நெக்சிசர் பக்கி
நெக்சிசர் பக்கி (Nechisar nightjar-Caprimulgus solala-கேப்ரிமுல்கசு சோலாலா) என்பது கேப்ரிமுல்கிடே குடும்பத்தில் உள்ள பக்கி சிற்றினம் ஆகும். இது எத்தியோப்பியாவில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி.[1] 1990ஆம் ஆண்டில் நெச்சிசார் தேசியப் பூங்காவில் ஒரு சிதைந்த மாதிரியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தபோது இந்தச் சிற்றினம் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.[2][3] இலண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திற்கு மாதிரியிலிருந்து ஒரு ஒற்றை இறக்கையைக் கொண்டு வந்த பிறகு, இது முன்னர் அறியப்படாத உயிரினம் என்று தீர்மானிக்கப்பட்டது. இதன் சிற்றினப் பெயர், சோலாலா, என்பது "ஒற்றை இறக்கை". என்பதைக் குறிக்கின்றது.[3]
நெக்சிசர் பக்கி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | கேப்ரிமுல்கிபார்மஸ்
|
குடும்பம்: | பக்கி
|
பேரினம்: | கேப்ரிமுல்கசு
|
இனம்: | C. solala
|
இருசொற் பெயரீடு | |
Caprimulgus solala சப்போர்டு மற்றும் பலர் 1995 |
இதன் இயற்கை வாழிடம் மிதவெப்ப மண்டலப் பகுதியாகும். இது நெச்சிசார் வடக்குப் பகுதியில் மட்டுமே வாழக்கூடியது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 BirdLife International (2016). "Caprimulgus solala". IUCN Red List of Threatened Species 2016: e.T22724428A94866609. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22724428A94866609.en. https://www.iucnredlist.org/species/22724428/94866609. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ [[[:வார்ப்புரு:IUCNlink]] "Caprimulgus solala"]. BirdLife International 2008. 2009. வார்ப்புரு:IUCNlink.
- ↑ 3.0 3.1 "A Single Wing Starts Quest For Mystery Bird". Weekend Edition Sunday. https://www.npr.org/templates/story/story.php?storyId=106749870.