நேபாள சமசுகிருத பல்கலைக்கழகம்
நேபாள சமஸ்கிருத பல்கலைக்கழகம் (Nepal Sanskrit University) (முன்னர் இதன் பெயர் மகேந்திரா சமஸ்கிருத பல்கலைக்கழகம்)டிசம்பர், 1986ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இப்பல்கலைழகம் நேபாளத்தின் லும்பினி மாநிலத்தின் தாங் மாவட்டத்தில் உள்ள பெல்சுண்டி எனுமிடத்தில் இயங்குகிறது. இது கோரக்கி நகரத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
नेपाल संस्कृत विश्वविद्यालय | |
உருவாக்கம் | 1986 |
---|---|
வேந்தர் | நேபாள பிரதம அமைச்சர் |
துணை வேந்தர் | பேராசிரியர். முனைவர். யாதவப் பிரகாஷ் லாமிச்சேனா |
மாணவர்கள் | 2,100 [1] |
அமைவிடம் | பெல்சுண்டி, தாங் மாவட்டம் லும்பினி மாநிலம் , |
இணையதளம் | nsu.edu.np |
படிப்புகள்
தொகுஇப்பல்கலைக்கழகம் சமசுகிருத மொழியில் இளங்கலை சாஸ்திரி பட்டம், இளங்கலை கல்வியியல் பட்டம், முதுகலை ஆச்சாரியர் பட்டம் மற்றும் பாரம்பரிய மற்றும் நவீன படிப்புகளில் முனைவர் பட்டங்கள் வழங்குகிற்து. மேலும் இப்பல்கலைக்கழகம் இளங்கலை ஆயுர்வேதப் படிப்பில் மருத்துவம் மற்றும் இரண சிகிச்சை கற்றுத்தரப்படுகிறது. சமசுகிருதம் மற்றும் பௌத்தம் அடிப்படையில் இளங்கலை பட்டப் படிப்பில் யோகக் கலையை கற்பித்தல். மேலும் இப்பல்கலைக்கழகம் இந்து சமய ஆலயங்கள் கட்டுமானம் தொடர்பான ஸ்தபதி (கட்டிடக்கலை) நிறுவனம் துவக்க உள்ளது. இப்பல்கலைகழகத்தில் நாடு முழுவதும் உள்ள 13 கல்லூரிகள் இணைந்துள்ளது.
நோக்கங்கள்
தொகு- சமஸ்கிருத மொழி மற்றும் இலக்கியத்தை கற்பித்தல்/கற்றல் செயல்பாடுகள் மற்றும் ஆராய்ச்சிகள் செய்தல்.
- சமஸ்கிருதக் கல்வியை நாட்டின் மிக உயர்ந்த நிலை வரை முறைப்படுத்துதல்.
- நேபாள சமூகத்தின் துறைகளில் சமஸ்கிருதக் கல்வியைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல்.
- நேபாளத்தை சமஸ்கிருத கல்வி மூலம் கற்கும் மையமாக உருவாக்குதல்.
நிர்வாகம்
தொகுநேபாள பிரதம அமைச்சர் இப்பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஆவார். நேபாளத்தின் கல்வி அமைச்சர் இதன் இணை-வேந்தர் ஆவார். துணை வேந்தர் இப்பல்கலைக்கழகத்தின் தலைமை நிர்வாகி ஆவார்.
இப்பல்கலைகழகததுடன் இணைந்த உறுப்பு நிறுவனங்கள்
தொகு- வால்மீகி வித்தியாபீடம், காத்மாண்டு மாவட்டம், பாக்மதி மாநிலம்
- பிந்தேஸ்வர் வித்தியாபீடம், சுன்சரி மாவட்டம், நேபாள மாநில எண் 1
- ஜனதா வித்தியாபீடம், தாங் மாவட்டம், லும்பினி மாநிலம்
- பிஷோவ் வித்தியாலயா வித்தியாபீடம், தாங் மாவட்டம், லும்பினி மாநிலம்
- மைய ஆயூர்வேத வித்தியாபீடம், தாங் மாவட்டம், லும்பினி மாநிலம்
- காளிகா சமஸ்கிருத வித்தியாபீடம், நவல்பராசி மாவட்டம், கண்டகி மாநிலம்
- ஹரிஹர் சமஸ்கிருத வித்தியாபீடம், அர்காகாஞ்சி மாவட்டம், லும்பினி மாநிலம்
- சாரதா வித்தியாபீடம், கஞ்சன்பூர் மாவட்டம், தூர-மேற்கு மாநிலம்
- பிபிகே சமஸ்கிருத வித்தியாபீடம், சோலுகும்பு மாவட்டம், நேபாள மாநில எண் 1
- பானு சமஸ்கிருத வித்தியாபீடம், தனஹு மாவட்டம், கண்டகி மாநிலம்
- விந்தபாசினி வித்தியாபீடம், காஸ்கி மாவட்டம், கண்டகி மாநிலம்
- யாக்ஞவல்கீய லட்சுமிநாராயணன் வித்தியாபீடம், மகோத்தரி மாவட்டம், மாதேஷ் மாநிலம்
- ருரு சமஸ்கிருத வித்தியாபீடம், குல்மி மாவட்டம், லும்பினி மாநிலம்
- ஜனகராஜா வித்தியாபீடம், தனுஷா மாவட்டம், மாதேஷ் மாநிலம்
- இராதாதாமோதர் சமஸ்கிருத வித்தியாபீடம்,சியாங்ஜா மாவட்டம், கண்டகி மாநிலம்