நைட்ரைல் புளோரைடு
நைட்ரைல் புளோரைடு (Nitryl fluoride) என்பது NO2F என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற வாயுவாகக் காணப்படும் இச்சேர்மம் ஒரு வலிமையான ஆக்சிசனேற்ற முகவர் ஆகும். நைட்ரைல் புளோரைடு ஒரு புளோரினேற்ற முகவராகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இராக்கெட் உந்துசக்திகளில் ஓர் ஆக்சிசனேற்றியாகவும் முன்மொழியப்படுகிறது.
| |||
இனங்காட்டிகள் | |||
---|---|---|---|
10022-50-1 | |||
ChemSpider | 59588 | ||
EC number | 233-021-0 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 66203 | ||
| |||
UNII | DAT2I9R64A | ||
பண்புகள் | |||
FNO2 | |||
வாய்ப்பாட்டு எடை | 65.00 g·mol−1 | ||
உருகுநிலை | −166 °C (−267 °F; 107 K) | ||
கொதிநிலை | −72 °C (−98 °F; 201 K) | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய எதிர் மின்னயனிகள் | நைட்ரைல் குளோரைடு, நைட்ரைல் புரோமைடு | ||
ஏனைய நேர் மின்அயனிகள் | நைட்ரோசில் புளோரைடு, சல்பியூரைல் புளோரைடு | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
நைட்ரைல் புளோரைடு ஒரு மூலக்கூறு இனச் சேர்மமாகும். இது ஓர் அயனி அல்ல. குறைந்த கொதிநிலைக்கு இசைவானது. கட்டமைப்பில் 135 பைக்கோமீட்டர் என்ற குறுகிய N-F பிணைப்பு நீளம் கொண்ட சமதள நைட்ரசனைக் கொண்டுள்ளது.
தயாரிப்பு
தொகுஎன்றி மொய்சான் மற்றும் பால் லெபியூ ஆகியோர் நைட்ரைல் புளோரைடை 1905 ஆம் ஆண்டில் நைட்ரசன் டை ஆக்சைடை புளோரினேற்றம் செய்வதன் மூலம் நைட்ரைல் புளோரைடு தயாரித்து பதிவு செய்தனர். இந்த வினை அதிக வெப்ப உமிழ்வு வினையாகும். எனவே இவ்வினை மாசு மிகுந்த விளைபொருள்கள் உருவாக வழிவகுக்கிறது. புளோரின் வாயுவைத் தவிர்த்து விட்டு கோபால்ட்(III) புளோரைடைப் பயன்படுத்தி நைட்ரைல் புளோரைடு தயாரிப்பது ஓர் எளிமையான தயாரிப்பு முறையாகும்:[1]
- NO2 + CoF3 → NO2F + CoF2
வினையில் உருவாகும் CoF2 சேர்மமானது CoF3 சேர்மமாக மீளுருவாக்கப்படுகிறது. மற்ற தயாரிப்பு முறைகளும் விவரிக்கப்பட்டுள்ளன.[2]
பண்புகள்
தொகுநைட்ரைல் புளோரைடு வாயுவின் வெப்ப இயக்கவியல் பண்புகள் அகச்சிவப்பு மற்றும் இராமன் நிறமாலையியல் ஆய்வுகள் மூலம் தீர்மானிக்கப்பட்டது. FNO2 சேர்மத்தின் நிலையான உருவாதல் வெப்பம் -19 ± 2 கிலோ கலோரி/மோல்.3
- 500 கெல்வின் வெப்பநிலையில் குறைந்தபட்சம் ஆறு ஆர்டர்கள் அளவிலும், 1000 கெல்வின் வெப்பநிலையில் இரண்டு ஆர்டர் அளவுகளிலும் நைட்ரைல் புளோரைடின் ஒற்றை மூலக்கூறு சிதைவின் சமநிலையானது வினைபடு பொருள்களுக்குப் பக்கத்தில் உள்ளது.
- ஒரே மாதிரியான வெப்பச் சிதைவை 1200 கெல்வின் வெப்பநிலையில் ஆய்வு செய்ய முடியாது.
- அதிகரிக்கும் வெப்பநிலைக்கு ஏற்ப வினைப்பொருளை நோக்கி வேதிச்சமநிலை மாறுகிறது.
- நைட்ரைல் புளோரைடில் உள்ள N-F பிணைப்பின் 46.0 கிலோகலோரியின் விலகல் ஆற்றல் சாதாரண N-F ஒற்றை பிணைப்பு ஆற்றலை விட சுமார் 18 கிலோகலோரி என குறைவாக உள்ளது. இது NO2 இயங்குறுப்பின் மறுசீரமைப்பு ஆற்றல் காரணமாக இருக்கலாம். அதாவது, FNO2 சேர்மத்தில் உள்ள NO2 இயங்குறுப்பு தனி NO2 மூலக்கூறைக் காட்டிலும் குறைவான நிலைப்புத்தன்மை கொண்டுள்ளது.
பயன்கள்
தொகுகரிம நைட்ரோ சேர்மங்கள், நைட்ரேட்டு எசுத்தர்கள் தயாரிப்பில் நைட்ரைல் புளோரைடு பயன்படுகிறது.
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Davis, Ralph A.; Rausch, Douglas A. (1963). "Preparation of Nitryl Fluoride". Inorganic Chemistry 2 (6): 1300–1301. doi:10.1021/ic50010a048.
- ↑ Faloon, Albert V.; Kenna, William B. (1951). "The Preparation of Nitrosyl Fluoride and Nitryl Fluoride1". Journal of the American Chemical Society 73 (6): 2937–2938. doi:10.1021/ja01150a505. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863.