நேமது சசாது
நேமது சதாது ((Nemat Sadat பாரசீக மொழி: نعمت ساداتஆப்கானிஸ்தான்-அமெரிக்க பத்திரிகையாளர், நாவலாசிரியர், மனித உரிமை ஆர்வலர் மற்றும் ஆப்கானிஸ்தானின் அமெரிக்க பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் துறையின் முன்னாள் பேராசிரியர் ஆவார், [1] அவரது முதல் புதினமான தி கார்பெட் வீவர் மற்றும் நங்கை, நம்பி, ஈரர், திருனர் உரிமைகளுக்கான பிரச்சாரத்திற்காக அறியப்படுகிறார், குறிப்பாக முஸ்லீம் சமூகத்தில் ஓரினச் சேர்க்கைக்கான சமூக மற்றும் கலாச்சார இஸ்லாமிய அணுகுமுறைகள் என்பதில் கவனம் செலுத்துகிறார் . [1] [2] [3] நேமது சதாது தன்னை உகவர் என்பதனை வெளிப்படையாக அறிவித்த ஆப்கானித்தான் நபர்களில் ஒருவர் ஆவார். மேலும், நங்கை, நம்பி, ஈரர், திருனர், பாலியல் சுதந்திரம், உரிமைகளுக்காக பிரச்சாரம் மேற்கொண்டார். [1] [2]
சமூக செயற்பாடு
தொகு2012 இல், ஆப்கானிஸ்தான் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் உதவிப் பேராசிரியர் பதவியைப் பெற்று சாதத் காபூலுக்குத் திரும்பினார். [4] பல்கலைக் கழகத்தில் வேலை வாய்ப்பின் போது, அவர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி ஆப்கானிஸ்தானில் ந,ந,ஈ,தி உரிமைகளுக்காக வெளிப்படையாக பிரச்சாரம் செய்தார். [5]
ஜூலை 2013 இல், அவரது பொது நடவடிக்கை ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் கவனத்திற்கு வந்தது, இது அவரது செயல்பாடுகள் நாட்டில் இஸ்லாத்தின் மதிப்பை சீர்குலைப்பிற்கு உட்படுத்துவதாகவும், அவரை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதுவதாகவும் குற்றம் சாட்டியது. [6] AUAF இல் இருந்து சாதத் பதவி நீக்கம் செய்யப்பட்டார், அவர், ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி நியூயார்க் நகரில் குடியேறினார். [7]
ஆகஸ்ட் 2013 இல், நேமது சசாது தனது உகவர் பாலுணர்வை பகிரங்கமாக அறிவித்தார், உகவர் என தன்னை வெளிப்படையாக அறிவித்த முதல் ஆப்கான் நாட்டவர் ஆவார். நேமத்தின் கூற்றுப்படி, ஆப்கானிஸ்தானின் முல்லாக்களால் அவருக்கு எதிராக வழங்கப்பட்ட ஃபத்வா உட்பட பல கொலை மிரட்டல்களை சந்தித்துள்ளார்.[8] அதே ஆண்டு அக்டோபரில், சதாத் ஆப்கானிஸ்தான் ஊடகங்களில் பரவலான விரோதத்தினை எதிர்கொண்டார். [4] நவம்பர் 2013 இல் தி கார்டியன் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் தனது ந,ந,ஈ,தி செயல்பாட்டைப் பற்றி பின்வருமாறு சதாத் கூறினார், நான் ஒரு தியாகம் செய்கிறேன், ஆனால் ஆப்கானிஸ்தான் இளைஞர்கள் என்னைப் போலவே அங்கு இருக்கும் ஆப்கான் மற்றும் முஸ்லீம் ஓரினச்சேர்க்கையாளர்கள் இருப்பதை அறிந்து கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கும்.
ஜூன் 2016 இல், 2016 ஒர்லாண்டோ இரவுக் கூடலகத்தில் துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு, நேமத் சதாது தனது பாலியல் மற்றும் பின்னணியால் துன்பங்களை எதிர்கொண்ட ஓர் அமெரிக்க ஓரினச் சேர்க்கையுள்ள முன்னாள் முஸ்லீமாக தனது கருத்தினை வெளிப்படுத்தினார். அவர் சிஎன்என் இன் கிறிஸ்டியன் அமன்பூர், [9] அமரா வாக்கர் மற்றும் டான் லெமன் மற்றும் என்.பி.சி நியூஸ் ஆகியோருக்கு நேர்காணல்களை வழங்குவது உட்பட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கல்ந்து கொண்டார். [10] [11] [12]
மேலும் 2016 இல், பிபிசி ஊடக்கத்தில் ந,ந,ஈ,தி சமூகப் பிரதிநிதியாக இசுலாம் மற்றும் ஓரினச் சேர்க்கையாளார்கள் எனும் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். [13]
வாஷிங்டன், டிசி -யில் 2017 -ல் நடந்த தேசியப் பெருமை அணிவகுப்பில் சாதத் பங்கேற்றார், வாஷிங்டன் பிளேடில் [14] அட்டைப்படத்தில் தோன்றி NPR -இல் நடந்த ஒரு நேர்காணைல் கலந்து கொண்டார். [15]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Afghanistan's 'coming out' for LGBT rights can pave the road to peace". 30 April 2014. https://www.pri.org/stories/2014-04-30/afghanistans-coming-out-lgbt-rights-can-pave-road-peace.
- ↑ 2.0 2.1 "Meet Afghanistan's first openly gay activist and author, Nemat Sadat". https://www.vogue.in/culture-and-living/content/meet-afghanistans-first-openly-gay-activist-and-author-nemat-sadat.
- ↑ "Nemat Sadat: 'I too would like to go back to Afghanistan and not be stoned for being gay'". 7 July 2019. https://www.nationalheraldindia.com/interview/nemat-sadat-i-too-would-like-to-go-back-to-afghanistan-and-not-be-stoned-for-being-gay-lgbtq.
- ↑ 4.0 4.1 "As Russia Runs For the Closet, Afghanistan Comes Out". www.out.com (in ஆங்கிலம்). 21 February 2014. பார்க்கப்பட்ட நாள் 25 October 2020.
- ↑ Rangnekar, Sharif D. (3 August 2019). "Nemat Sadat: Gay, Muslim, Afghan, immigrant" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/international/nemat-sadat-gay-muslim-afghan-immigrant/article28793948.ece. பார்த்த நாள்: 25 October 2020.
- ↑ "Despite Death Threats A Gay Leader Emerges In Afghanistan". www.corcoranproductions.com. https://www.corcoranproductions.com/despite-death-threats-a-gay-leader-emerges-in-afghanistan/. பார்த்த நாள்: 25 October 2020.
- ↑ "As Russia Runs For the Closet, Afghanistan Comes Out". www.out.com. https://www.out.com/news-opinion/2014/02/21/russia-runs-closet-afghanistan-comes-out. பார்த்த நாள்: 25 October 2020.
- ↑ "Afghan-American writer Nemat Sadat on weaving a gay love story, living in a homeless shelter in the US and why he feels at home in India" (in en). The Indian Express. 1 July 2019. https://indianexpress.com/article/lifestyle/art-and-culture/i-have-inherited-the-loss-of-that-golden-age-of-paradise-5808017/. பார்த்த நாள்: 25 October 2020.
- ↑ "Afghan gay rights activist: 'Minority within a minority'". http://www.cnn.com/videos/world/2016/06/13/orlando-intv-afghanistan-amanpour-nemat-sadat.cnn.
- ↑ "After Orlando attack, prevailing view is there are 'not any gays' in Afghanistan". 14 June 2016. https://www.washingtonpost.com/world/asia_pacific/after-brutal-attack-prevailing-view-is-there-are-not-any-gays-in-afghanistan/2016/06/14/daabf704-31a5-11e6-ab9d-1da2b0f24f93_story.html.
- ↑ "Why Death Is Easier Than Coming Out for Some Gay Muslims". https://www.nbcnews.com/feature/nbc-out/orlando-shooting-afghan-americans-grapple-homophobia-shock-n592721.
- ↑ "CNN.com - Transcripts". http://edition.cnn.com/TRANSCRIPTS/1606/14/cnnt.02.html.
- ↑ "فکرلارې: شریعت او افغاني ټولنه د همجنس خوښوونکو په اړه څه نظر لري؟". BBC News پښتو. 8 October 2016. https://www.bbc.com/pashto/multimedia/2016/10/161007_gn_fekarlaray_lgbt. பார்த்த நாள்: 25 October 2020.
- ↑ "Washington Blade - June 16, 2017" (in en). Issuu. https://issuu.com/askrayceenmedia/docs/351381897-washingtonblade-com-volum. பார்த்த நாள்: 25 October 2020.
- ↑ "D.C. Equality March Makes Pride Political" (in en). NPR.org. https://www.npr.org/2017/06/11/532490914/d-c-equality-march-makes-pride-political?t=1602345142514. பார்த்த நாள்: 25 October 2020.