பகா அடுக்கு

கணிதத்தில், பகா அடுக்கு (prime power) என்பது ஒரேயொரு பகா எண்ணின் நேர்ம முழுவெண் அடுக்காக மட்டுமே எழுதபடக்கூடியதொரு இயல் எண் ஆகும்.

எடுத்துக்காட்டுகள்:

7 = 71
9 = 32
64 = 26 ஆகிய மூன்றும் பகா அடுக்குகள்.

மாறாக, 6 = 2 × 3, 12 = 22 × 3, 36 = 62 = 22 × 32 மூன்றும் பகா அடுக்குகள் அல்ல.

பகா அடுக்குகளின் தொடர்வரிசை::

2, 3, 4, 5, 7, 8, 9, 11, 13, 16, 17, 19, 23, 25, 27, 29, 31, 32, 37, 41, 43, 47, 49, 53, 59, 61, 64, 67, 71, 73, 79, 81, 83, 89, 97, 101, 103, 107, 109, 113, 121, 125, 127, 128, 131, 137, 139, 149, 151, 157, 163, 167, 169, 173, 179, 181, 191, 193, 197, 199, 211, 223, 227, 229, 233, 239, 241, 243, 251, …

(OEIS-இல் வரிசை A246655)

.

பகா அடுக்குகளை ஒரேயொரு பகா எண்ணால் மட்டும் வகுபடக்கூடிய நேர்ம முழுவெண் எனவும் கூறலாம்.

பண்புகள்

தொகு

இயற்கணிதப் பண்புகள்

தொகு
  • ஒரு முடிவுறு களத்தின் உறுப்புகளின் எண்ணிக்கை எப்பொழுதுமே ஒரு பகா அடுக்காகத்தான் இருக்கும். மறுதலையாக, ஒவ்வொரு பகா அடுக்கும் ஒரு முடிவுறு களத்திலுள்ள உறுப்புகளின் எண்ணிக்கையாகவே இருக்கும்.[2]

வகுபடுதன்மைப் பண்புகள்

தொகு

ஒரு பகா அடுக்கின் டோஷண்ட் சார்பு (φ) மற்றும் வகுஎண் சார்புகள் (σ0), (σ1) கீழ்வரும் வாய்பாடுகளைக்கொண்டு கணக்கிடப்படுகின்றன:

 
 
 

அனைத்து பகா அடுக்குகளும் குறைவெண்களாகும். பகா அடுக்கு pn ஆனது, ஒரு n-கிட்டத்தட்டப் பகாவெண். ஒரு பகா அடுக்கு pn, இசைவான எண்சோடியொன்றின் உறுப்பாக இருக்குமா என்ற கேள்விக்கான விடை அறியப்படவில்லை. அவ்வாறு ஒரு பகா அடுக்கானது இசைவான எண்சோடியில் இடம்பெற்றால், அது (pn) 101500 ஐ விடப் பெரிய எண்ணாகவும், n இன் மதிப்பு 1400 ஐ விடப் பெரியதானதாகவும் இருக்க வேண்டும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Crandall, Richard; Pomerance, Carl B. (2005). Prime Numbers: A Computational Perspective (2nd ed.). Springer. p. 40. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780387289793.
  2. Koblitz, Neal (2012). A Course in Number Theory and Cryptography. Graduate Texts in Mathematics. Vol. 114. Springer. p. 34. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781468403107.

மேலதிக வாசிப்புக்கு

தொகு
  • Elementary Number Theory. Jones, Gareth A. and Jones, J. Mary. Springer-Verlag London Limited. 1998.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகா_அடுக்கு&oldid=3948676" இலிருந்து மீள்விக்கப்பட்டது