நெய்யாறு காட்டுயிர் உய்விடம்

கேரளத்தில் உள்ள காட்டுயிர் உய்விடம்

நெய்யாறு காட்டுயிர் உய்விடம் (Neyyar Wildlife Sanctuary) என்பது தென்னிந்திய மாநிலமான, கேரளத்தின், மேற்கு தொடர்ச்சி மலையில், தெற்குப் பகுதியுல் உள்ள ஒரு கானுயிர் உய்விடம் ஆகும். இந்தக் உய்விடம் மொத்தம் 128 km2 (49 sq mi) பரப்பளவில் உள்ளது. இது 77 ° 8 ’முதல் 77 ° 17’ கிழக்கு தீர்க்கரேகை மற்றும் 8 ° 29 ’முதல் 8 ° 37’ வடக்கு அட்சரேகை, இடையே 8°33′N 77°12.5′E / 8.550°N 77.2083°E / 8.550; 77.2083 அமைந்துள்ளது. இது 1958 ஆம் ஆண்டில் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட போதிலும், வனவிலங்கு பாதுகாப்பு பணியில் அதிகம் செய்யப்படவில்லை, 1985 இல், ஒரு தனி காட்டுயிர் பிரிவு அமைக்கப்பட்டது, இதன் விளைவாக, பாதுகாப்பு முயற்சிகள் வேகம் கூடியது.

நெய்யாறு காட்டுயிர் உய்விடம்
നെയ്യാർ വന്യജീവി സംരക്ഷ്ണ കേന്ദ്രം
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி)
Map showing the location of நெய்யாறு காட்டுயிர் உய்விடம் നെയ്യാർ വന്യജീവി സംരക്ഷ്ണ കേന്ദ്രം
Map showing the location of நெய்யாறு காட்டுயிர் உய்விடம் നെയ്യാർ വന്യജീവി സംരക്ഷ്ണ കേന്ദ്രം
அமைவிடம்இந்தியா, கேரளம், திருவனந்தபுரம் மாவட்டம்
அருகாமை நகரம்திருவனந்தபுரம்
ஆள்கூறுகள்8°24′N 77°10′E / 08.40°N 77.16°E / 08.40; 77.16
பரப்பளவு128 சதுர கிலோமீட்டர்கள் (49 sq mi)
நிறுவப்பட்டது1958

நிலவியல்

தொகு

இது நெய்யாறு மற்றும் அதன் துணை ஆறுகளான முல்லையறு மற்றும் கல்லாறு ஆகியவற்றிற்கான வடிகால் படுகை ஆகும். 1868 மீட்டர் உயரம் கொண்ட அகத்தியமலை மிக உயர்ந்த சிகரமாகவும் மிக முக்கியமான அடையாளமாக உள்ளது.

காலநிலை

தொகு

இப்பகுதியின் சராசரி கோடை வெப்பநிலை 35 டிகிரி செல்சியசாகவும், குளிர்கால சராசரி வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது. மே மற்றும் சூலை மாதங்களுக்கு இடையில் தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் வடகிழக்கு பருவமழையானது சராசரியாக 2800   மிமீ. பொழிகிறது. இதன் சுற்றுலாப் பருவ காலம் நவம்பர் முதல் மார்ச் மாதங்களுக்கு இடையில் உள்ளது.

தாவரங்களும், விலங்கினங்களும்

தொகு

இந்த உய்விடத்தில் கணிசமான அளவில் இயற்கை தாவரங்கள் பரவியுள்ளன. இங்குள்ள தாவரங்களின் பன்முகத்தன்மையானது சரணாலயத்தை ஒரு சிறந்த மரபணுக்களின் காப்பிடமாக பாதுகாத்துவருகிறது. இந்த கானுய்ரகாப்பகத்தில் புலி, சிறுத்தை, தேன் கரடி, யானை, கடமான், கேளையாடு, குல்லாய் குரங்கு, நீலகிரி மந்தி, நீலகிரி வரையாடு உள்ளிட்ட 39 வகையான பாலூட்டிகள் உள்ளன. மேலும் 176 வகையான பறவைகள், 30 வகையான ஊர்வன, 17 வகையான நீர்நிலவாழிகள், 40 வகையான மீன்கள் பதிவாகியுள்ளன. [1]

1977 ஆம் ஆண்டில் நெய்யற்றில் அமைக்கப்பட்ட முதலை பண்ணையானது சுமார் 20 சதுப்புநில முதலைகளைக் கொண்டுள்ளது. முதலைகள் மறுவாழ்வு மற்றும் ஆராய்ச்சி மையம் 2007 மே அன்று நெய்யாறு வனவிலங்கு சரணாலயத்தில் திறக்கப்பட்டது. [2]

யானை கன்றுகளிலிருந்து 87 வயது யானை வரையிலான பல யானைகளை இந்த பகுதிக்குள் உள்ள நெய்யறு யானை மறுவாழ்வு மைய வளாகத்தில் பராமரிக்கபட்டு வருகிறது, மேலும் பயணிகள் யானை சவாரி மேற்கொள்ளுதல் யானைகளுக்கு உணவளித்தல் ஆகியவற்றை செய்யலாம்.

இங்கு மான் மறுவாழ்வு மையமும் உள்ளது.

பார்வையாளர் தகவல்

தொகு

நெய்யறு கானுயிர் உய்விடத்தின் நிர்வாக வளாகமானது சரணாலய வளாகத்திற்கு வெளியே நெய்யாறு அணையில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது . அங்கு தகவல் மையம், பணியாளர்கள் குடியிருப்பு, ஓய்வு இல்லம், இளைஞர் விடுதி ஆகியவை உள்ளன. இந்த சரணாலயத்தில் சுற்றுலாப் பயணிகள் சிங்கப் பூங்காவையும், நெய்யறு நீர்தேக்கத்தை படகில் சென்று பார்வையிடவும் வசதிகள் செய்யபட்டுள்ளன. [3]

அருகிலுள்ள தொடருந்து நிலையம்: 20   கி.மீ தொலைவில் உள்ள நெய்யாற்றங்கரை தொடருந்து நிலையம், அருகிலுள்ள வானூர்தி நிலையம்: 40   கி.மீ. தொலைவில் உள்ள திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம்.

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு