நெல்லியடி மத்திய கல்லூரி

நெல்லியடி மத்திய கல்லூரி (Nelliady Central College) (முன்பு, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் (Nelliady Madhya Maha Vidyalayam)) யாழ்ப்பாண மாவட்டத்தில் நெல்லியடியில் அமைந்துள்ள பாடசாலை ஆகும். இது இலங்கையின் தேசியப் பாடசாலைகளுள் ஒன்றாகும்.

நெல்லியடி மத்திய கல்லூரி
Nelliady Central College
முகவரி
நெல்லியடி மத்திய மகா வித்தியாலய வீதி
நெல்லியடி, இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
தகவல்
வகைதேசியப் பாடசாலை
குறிக்கோள்அறிவு ஒளிர, சால்பு சிறக்க!
நிறுவல்1921
முதல்வர்கணேசரத்தினம் கிருஸ்ணகுமார்
ஆசிரியர் குழு125
தரங்கள்6-13
பால்ஆண், பெண்
கற்பித்தல் மொழிதமிழ் ஆங்கிலம்
மொழிதமிழ், ஆங்கிலம்
Publicationசிந்தனை
Yearbookநெல்லிக்கனி
இணையம்

ஆரம்பம்

தொகு

நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் 1921ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.

வரலாறு

தொகு

1946ஆம் ஆண்டில் இலவசக் கல்வியின் தந்தை என அழைக்கப்படும் சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கராவினால் 54 பாடசாலைகள் மத்திய மகா வித்தியாலயங்களாகத் தரமுயர்த்தப்பட்டன. அவற்றுள் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயமும் ஒன்றாகும்.[1] பின்னர், முன்னை நாள் அதிபர் திரு. செல்லத்துரை சேதுராஜா காலத்தில் அக்டோபர் 6, 2011இலிருந்து இக்கல்லூரியானது தேசியப் பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது.[2]

ஈழப் போரின்போது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பெரும்பாலான பள்ளிகளைப் போலவே இந்தக் கல்லூரியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஈழப்போரின்போது இக்கல்லூரியில் இலங்கை இராணுவம் நிலை கொண்டு அதன் முகாமாக பயன்படுத்தியது. 1987 ஆம் ஆண்டு யூலை 5 ஆம் திகதி இலங்கை இராணுவ முகாம் மீது விடுதலைப் புலிகளால் நெல்லியடி சமர் மேற்கொள்ளபட்டது. அப்போது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட சிறிய ட்ரக் வண்டியை கப்டன் மில்லர் ஓட்டிச் சென்று, இலங்கையின் முதலாவது தற்கொலைத் தாக்குதல் இப்பாடசாலையில் நகழ்த்தப்பட்டது.[3][4]

இங்கு படித்தவர்கள்

தொகு

பாடசாலைப் பண்

தொகு

"வாழ்க வாழ்க வாழ்கவே..." இயற்றியவர பண்டிதர் க. வீரகத்தி

              பல்லவி
வாழ்க வாழ்க வாழ்கவே
எங்கள் கலைக் கோயிலென்றும்
வாழ்க வாழ்க வாழ்கவே
            அனுபல்லவி
நெல்லியடி மத்தியகல்லூரியாலயம்
நிகரில்லாத கலையினூற்று குருகுலபீடம்
               சரணம்
கண்விழித்த கமலமன்னர்

கவர்ச்சிபொங்கும் பார்வையும்

மெள்ள மெள்ள சொரிந்து நிற்கும்

மேன்மைமிக்க குரவர்கள்

செல்வமென்று போற்றுமெங்கள்

உயிரில்வாழும் செந்தமிழ்

அல்லல் நீக்கி ஆடசிகாண

அருள் வழங்கும் வாணியாய்

இதையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "link|date=டிசம்பர் 2021 |bot=InternetArchiveBot". Archived from the original on 2011-09-07. பார்க்கப்பட்ட நாள் 2011-12-14.
  2. "யா/நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம்". Archived from the original on 2012-07-13. பார்க்கப்பட்ட நாள் 2011-12-05.
  3. "Thousands gather to commemorate first Black Tiger". தமிழ்நெட். 5 July 2003. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=9364. 
  4. Ferdinando, Shamindra (6 July 2003). "LTTE commemorates Black Tiger day in govt areas". தி ஐலண்டு (இலங்கை). http://www.island.lk/2003/07/06/news01.html. 

வெளி இணைப்புகள்

தொகு