″N 75°35′35″E / 31.095°N 75.593°E / 31.095; 75.593
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சப்
மாவட்டம்ஜலந்தர்
ஏற்றம்
224 m (735 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்12,630
மொழிகள்
 • அலுவல் மொழிபஞ்சாபி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்,
144039
தொலைபேசி இணைப்பு எண்01826

வரலாறு

தொகு

கோட் கக்லூர் என்று அழைக்கப்படும் ஒரு பழங்கால நகரம் அமைந்திருந்த இடத்தில் நூர்மகால் கட்டப்பட்டது. இந்தப்பகுதியில் கிடைத்த செங்கற்களும் மண்ணின் அடியில் காணப்பட்ட பல நாணயங்களும் இதை நிரூபிக்கின்றன. அறியப்படாத காரணத்திற்காக பண்டைய நகரம் 1300 ஆம் ஆண்டில் கைவிடப்பட்டது அல்லது அழிக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. பின்னர்மகாராஜா ஜசா சிங் அலுவாலியா இந்த நகரத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார்.

முகலாய பேரரசர் ஜஹாங்கிரின் (1605-1627) மனைவி நூர் சகானின் பெயரால் நூர் மகால் பெயரிடப்பட்டது. அவர் இங்கு வளர்க்கப்பட்டார். மேலும் அவரது குழந்தைப் பருவத்தை இங்கே கழித்ததாக கருதப்படுகிறது. கிழக்கிந்திய நிறுவனம் கட்டுப்பாட்டைப் பெறுவதற்கு முன்பு இந்த நகரம் தல்வான் ராஜ்புத் மற்றும் அலுவாலியா சீக்கியர்களின் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது.

செராய் நூர் மகால்

தொகு

நூர் மகாலில் சுற்றுலா ஆர்வத்தின் முக்கிய அம்சம் நூர் சகான் கட்டிய முகலாய செராய் ஆகும் . இது கீழைக் கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. இந்த வரலாற்று நினைவுச்சின்னம் தொல்பொருள் துறையால் கவனிக்கப்படுகிறது.செராயின் முழு அமைப்பும் 140 அறைகளைக் கொண்ட நாற்கர வடிவத்தில் உள்ளது. இது கட்டமைப்பின் நான்கு பக்கங்களிலும் பரவியுள்ளது.

செராய் நூர் மகாலை அடைய சிறந்த வழி, அருகிலுள்ள இரயில் நிலையமான நகோதர் சந்திக்குச் செல்வதுதான். இந்த சந்திக்கு வடக்கு இரயில்வே சேவை செய்கிறது. நூர் மகால் தனது சொந்த ரயில் நிலையத்தையும் ஒரு பெரிய தானிய சந்தையையும் கொண்டுள்ளது. இது பில்லௌர் - லோகியன் காச் பாதையில் அமைந்துள்ளது.

புள்ளிவிவரங்கள்

தொகு

2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி,[1] நூர் மகாலின் மக்கள் தொகை 12,630 என்ற அளவில் இருந்தது. ஆண்கள் 53 சதவீதமும் மற்றும் பெண்கள் 47 சதவீத ஆகும். நூர் மகாலின் சராசரி கல்வியறிவு விகிதம் 71 சதவீதமாகும். இது தேசிய சராசரியான 59.5 சதவீதத்தைவிட அதிகமாக உள்ளது: ஆண் கல்வியறிவு 73 சதவீதமும், பெண் கல்வியறிவு 68 சதவீதமுமாகும். நூர் மகாலில், 13 சதவீத மக்கள் 6 வயதுக்குட்பட்டவர்கள்.

குறிப்புகள்

தொகு
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நூர்மகால்&oldid=3010719" இலிருந்து மீள்விக்கப்பட்டது