கோரக்கி
கோரக்கி (Ghorahi) (நேபாள மொழி|நேபாளி]]: घोराही उपमहानगरपालिका), நேபாளத்தின் ஏழாவது பெரிய நகரமும், துணைநிலை மாநகராட்சியும், தாங் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் ஆகும்.
கோரக்கி
घोराही उपमहानगरपालिका | |
---|---|
அடைபெயர்(கள்): हरित नगर, महको सहर | |
குறிக்கோளுரை: Clean Green Ghorahi | |
ஆள்கூறுகள்: 28°2′N 82°29′E / 28.033°N 82.483°E | |
நாடு | நேபாளம் |
மாநிலம் | மாநில எண் 5 |
மண்டலம் | ராப்தி மண்டலம் |
மாவட்டம் | தாங் |
மனித மேம்பாட்டுச் சுட்டெண் | 0.41 Low |
மனித வறுமைச் சுட்டெண் | ▼ 20.8 Very Low |
எழுத்தறிவு | 73% Medium |
அரசு | |
• வகை | மேயர்-மாநகராட்சி மன்றக் குழு |
• மேயர் | நாரு லால் சௌத்திரி |
• துணை மேயர் | சீதா நௌபனே |
• செயல் அலுவலர் | கிருஷ்ண பிரசாத் சப்கோடா |
பரப்பளவு of submetropolitan city | |
• நகரம் | 522.21 km2 (201.63 sq mi) |
தாங் மாவட்டம்: 2955sq km தாங் சமவெளி: 1550 sq km | |
ஏற்றம் | 701 m (2,300 ft) |
மக்கள்தொகை (2011)1,55,164 | |
• நகரம் | 1,55,164 |
• பெருநகர் | 1,56,164 Male: 70,000 Female: 85,000 |
தாங் மாவட்டம்: 5,48,141 தாங் சமவெளி: 3,51,023 | |
மொழிகள் | |
• வட்டார மொழிகள் | நேபாளி, குரூங், காம் மகர், |தாரு |
• அலுவல் மொழி | நேபாளி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:45 (நேபாளச் சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 22400 |
இடக் குறியீடு | 082 |
இணையதளம் | www.ghorahimun.gov.np |
அமைவிடம்
தொகுமத்தியமேற்கு நேபாளத்தின், மாநில எண் 5ல் உள்ள தாங் மாவட்டத்தில், உள்தராய் சமவெளியில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் பழைய பெயர் திருபுவன்நகர் ஆகும்.
புவியியல்
தொகுகோரக்கி நகரம், காத்மாண்டிற்கு தென்கிழக்கே 413 கிமீ தொலவிலும்; ராப்தி மண்டலத்தின் பெரிய நகரமான கோரக்கியின் தெற்கில், சிவாலிக் மலைத்தொடரும்; வடக்கில் மகாபாரத மலைத்தொடரும் உள்ளது. இந்நகரத்தின் கிழக்கில் பபாய் ஆறு பாய்கிறது. மகாபாரத மலையடிவாரத்தில் அமைந்த கோரக்கி நகரம், கடல் மட்டத்திலிருது 2300 அடி (701 மீ) உயரத்தில் உள்ளது.
போக்குவரத்து
தொகுதரிகோன் எனுமிடத்தில் அமைந்த தாங் வானூர்தி நிலையம், தாங் நகரத்திலிருந்து 23 கிமீ தொலவில் உள்ளது. காட்மாண்டு நகரத்திற்கு அடிக்கடி வானூர்தி சேவைகள் உள்ளது. இந்நகரத்திலிருது 152 கிமீ தொலைவில் நேபாள்கஞ்ச் பன்னாடு வானூர்தி நிலையம் உள்ளது.
மக்கள்தொகை
தொகுகோரக்கி மற்றும் அதன் புறநகர் பகுதிகளின் மொத்த மக்கள்தொகை 156,164 ஆகும்.[1] வேறு மாவட்டத்தவர்கள் மற்றும் மாநிலத்தவர்கள், வேலைவாய்ப்பிற்காக, இந்நகரில் அதிகமாக குடியேறுகின்றனர்.[2]
கல்வி
தொகுகோரக்கி நகரத்தின் சராசரி எழுத்தறிவு 73% ஆகும். நேபாள சமசுகிருத கல்லூரி, மகேந்திர பல்நோக்கி கல்லூரி, ஆயுர்வேதக் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள் இதனருகே உள்ளது. மத்திய மேற்கு நேபாளத்தில், கோராக்கி நகரம் கல்வி மையமாக விளங்குகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "घोराही उप-महानगरपालिकाको आधिकारिक वेभसाइटमा तपाईलाई स्वागत छ । - घोराही उप-महानगरपालिका". ghorahimun.gov.np.
- ↑ "Nepal Census 2001". Nepal's Village Development Committees. Digital Himalaya. Archived from the original on 12 October 2008. பார்க்கப்பட்ட நாள் 21 September 2008.
வெளி இணைப்புகள்
தொகு- [www.ghorahi.gov.np கோரக்கி நகரத்தின் இணையத்தளம்]