ந,ந,ஈ,தி இனப்பெருக்கம்

ந,ந,ஈ,தி இனப்பெருக்கம் (LGBT reproduction) என்பது அகனள், உகவர், இருபால், மற்றும் திருநங்கைகள் ( நங்கை, நம்பி, ஈரர், திருனர்) சமூக மக்கள் மலட்டுத்தன்மை சிகிச்சை மூலம் குழந்தைகள் பெற்றுக் கொள்வதனை குறிப்பதாகும். இது ந,ந,ஈ,தி தத்தெடுத்தல் என்பதில் இருந்து வேறுபட்டது.சமீப காலங்களில், உயிரியலாளர்கள் ஒரே பாலின இனப்பெருக்கத்தை எளிதாக்கும் நுட்பங்களை ஆராய்ச்சி செய்து வருகின்றனர். [1] [2]

திருநங்கை கருமுட்டை இணைப்பின் முன்மொழியப்பட்ட முறையின் வரைபடம்

2004 ஆம் ஆண்டில்,ஜப்பானிய விஞ்ஞானிகள் ஒரு சில மரபணுக்களின் செயல்பாட்டை மாற்றியமைப்பதன் மூலம், இரண்டு எலி முட்டைகளை இணைத்து எலிக் குஞ்சினை உருவாக்கினர் [3] 2018 ஆம் ஆண்டில் சீன விஞ்ஞானிகள் இரண்டு பெண் எலிகளிடமிருந்து 29 பெண் எலிக் குஞ்சுகளை உருவாக்கினர். ஆனால் ஆண் எலிகளிடம் இருந்து சாத்தியமான சந்ததிகளை உருவாக்க முடியவில்லை. [4] [5] தோலில் இருந்து பெறப்பட்ட முதல் நிலை உயிரணுக்களில் இருந்து விந்தணுக்களைப் பெறுவது சாத்தியமான வழிகளில் ஒன்றாகும். [6]

உகவர்

தொகு

உகவர் இணை வாடகை கருத்தரிப்பு முறையினை மேற்கொள்ள முடிவு செய்கிறார்கள். வாடகை கருத்தரித்தல் என்பது ஆண்களில் ஒருவரின் விந்தணுக்களால் கருவுற்ற முட்டையை சுமக்கும் பெண் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு குழந்தை பெற்ற்டுத்தலைக் குறிக்கிறது. சில பெண்கள் பணத்திற்காக வாடகை தாய்களாக மாறுகிறார்கள், மற்றவர்கள் மனிதாபிமான காரணங்களுக்காக அல்லது இரு காரணத்திற்காகவும் இருக்கலாம். [7] இது ஆண்களில் ஒருவர் உயிரியல் தந்தையாக இருக்க அனுமதிக்கிறது, மற்றவர் தத்தெடுக்கப்பட்ட தந்தையாக இருப்பார்.

இரண்டு மனிதர்களிடமிருந்து ஒரு கருமுட்டை உருவாக்குவது குறித்த தத்துவார்த்த வேலைகள் நடைபெறுகின்றன், இது இரு மனிதர்களையும் உயிரியல் தந்தைகளாக ஆக்கும், ஆனால் அது தற்போது வரை நடைமுறையில் செயல்படுத்தப்படவில்லை. [8]

அகனள்

தொகு

திருமணம் செய்த இருவரும் பெண் இனப்பெருக்கத் தொகுதி கொண்டிருக்கும் சமயத்தில் கூட்டாளர்-உதவி இனப்பெருக்கம், அல்லது வெளிச் சோதனை முறை கருக்கட்டல் மூலம் இனப்பெருக்கம் செய்யலாம்.

சமீபத்திய ஆய்வில், குழந்தை- பெற்றோரின் உறவுகள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது. அதில் கருமுட்டை வழங்கிய மற்றும் அதனால் பயனடைந்த குடும்பங்கள் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. [9] 6-18 மாதங்களுக்கு இடைப்பட்ட கைக்குழந்தைகள் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர்.கருமுட்டை வழங்கிய தாய்மார்கள் வெளிச் சோதனை முறை கருக்கட்டல் தாய்மார்களை விட குறைவான உணர்திறன் கொண்டவர்களாகவும், கருமுட்டை தான குழந்தைகள் வெளிச் சோதனை முறை கருகட்டல் குழந்தைகளை விட குறைவாக உணர்ச்சிவசப் படக் கூடியவராக இருந்ததும் அதில் கண்டறியப்பட்டது.[9]

இரண்டு பெண்களிடமிருந்து ஒரு கருவணு உருவாக்குவது குறித்த தத்துவார்த்த வேலைகள் செய்யப்படுகின்றன, இது இரு பெண்களும் உயிரியல் தாய்மார்களாக இருக்க உதவும், ஆனால் அது தற்போது வரை நடைமுறையில் செயல்படுத்தப்படவில்லை.[8]

திருநங்கை பெண்கள்

தொகு

பல திருநங்கைகள் குழந்தைகளைப் பெற விரும்புகிறார்கள்.  சிலர் தங்கள் சொந்த விந்து மற்றும் கருமுட்டை தானம் அல்லது வாடகைத் தாய் மூலம் குழந்தைகளைப் பெற முயற்சி செய்கின்றனர். பெண்மையாக்கும் நாளமில்லாச் சுரப்பு சிகிச்சையின் காரணமாக கருவுறுதல் பல்வேறு வழிகளில் தடைபடும்.

ஈஸ்ட்ரோஜன்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் அதிக அளவுகளில் பாலியல் உந்துதல் மற்றும் செயல்பாடு மற்றும் கருவுறுதலை சீர்குலைக்கிறது. [10] [11]

சில திருநங்கைகள் கர்ப்பத்தின் மூலம் தங்கள் குழந்தைகளைச் சுமக்க விரும்புகிறார்கள், ஆனால் திருநங்கைகளுக்கு இயற்கையாகவே கரு மற்றும் கரு வளர்ச்சிக்கு தேவையான உடற்கூறியல் இல்லை. 2008 ஆம் ஆண்டு நிலவரப்படி,திருநங்கை கருப்பை மாற்று அறுவை சிகிச்சை ஒரு முறை கூட வெற்றி பெறவில்லை. [12]

சான்றுகள்

தொகு
  1. "Breakthrough raises possibility of genetic children for same-sex couples". 9 December 2010. பார்க்கப்பட்ட நாள் 26 July 2015.
  2. "Timeline of same-sex procreation scientific developments". samesexprocreation.com.
  3. "Japanese scientists produce mice without using sperm". April 22, 2004. https://news.google.com/newspapers?id=nUIgAAAAIBAJ&pg=6950,1352704&dq=japanese+scientists+combine+two+mouse+eggs+to+produce+daughter+mice&hl=en. 
  4. "No father necessary as mice are created with two mothers". 2018-10-12. https://www.thetimes.co.uk/article/no-father-necessary-as-mice-are-created-with-two-mothers-2vskf8w58. 
  5. Li, Zhi-Kun; Wang, Le-Yun; Wang, Li-Bin; Feng, Gui-Hai; Yuan, Xue-Wei; Liu, Chao; Xu, Kai; Li, Yu-Huan et al. (2018-10-01). "Generation of Bimaternal and Bipaternal Mice from Hypomethylated Haploid ESCs with Imprinting Region Deletions". Cell Stem Cell 23 (5): 665–676.e4. doi:10.1016/j.stem.2018.09.004. பன்னாட்டுத் தர தொடர் எண்:1934-5909. பப்மெட்:30318303. 
  6. "Stem Cells and Same Sex Reproduction". 2021. பார்க்கப்பட்ட நாள் 26 July 2015.
  7. "For Gay Men: Becoming a Parent through Surrogacy". Internet Health Resources. பார்க்கப்பட்ட நாள் 26 July 2015.
  8. 8.0 8.1 Ringler G (18 March 2015). "Get Ready for Embryos From Two Men or Two Women". பார்க்கப்பட்ட நாள் 4 July 2021.
  9. 9.0 9.1 "Families Created by Egg Donation: Parent-Child Relationship Quality in Infancy". Child Development 90 (4): 1333–1349. July 2019. doi:10.1111/cdev.13124. பப்மெட்:30015989. 
  10. "Fertility preservation in transgender patients". International Journal of Transgenderism 17 (2): 76–82. 2016. doi:10.1080/15532739.2016.1153992. பன்னாட்டுத் தர தொடர் எண்:1553-2739. "Traditionally, patients have been advised to cryopreserve sperm prior to starting cross-sex hormone therapy as there is a potential for a decline in sperm motility with high-dose estrogen therapy over time (Lubbert et al., 1992). However, this decline in fertility due to estrogen therapy is controversial due to limited studies.". 
  11. "Estrogens in the treatment of prostate cancer". The Journal of Urology 154 (6): 1991–8. December 1995. doi:10.1016/S0022-5347(01)66670-9. பப்மெட்:7500443. 
  12. "Pregnant men: hard to stomach?". Telegraph (London). 2008-04-10. https://www.telegraph.co.uk/men/active/mens-health/3354220/Pregnant-men-hard-to-stomach.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ந,ந,ஈ,தி_இனப்பெருக்கம்&oldid=3769490" இலிருந்து மீள்விக்கப்பட்டது