நெவர் ஹேவ் ஐ எவர்

நெவர் ஹேவ் ஐ எவர் (Never Have I Ever) என்பது அமெரிக்க நாட்டு வயது வருவோருக்கான விடலைப் பருவ நகைச்சுவை நாடகம் ஆகும்.[1] இந்த தொடரை மிண்டி காலிங் மற்றும் லாங் ஃபிஷர் ஆகியோர் இணைந்து தயாரிக்க, மைத்ரேயி இராமகிருஷ்ணன், பூர்ணா ஜெகன்நாதன், ரிச்சா மூர்ஜனி, ஜாரன் லெவிசன் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

நெவர் ஹேவ் ஐ எவர்
வகைநகைச்சுவை நாடகம்
விடலைப் பருவ நாடகம்
உருவாக்கம்மிண்டி காலிங்
லாங் ஃபிஷர்
நடிப்பு
கதைசொல்லி
பின்னணி இசைஜோசப் ஸ்டீபன்ஸ்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
பருவங்கள்1
அத்தியாயங்கள்10 (list of episodes)
தயாரிப்பு
நிருவாக தயாரிப்பு
  • மிண்டி காலிங்
  • லாங் ஃபிஷர்
  • ஹோவர்ட் க்ளீன்
  • டேவிட் மைனர்
  • டிரிஸ்ட்ராம் ஷாபீரோ
  • அப்துல்லாஹி யாகசாய்
படப்பிடிப்பு தளங்கள்லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா
ஓட்டம்22–30 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்
  • காலிங் இன்டர்நேஷனல், இன்க்.
  • ஒரிஜினல் லாங்ஸ்டர்
  • 3 ஆர்ட்ஸ் என்டேர்டைன்மெண்ட்
  • யூனிவேர்சல் டெலிவிஸின்
விநியோகம்நெற்ஃபிளிக்சு
ஒளிபரப்பு
அலைவரிசைநெற்ஃபிளிக்சு
ஒளிபரப்பான காலம்ஏப்ரல் 27, 2020 (2020-04-27)

இது ஏப்ரல் 27, 2020 அன்று நெற்ஃபிளிக்சு என்ற இணையத்தில் வெளியிடப்பட்டது. மேலும் இது ஒரு தமிழ் அமெரிக்க உயர்நிலைப் பள்ளி மாணவி தனது தந்தையின் மரணத்தைக் கையாளும் பிரச்சனைகளை விளக்குகின்றது.[2][3][4] இந்தத் தொடர் மக்களிடையே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வெற்றியடைத்துள்ளது.[5] இந்த தொடரின் இரண்டாம் பருவம் 15 ஜூலை 2021 இல் வெளியானது.[6]

கதை சுருக்கம்

தொகு

கலிபோர்னியாவின் ஷெர்மன் ஓக்ஸ் நகரைச் சேர்ந்த 15 வயது தமிழ் குடும்பத்தை சேர்ந்த சிறுமி தேவி விஸ்வகுமார் (மைத்ரேயி இராமகிருஷ்ணன்) அவர்களைச் சுற்றி கதை நகர்கின்றது.

தேவி விஷ்வகுமாரின் தந்தை மோகன் (செந்தில் ராமமூர்த்தி) இறந்துவிட அதன் அதிர்ச்சியில் அவளின் இரு கால்களும் செயலிழந்துவிடுகின்றன. நாட்காலியிலே முடங்குகிறது அவளது பள்ளிக்காலம். இதனால் கேலிக்கு உள்ளாகும் தேவி, புதுக் கல்வியாண்டைத் தனதாக்கப் பள்ளியின் அழகான மாணவனை சந்திக்க செய்ய முயற்சி செய்வதுதான் கதை. ஆனால் கண்டிப்பான அம்மா நளினி (பூர்ணா ஜெகன்நாதன்), நண்பர்கள், குடும்பம் மற்றும் உணர்வுகளுக்கு நடுவில் இவள் எப்படி நினைத்ததை வெற்றிகொள்கின்றாள் என்பதை இக் கதை விளக்குகின்றது.

நடிகர்கள்

தொகு

முதன்மைக் கதாபாத்திரம்

தொகு
  • மைத்ரேயி இராமகிருஷ்ணன் - தேவி விஸ்வகுமார்[7]
    • தனது வாழ்க்கையை மேம்படுத்த விரும்பும் 15 வயது உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த ஒரு இளம் பெண்.
  • பூர்ணா ஜெகன்நாதன் - வைத்தியர். நளினி விஸ்வகுமார்
    • தேவியின் தாயார் மற்றும் கண்டிப்பானவர்.
  • ரிச்சா மூர்ஜனி - கமலா
    • தேவியின் உறவினர். கால்டெக்கில் பி.எச்.டி படிப்பதற்காக தேவி குடுப்பதுடன் தங்கியுள்ளார்
  • ஜாரன் லெவிசன் - பென் கிராஸ்
    • ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவன்
  • டேரன் பார்னெட் - பாக்ஸ்டன் ஹால் யோஷிடா
    • 16 வயது உயர்நிலைப் பள்ளி மேல் வகுப்பை சேர்ந்தவன் மற்றும் தேவி மீது இவன் காதல் வசப்படுகின்றான்.
  • இச்சான் மெக்கன்ரோ[8]

துணைக் கதாபாத்திரங்கள்

தொகு
  • ரமோனா யங் - எலினோர் வோங்
    • தேவியின் சிறந்த நண்பர்களில் ஒருவர்.
  • லீ ரோட்ரிக்ஸ் - ஃபேபியோலா டோரஸ்
    • தேவியின் சிறந்த நண்பர்களில் ஒருவர்.
  • நிக்கேசி நாஷ் - வைத்தியர். ஜேமி ரியான்
    • தேவியின் சிகிச்சையாளர்.
  • செந்தில் ராமமூர்த்தி - மோகன் விஸ்வகுமார் (தேவியின் தந்தை)
  • எடி லியு - ஸ்டீவ் (கமலாவின் காதலன்)
  • கிறிஸ்டினா கார்ட்னர் - ஈவ்
  • பெஞ்சமின் நோரிஸ் - ட்ரெண்ட் ஹாரிசன்
  • டினோ பெட்ரெரா - ஜோனா ஷார்ப்
  • ஜெய் சு பார்க்- ஜாய்ஸ் வோன்

சிறப்புத் தோற்றம்

தொகு
  • பிரகதி குருபிரசாத்[9]
  • அஞ்சுல் நிகம் - ராஜ்

நடிகர்களின் தேர்வு

தொகு

இந்தத் தொடரில் தேவி விஸ்வகுமார் என்ற பாத்திரத்தில் நடிக்க விடுத்த அழைப்பை ஏற்று உலகம் முழுவதும் இருந்து 15 ஆயிரம் போ் விண்ணப்பித்திருந்தனர்.[10] ஆனால் முன்னர் எந்தவித நடிப்பு அனுபவங்களும் இல்லாத மைத்ரேயி இராமகிருஷ்ணன் என்பவர் இத்தொடரில் நடிக்கத் தெரிவானார்.[11] இவர் ஒரு ஈழத்து தமிழ் பெண் ஆவார். இவா் இதற்க்கு முன் உயர்நிலைப் பள்ளியில் ஒரு நாடகத்தை அரங்கேற்றிய அனுபவத்தை மட்டுமே கொண்டிருந்தார்.

தயாரிப்பு

தொகு

இந்த தொடரை தயாரிப்பாளரான மிண்டி காலிங் மற்றும் இணை தயாரிப்பாளா் லாங் ஃபிஷர் ஆகியோர் தயாரித்துள்ளனர். இது தயாரிப்பாளரான கலிங்கின் குழந்தைப் பருவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. என்பது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு

தொகு

இந்தத் தொடர் 2019 ஆம் ஆண்டில் படமாக்கப்பட்டது, 2019 அக்டோபர் 31 ஆம் தேதி தயாரிப்பு முடிவடைந்தது.[12]

வரவேற்பு

தொகு

அழுகிய தக்காளிகள் என்ற இணையம் இந்தத் தொடர் 50 மதிப்புரைகளின் அடிப்படையில் 96% ஒப்புதல் மதிப்பீட்டைக் கொண்டுள்ளது, சராசரியாக 7.8 / 10 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. மெட்டாக்ரிடிக் என்ற இணையத்தில் 18 மதிப்புரைகளின் அடிப்படையில் 100 இல் 80 மதிப்பெண்களைக் கொண்டுள்ளது, இது "பொதுவாக சாதகமான மதிப்புரைகளைக் குறிக்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Mindy Kaling's Netflix show "Never Have I Ever" a hit with critics, viewers | Boston.com". www.boston.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-06.
  2. Shafer, Ellise (April 15, 2020). "TV News Roundup: Netflix Releases 'Never Have I Ever' Trailer (Watch)". Variety (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் April 16, 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
  3. "'Be that change': Maitreyi Ramakrishnan on starring in Mindy Kaling's new comedy". CBC. August 30, 2019. https://www.cbc.ca/news/entertainment/ramakrishnan-mindy-kaling-netflix-1.5265663. 
  4. Murphy, Chris (April 15, 2020). "Dear Gods, Meet Devi, a Young Mindy Kaling in Netflix's Never Have I Ever". Vulture (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் April 16, 2020.
  5. "Never Have I Ever: Season 1". Rotten Tomatoes. பார்க்கப்பட்ட நாள் April 29, 2020.
  6. Pedersen, Erik (June 10, 2021). "'Never Have I Ever' Season 2 Gets Netflix Premiere Date". Deadline Hollywood. பார்க்கப்பட்ட நாள் June 10, 2021.
  7. Maloney, Alli. "Meet the Cast of Netflix's "Never Have I Ever," Your Next Fave Teen Comedy". Teen Vogue (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் April 22, 2020.
  8. Petski, Denise; Petski, Denise (2019-09-11). "John McEnroe To Narrate Netflix's Kaling/Fisher Comedy Series 'Never Have I Ever'". Deadline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-14.
  9. Sunder, Gautam (April 29, 2020). "After 'Never Have I Ever', Pragathi Guruprasad has Hollywood firmly on her mind". The Hindu.
  10. "Canadian teen nabs lead role in upcoming Mindy Kaling comedy for Netflix". CBC News.{{cite web}}: CS1 maint: url-status (link)
  11. McHenry, Jackson (2020-04-29). "Never Have I Ever's Two Heartthrobs Are Team Each Other". Vulture (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-12.
  12. "Who Plays Ben On 'Never Have I Ever'? Meet Jaren Lewison, Star Of Mindy Kaling's New Netflix Show". YourTango (in ஆங்கிலம்). 2020-05-01. பார்க்கப்பட்ட நாள் 2020-05-26.

வெளிப்புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெவர்_ஹேவ்_ஐ_எவர்&oldid=4152858" இலிருந்து மீள்விக்கப்பட்டது