நெல்லியடி சமர்
நெல்லியடி சமர் (Battle of Nelliady) என்பது ஈழப் போரின் ஆரம்ப கட்டத்தில் நடந்த ஒரு சமராகும். இது 1987 சூலை 5 அன்று இது நிகழ்ந்தது. அன்று வட இலங்கையின், யாழ்ப்பாண மாவட்டம், நெல்லியடி நகரத்தில் உள்ள நெல்லியடி மத்திய கல்லூரியில் அமைந்துள்ள இலங்கை இராணுவ முகாம் மீது 50 பேர் கொண்ட விடுதலைப் புலிகள் குழுவினர் தாக்கியபோது இந்த சமர் நடந்தது. 1987 ஆம் ஆண்டு சூன் மாதம் நெல்லியடிப் பகுதியை விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றிய வடமராட்சி நடவடிக்கைக்குப் பின்னர் இலங்கைப் படைகளுக்கு நடந்த இரத்தக்களரியான போராக இந்தத் தாக்குதல் அமைந்திருந்தது. நெல்லியடி இராணுவ முகாம் மீதான தாக்குதலில் இலங்கைப் படையினரில் 19 பேர் கொல்லப்பட்டதுடன் 31 பேர் காயமடைந்தனர். அதே நேரத்தில் விடுதலைப் புலிகள் தங்கள் முதலாவது தற்கொலை குண்டுத் தாக்குதலை கேப்டன் மில்லரைக் கொண்டு நடத்தினர்.[1][2][3]
நெல்லியடி சமர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
முதலாம் ஈழப்போர் மற்றும் இலங்கை உள்நாட்டுப் போரின் ஒரு பகுதி பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
இலங்கை | தமிழீழ விடுதலைப் புலிகள் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ஜெனரல் சிரில் ரணதுங்க | வேலுப்பிள்ளை பிரபாகரன் | ||||||
படைப் பிரிவுகள் | |||||||
கெமுனு வாட்ச், இலங்கை கவசப் படை | கரும்புலிகள் | ||||||
பலம் | |||||||
~150 துருப்புக்கள் | ~50 போராளிகள் | ||||||
இழப்புகள் | |||||||
19 பேர் கொல்லப்பட்டனர் 31 பேர் காயமுற்றனர் [1] | ஒருவர் கொல்லபட்டார் இரு தற்கொலை குண்டுதாரிகள் வெடித்தனர் |
பின்னணி
தொகுஇலங்கை உள்நாட்டுப் போர் தீவிரமடைந்த நிலையில், யாழ்ப்பாணக் குடாநாட்டில் விடுதலைப் புலிகளின் தலைமையையும் போராளிகளையும் சுற்றி வளைத்து அழிப்பதற்காக 1987 ஆம் ஆண்டு சூன் மாதம் இலங்கை ஆயுதப்படை வடமராட்சி நடவடிக்கையை துவக்கியது. அதற்கு கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகள் அரந்தலாவ படுகொலை மூலமாக பதிலடி கொடுத்தனர். இலங்கை இராணுவம் அதன் நோக்கங்களை முடிப்பதற்குள் அதன் தாக்குதலை நிறுத்துமாறு இந்தியா இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பூமாலை நடவடிக்கையைத் தொடங்கியதால் தாக்குதல் மேற்கொண்டு தொடராமல் நிறுத்தப்பட்டது. இந்த தாக்குதலின் போது நெல்லியடி நகரப்பகுதி போராளிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டது. மேலும் இலங்கை இராணுவம் நெல்லியடி மத்திய கல்லூரியில் தன் முகாமை நிறுவியது. வடமராட்சி நடவடிக்கை முடிவடைந்ததைத் தொடர்ந்து, இந்தியாவிடம் ரா அமைப்பிடமிருந்து ஒரு தொகுதி வெடிபொருட்களைப் பெற்ற விடுதலைப் புலிகள் இராணுவத்தின் மீது பல பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டனர். இதில் விடுவிக்கப்பட்ட கைதிகளை ஏற்றிச் சென்ற இராணுவ வாகனத்தைக் குறிவைத்து கண்ணிவெடியை வெடிக்கச் செய்ததில், ஏழு கைதிகளும் மூன்று வீரர்களும் கொல்லப்பட்டனர். அத்துடன் யாழ்ப்பாண நகரத்தில் இருந்த இலங்கை தொலைத்தொடர்புத் துறை கட்டடத்தின் மீது வெடிபொருட்கள் நிறைந்த நவீன கவச டிரக் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலால் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து. மேலும் 50 போராளிகள் கொண்ட குழு ஒன்று பாதுகாவலர்களைத் தாக்கி மூன்று வீரர்களையும் பல ஆயுதங்களையும் கைப்பற்றியது.[4][5]
வடமராட்சி நடவடிக்கையின் துவக்க காலத்தில் நெல்லியடியைக் கைப்பற்றிய கெமுனு கண்காணிப்புப் படையைச் சேர்ந்த சுமார் 100 வீரர்கள் நெல்லியடி முகாமில் நிலைகொண்டிருந்தனர். அவர்களுக்கு அல்விஸ் சலாடின் கவச வண்டி மற்றும் இரண்டு ஃபெரெட் சாரணர் கார்கள் பொருத்தப்பட்ட இலங்கை கவசப் படையின் கவச உளவுப் படையினர் துணையும் இருந்தது.[5]
தாக்குதல்
தொகுநெல்லியடி முகாமில் இருந்த படையினர், அந்தப் பகுதி போராளிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக நம்பி நிம்மதியடைந்தனர். இரவு 8 மணிக்குப் பிறகு, முகாம் தீவிர ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானது. போராளிகள் முகாமை அடுத்துள்ள பல கைவிடப்பட்ட கட்டடங்களுக்குள் நுழைந்து தங்கள் தாக்குதலுக்கு அவற்றை மறைவிடமாகப் பயன்படுத்தினர். தாக்குதலின் முக்கிய நிகழ்வாக வெடிப்பொருட்கள் ஏற்றப்பட்ட இரண்டு லாரிகள் முகாமுக்கு செல்லும் சாலைக்கு விரைந்தன. எறிகணைகள் மற்றும் துப்பாக்கி கையெறி குண்டுகள் மூலம் சாலைத் தடைகள் அகற்றப்பட்ட பிறகு லாரிகள் முகாமை நோக்கி விரைவாக இயக்கப்பட்டன. ஒரு லாரி கவிழ்ந்து வெடித்தது, ஆனால் மில்லர் ஓட்டிவந்த மற்றோரு லாரி முகாமைத் தாக்கி வெடித்தது. முகாம் உள்ள பள்ளி கட்டடத்தின் ஒரு பகுதி அழித்து, வீரர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கினர். பல போராளிகள் முகாமுக்குள் நுழைந்து தாக்குதல் தொடுத்தனர். வீரர்கள் கடுமையான எதிர்த் தாகுதலைத் தொடுத்தனர். இராணுவம் வருவதில் தாமதம் ஏற்பட்டதால், துப்பாக்கிச் சண்டை பல மணி நேரம் நீடித்தது. உலங்குவானூர்திகள் மூலம் வலுவூட்டல்களைத் தரையிறக்கும் முயற்சி பலத்த துப்பாக்கிச் சூடு காரணமாக தோல்வியடைந்தது. சாலைகள் வழியாக துணைப்படைகள் வருவதற்கு வழியில் புதைக்கபட்ட மிதிவெடிகள் தடையாக இருந்தன. என்றாலும் ஒருவழியாக வலுவூட்டல்கள் வந்தவுடன் போராளிகள்கள் பின்வாங்கினர். துருப்புக்கள் சடலங்களைத் தேடி இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டபோது, எறிகணைகள்மற்றும் சிறிய ஆயுதங்களால் மீண்டும் போராளிகள் தாக்குதல்களைத் தொடங்கினர்.[4][5]
பின்விளைவுகள்
தொகுஇந்த தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டதாகவும், 31 பேர் காயமடைந்ததாகவும் இராணுவம் அதிகாரப்பூர்வமாக கூறியது. 2 தற்கொலை குண்டுதாரிகள் உட்பட 3 போராளிகளை இழந்ததாகவும், சிறிய ஆயுதங்கள், வெடிமருந்துகள், ஒரு மோட்டார் லாஞ்சர் ஆகியவற்றைக் கைப்பற்றியதாகவும், 39-100 வீரர்கள் வரை கொல்லப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் கூறினர். பிரபாகரன் மில்லரை கேப்டன் மில்லர் என்று அழைத்தார். மேலும் அவரை விடுதலைப் புலிகள் முதலாவது கருப்பு புலி (தற்கொலை குண்டுதாரி) என கொண்டாடினர். ஒவ்வொரு ஆண்டும் சூலை 5 அன்று கரும்புலிகள் நாளாக கொண்டாடப்படுகிறது. அன்று விடுதலைப் புலிகளால் நினைவஞ்சலியும், முக்கிய தாக்குதல்களும் நடத்தபட்டன. சில நாட்களுக்குப் பிறகு போராளிகள் நெல்லியடி மீது மீண்டும் மோட்டார் குண்டுகளை வீசியதில் மேலும் பத்து வீரர்கள் காயமடைந்தனர். ஜூலை 11 அன்று வடமராச்சி பகுதியில் போராளிகளை வெளியேற்றுவதற்காக இராணுவம் "ஆபரேஷன் கிளீன் ஸ்வீப்" என்ற நடவடிக்கையைத் தொடங்கியது, அதில் 3 வீரர்களை இழந்ததற்காக 18 போராளிககள் கொல்லப்பட்டதாகவும் கூறியது. 29 யூலை 1987 அன்று இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் யூலை 30 அன்று இந்திய இராணுவத்தின் 54 வது காலாட்படை பிரிவின் முன்னணிப் படைகள் இந்திய அமைதி காக்கும் படையின் ஒரு பகுதியாக இலங்கையில் தரையிறங்கியது.[4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Humanitarian Operation Factual Analysis July 2006 – May 2009 (PDF). Ministry Of Defence Democratic Socialist Republic Of Sri Lanka. Archived from the original (PDF) on 5 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 9 September 2021.
{{cite book}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Chandraprema, C. A. (2012). Gota's War. Colombo: Piyasiri Printing Systems. pp. 215–216.
- ↑ "June '93 peace moves preceded stunning battlefield defeats". Archived from the original on 30 May 2019. பார்க்கப்பட்ட நாள் 29 September 2021.
- ↑ 4.0 4.1 4.2 "Operation Liberation: 25 years on". groundviews.org. Groundviews. பார்க்கப்பட்ட நாள் 29 September 2021.
- ↑ 5.0 5.1 5.2 5.3 Wickremesekera, Channa (2016). The Tamil Separatist War in Sri Lanka. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781317293859.