நேகா கிருபாள்

நேகா கிருபாள் (Neha Kirpal) பத்தாண்டுகளுக்கு மேலாக, படைப்பு மற்றும் சமூகத் துறைகளில் பணியாற்றி வருகிறார். இந்தியாவின் முதல் சர்வதேச கலை கண்காட்சியான இந்தியக் கலைக் கண்காட்சியை நிறுவிய இவர் அதை பத்து வருடங்கள் வெற்றிகரமாக அதை நடத்தினார். பின்னர் இவ்வியாபாரத்தை விற்றுவிட்டு மனநலம் காரணமாக ஒதுக்கப்பட்டவர்களுக்காக தனது கவனத்தை முழுவதுமாக நகர்த்தினார். ஒரு சமூகத் தொழில்முனைவோராக, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக மனநல சுகாதார பிரச்சினைகளுடனான தனது சொந்த குடும்பத்தின் போராட்டங்களிலிருந்து உருவான மனநல சுகாதார இடைவெளியைத் தீர்ப்பதில் மிகுந்த ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் இணைப்பதில் இவர் பணிபுரிகிறார்.

நேகா கிருபாள்
2018இல் நேகா கிருபாள்
பிறப்புபுது தில்லி
தேசியம் இந்தியர்
அறியப்படுவதுஇந்தியக் கலைக்காண்ட்சியை நிறுவியவர்

2019 ஆம் ஆண்டில், இவர், மருத்துவர் அமித் மாலிக் என்பவருடன் "இன்னர்ஹவர்" நிறுவனத்தில் இணை நிறுவனராக சேர்ந்தார். இது தொழில்நுட்ப தலைமையிலான மனநலங்களுக்கானத் தளமாகும். இது பலவிதமான மனநல நிலைமைகளுக்கு சர்வ சாதாரண தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குகிறது.

வாழ்க்கை தொகு

நேகா புது தில்லியில் பிறந்தார். அங்கு தனது குழந்தைப் பருவத்தை கழித்தார். சர்தார் படேல் வித்யாலயாவில் படித்த பின்னர், லேடி சிறீராம் கல்லூரியில் அரசியல் அறிவியல் படிப்பதற்குச் சென்றார். சில வருடங்கள் இந்தியாவில் சந்தைப்படுத்தல் தகவல் தொடர்புத் துறையில் பணியாற்றிய பிறகு, இவர் இண்டன் கலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்புக்காக இலண்டனுக்குச் சென்றார்.

தொழில் தொகு

2008ஆம் ஆண்டில், "இந்தியக் கலைக் கண்காட்சி" என்ற சர்வதேச கலைக் கண்காட்சியை நிறுவினார். பத்து ஆண்டுகள் வெற்றிகரமாக இந்த வணிகத்தை நடத்திய பிறகு சுவிட்சர்லாந்தின் பேசெலை தலைமையிடமாகக் கொண்ட ஒரு சர்வதேச நேரடி சந்தைப்படுத்தல் நிறுவனமான எம்.சி.எச் நிறுவனத்திற்கு விற்பனை செய்தார்.

2018 முதல், இவர் படைப்புத் துறையிலிருந்து மன ஆரோக்கியத்திற்கு மாறினார். ஒரு சமூகத் தொழில்முனைவோராகவும், பயிற்சியளிக்கப்பட்ட ஆலோசகராகவும், இந்தியாவில் மனநல சுகாதார சேவை வழங்கல்களை மாற்றுவதில் ஆர்வம் கொண்டுள்ளார். தனது சொந்த குடும்ப அனுபவங்களிலிருந்து பலவிதமான மனநல நிலைமைகளுடன் உருவாகிறார்.

இவரது ஆலோசனை நிறுவனமான "லிப்ரம் நிறுவனம்" 2019 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் மனநல தீர்வுகளுக்கான உலகின் முதல் மூலோபாய சிந்தனைக் குழுவாக தொடங்கப்பட்டது. முன்னணி உலகளாவிய விஞ்ஞானி டாக்டர் விக்ரம் படேல் மற்றும் கொள்கை நிபுணர் டாக்டர் சேகர் சக்சேனா ஆகியோருடன் இணைந்து நிறுவப்பட்டது.

நேகாவின் முழு கவனம் இப்போது "இன்னர்ஹவர்" மீது உள்ளது. அங்கு இவர் டாக்டர் அமித் மாலிக் உடன் இணை நிறுவனராக இணைந்துள்ளார். தனிப்பயனாக்கப்பட்ட சுய உதவி கருவிகளைக் கொண்ட பயனர்கள் தங்கள் மனநலப் பயணத்தை ஆதரிக்க உதவும் ஆரம்ப தலையீடுகளை அணுகுவதற்கும் வழங்குவதற்கும் மனநல தொடக்கமானது தீர்த்து வைக்கிறது. இன்று, இந்த அமைப்பு உலகளவில் 100 நகரங்களிலிருந்து 900,000 பயனர்களைக் கொண்டுள்ளது. மேலும், உலகளவில் சுய பாதுகாப்பு பயன்பாடுகளில் 1-2 இடத்தைப் பிடித்துள்ளது.

விருதுகள் தொகு

2015 இல் அனைத்துலக பெண்கள் நாள் அன்று இவருக்கு நாரி சக்தி விருது வழங்கப்பட்டது. [1] இவருடன் சேர்ந்து எட்டு பெண்களுக்கு இதேபோல் நாரி சக்தி விருது வழங்கப்பட்டது. அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த விருதை வழங்கினார்.[2]

போர்ப்ஸ் பட்டியலிட்ட "40 க்கு கீழ் 40"களிலும், "பிசினஸ் டுடே" மூன்று ஆண்டுகளாக இயங்கும் இந்தியாவின் "மிகவும் சக்திவாய்ந்த பெண்கள்" பட்டியலிலும் இவர் இடம் பெற்றுள்ளார். [3]

மேற்கோள்கள் தொகு

  1. "Stree Shakti Puraskar and Nari Shakti Puraskar presented to 6 and 8 Indian women respectively". India Today (in ஆங்கிலம்). March 9, 2015. பார்க்கப்பட்ட நாள் 2020-04-22.
  2. "Nari Shakti Puraskar awardees full list". Best Current Affairs. 9 March 2017. பார்க்கப்பட்ட நாள் 2020-04-18.
  3. "Neha Kirpal". World Economic Forum (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேகா_கிருபாள்&oldid=3886276" இலிருந்து மீள்விக்கப்பட்டது