பகுப்பு பேச்சு:இந்திய ஊர்களும் நகரங்களும்

Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by மதனாஹரன்

நகரங்களுக்கும் பேரூர்களுக்கும் தனி பகுப்பு இருப்பது நல்லது. கிராமங்களுக்கு தனி பகுப்பு இருப்பது நல்லது. நகரங்களும் பேரூர்களும் சில ஆயிரங்களே இருக்கும். கிராமங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டும். மாவட்ட அளவில் பார்த்தால் கூட நகரங்களும் பேரூர்களும் ஐம்பதுக்குள் வரும். கிராமங்கள் நூறு முதல் ஆயிரம் வரை வரக்கூடும். ஆங்கிலத்திலும் cities and towns, villages என்றவாறு இரு பகுப்புகள் உள்ளன. கவனிக்க: @Sodabottle, Kanags, Natkeeran, and செல்வா: -07:33, 30 சூலை 2015 (UTC)−முன்நிற்கும் கருத்து தமிழ்க்குரிசில் (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. Reply

Town-நகரம், City-மாநகரம், Village-ஊர். இவை பொருத்தமாக இருக்கும். தமிழ்க்குரிசில் கூறியது தமிழக வழக்கோ தெரியவில்லை. --மதனாகரன் (பேச்சு) 11:23, 30 சூலை 2015 (UTC)Reply
எனது புரிதலிலும் ஊர் என்பது கிராமம் என்பதற்கு சமனாதாகவும், பேரூர் என்பது கிராமத்தை விட பெரிதாகவும், நகரம், மாநகரம் என்பவை அவற்றை விட பெரிதாகவும் அமையும். பார்க்க: பேரூராட்சி. கிராமம் என்பது ஊருக்கான சமசுகிருதச் சொல்லாக இருக்கலாம். --Natkeeran (பேச்சு) 13:26, 30 சூலை 2015 (UTC)Reply
ஆம். கிராமம் என்னும் சொல்லுக்கு இணையாக தமிழில், சிற்றூர் என்று வழங்குவதே வழக்கம். town என்பதை பேரூர் என்று வழங்குவதே தமிழக வழக்கம். cityயின் பெரிய அளவுகளான municipality, metropolitan போன்றவற்றை நகரம், மாநகரம் என்ற வழங்கலாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:02, 30 சூலை 2015 (UTC)Reply
இந்திய ஊர்களைப் பற்றியதென்பதால் தமிழக வழக்கை முதன்மைப்படுத்தலாம். இலங்கையில் hamlet-குக்கிராமம் (சிற்றூர்), village-கிராமம் (ஊர்), town-சிறுநகரம், city-நகரம், municipality-மாநகரம், metropolitan-பெருநகரம். தமிழகத்தில் hamletஐ எவ்வாறு அழைப்பர்? Village-ஊர் என்பதே பொருத்தம். --மதனாகரன் (பேச்சு) 04:13, 31 சூலை 2015 (UTC)Reply
மனிதருடைய குடியிருப்புக்கள் அவற்றின் அளவையும் வசதிகளையும் பொறுத்துப் பல வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இவற்றுட் சிலவற்றின் ஆங்கிலப் பெயர்கள் குடியிருப்புக்களின் அளவின் ஏறுவரிசைப்படி Hamlet, village, town, Large Town, city, Large City, Metropolis, Conurbation, Megalapolis (en:Settlement hierarchy ஐப் பார்க்கவும்) என்பனவாகும். உலகளாவிய அளவில் எல்லா வகைப்பாடுகளும் பயன்படுத்தப்படுவதில்லை என்பதுடன், அவற்றுக்கு ஒரே வரைவிலக்கணங்களும் கிடையா. நாட்டுக்கு நாடு வரைவிலக்கணங்கள் வேறுபடுகின்றன. municipality என்பது இந்த வரிசையில் வரக்கூடிய ஒரு குடியிருப்பு வகை அல்ல. அது city இலும் பெரிய குடியிருப்பும் அல்ல. இது உள்ளூராட்சி அமைப்பு அடிப்படையிலான வகைப்பாட்டின் ஒரு வகை. உண்மையில் municipality என்பது village, town, city போன்ற எதுவாகவும் இருக்கலாம். தமிழ் அகரமுதலிகள் மேற்காட்டிய ஆங்கிலச் சொற்களுக்கு இணையாகத் தெளிவான சொற்கள் எதையும் தரவில்லை. எடுத்துக்காட்டாக, கிரியாவின் அகரமுதலி "ஊர்" என்பதற்கு village, town, city என எல்லாப் பொருளும் தருகின்ற அதேவேளை "ஊராட்சி"என்பதற்கு கிராமத்துக்கான உள்ளூராட்சி அமைப்பு என்று பொருள் தருகிறது. "ஊர்"என்பதற்குத் தமிழில் பரந்த பொருள் இருந்தாலும் தற்காலத்தில் கலைச்சொல் அடிப்படையில் இது "கிராமம்" என்னும் வட சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாகவே பயன்பட்டு வருகிறது. எனவே "ஊர்", village என்பதற்கு இணையானது. Hamlet என்பது village என்பதிலும் சிறியது எனவே "சிற்றூர்" என்பது இதற்குப் பொருத்தமானது. முன்சொன்ன அகரமுதலி "குக்கிராமம்" என்பதற்கே Hamlet எனப் பொருள் தருகிறது. "சிற்றூர்" என்பது "குக்கிராமம்" என்பதன் தமிழாக்கமே. கலைச்சொல் அடிப்படையில் "ஊர்" என்பது நாட்டுப்புறச் சூழல் (Rural context) கொண்ட ஒரு குடியிருப்பு அது போல் town என்பது நகர்ப்புறச் சூழல் (Urban context) கொண்ட ஒரு குடியிருப்பு. எனவே "பேரூர்" என்பது town ஐக் குறிப்பதாகக் கொள்வது பொருத்தமாக இராது. இது ஒரு வேளை Large village என்னும் ஒரு வகையைக் குறிப்பது ஆகலாம். city என்பது Town என்பதை விடப் பெரியது. எனவே இதை மாநகரம் அல்லது பெருநகரம் எனலாம். ஆனால், "பெருநகரம்" என்னும் சொல் Metropolis என்பதைக் குறிக்கவே வழமையாகப் பயன்படுகிறது. Metropolis என்பது மாநகரத்தையும் அதன் புறநகரப் பகுதிகளையும் (City + Suburbs) சேர்த்துக் குறிக்கும் ஒரு சொல். Conurbation என்பது Metropolis என்பதோடு அருகில் தொடர்ச்சியாக அமைந்த நகரங்களையும் அவற்றின் புறநகர்களையும் சேர்த்துக் குறிக்கும் ஒரு சொல் இதைத் தமிழில் "நகரத்தொகுதி" (விக்சனரியைப் பார்க்கவும்) எனலாம். Megalapolis என்பது பல Conurbationகள் இணைந்த பகுதி இது "பெருநகரக் குழுமம்" எனப்படுகிறது. எனவே பின்வரும் சொற்கள் பொருத்தமாக இருக்கும்.
Hamlet - சிற்றூர் (குக்கிராமம் - வடமொழி கலந்தது)
village - ஊர் (கிராமம்)
Large village - பேரூர்
town - நகரம் (திருகோணமலை நகரம்)
city - மாநகரம் (சென்னை மாநகரம்)
Metropolis - பெருநகரம் (புறநகர்ப் பகுதிகளையும் சேர்த்து சென்னைப் பெருநகரம்)
Conurbation - நகரத்தொகுதி
Megalapolis - பெருநகரக் குழுமம்
அதே வேளை தமிழ்நாட்டில் ஊராட்சி, பேரூரட்சி, நகராட்சி, மாநகராட்சி என்பன உள்ளாட்சி அலகுகள். இவற்றுக்கு உத்தியோகபூர்வமான வரைவிலக்கணம் கட்டாயமாக இருக்கும். அல்லது இவை இந்தியா அடங்கிலும் பயன்படும் உத்தியோகபூர்வ ஆங்கிலச் சொற்களுக்கு இணையான மொழிபெயர்ப்புக்களாக இருக்கலாம். இவை குறித்துச் சரியான தகவல்களை அறிந்தால், என்ன பொருளில் ஊர், பேரூர், நகரம், மாநகரம் என்பவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என அறியலாம். இலங்கையில் முன்னர் உள்ளாட்சிகள், கிராமச்சபை (Village Council), பட்டினசபை (Town Council), நகரசபை (Urban Council), மாநகரசபை (Municipal Council) எனப் பிரிக்கப்பட்டிருந்தது. இங்கே பட்டினம் என்பது Town என்பதற்கும், நகரம் என்பது Urban என்பதற்கும் இணையாகப் பயன்படுவதைக் காண்கிறோம். இவை சரியல்ல. பட்டினம் என்பது தற்போது பொதுவாகப் பயன்படுத்தப்பட்டாலும் அது உண்மையில் கரையோர நகரங்களையே குறிக்கும். அதுபோல் Urban என்பது பொதுவான சொல் எல்லா நகர்ப்புறப் பகுதிகளையும் குறிப்பது. ---மயூரநாதன் (பேச்சு) 09:57, 31 சூலை 2015 (UTC)Reply
👍 விருப்பம் விரிவான விளக்கத்திற்கு நன்றி. --மதனாகரன் (பேச்சு) 11:10, 31 சூலை 2015 (UTC)Reply
Return to "இந்திய ஊர்களும் நகரங்களும்" page.