பகுப்பு பேச்சு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கிராமங்கள்
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan in topic இணைப்புக் குறி
இத் தலைப்பின் பெயர் தமிழ்நாட்டு ஊர்கள் என நல்ல தமிழிலும், சுருக்கமாகவும் அமையும் வகையில் மாற்றப்படுதல் வேண்டும். --Sengai Podhuvan (பேச்சு) 07:10, 9 நவம்பர் 2012 (UTC)
- இப்பகுப்பில் உள்ள உள்ளடக்கங்கள் கிராமங்கள் பற்றிய கட்டுரையாக உள்ளன, ஊர்கள் எனப்படும் போது பொதுவாக தெரிகிறது, தமிழ்நாட்டிலுள்ள கிராமங்கள் எனலாமா ஐயா?--சண்முகம்ப7 (பேச்சு) 08:22, 9 நவம்பர் 2012 (UTC)
நண்பர்களே வணக்கம்
- "பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கிராமங்கள்" கட்டுரையின் தலைப்பு மாற்றம் வேண்டுகோள் என்பது ஏற்புடையதே, ஏனெனில் "கிராமம்" என்னும் சொல் வேற்று மொழி சொள்ளகும்......
- "Village" என்னும் ஆங்கில சொல்லை தமிழாகாம் செய்வோமாயின் அது ஊர் (அல்லது) சிற்றூர் எனப்படும்
- "கிராமம்" என்னும் சொல் வழக்கத்திலும், நிர்வாக ரீதியிலும் தவாறாக பயன்படுத்தப்படுகிறது
- எனவே தலைப்பு மாற்றம் என்பது வேண்டும்,
- மேலும் என் எண்ணங்கள் சில "பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சிற்றூர்கள் ", "பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்கள்", "பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊராட்சிகள்", ஆகிய தலைப்புகள் பற்றி சிந்திக்கலாம்
நன்றி கருப்பன்.முனியப்பன் Muniyankaruppan (பேச்சு) 17:31, 9 நவம்பர் 2012 (UTC)
- தமிழ்நாட்டு ஊர்கள் எனத் தலைப்பு அமைவது தமிழ்நெறி. ஊர்கள் (தமிழ்நாடு) என வழங்குவதும் சரியானதே. 'கிராமம்' என்பது வடசொல். ஊர் என்னும் எளிய, இனிய, எல்லாரும் அறிந்த, எல்லாரும் பயன்படுத்தும் சொல் இருக்கும்போது 'கிராமம்' என்னும் வடமொழிச்சொல் வேண்டுமா? --Sengai Podhuvan (பேச்சு) 20:44, 10 நவம்பர் 2012 (UTC)
- ஊராட்சிகள் (தமிழ்நாடு) எனலாம். --Sengai Podhuvan (பேச்சு) 20:58, 10 நவம்பர் 2012 (UTC)
- மாற்றப்போகிறோமா இல்லையா? --Sengai Podhuvan (பேச்சு) 05:06, 12 நவம்பர் 2012 (UTC)
- தமிழ்நாட்டு நிர்வாக முறைப்படி/ஆட்சி முறைப்படி கிராமம், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என ஊர்கள் பிரிக்கப்பட்டுள்ளன, எனவே கிராமம் என்பதை ஊராட்சி என மாற்றினால் ஊராட்சியை என்ன செய்வது? மேலும் ஊர் என்பது கிராமம், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய அனைத்தையும் குறிக்கக்கூடியது, அப்படியிருக்கும் போது அது எப்படி கிராமம் என்பதனை மட்டும் குறிக்கும்? மேலும் கிராமம் என்பது பல ஆயிரம் கட்டுரைகளிலும், கிட்டத்தட்ட ஐம்பது பகுப்புகளிலும் உள்ளது. எனவே இது தொடர்பான தெளிவான முடிவு எடுத்த பிறகு மாற்றுவது நலம்--சண்முகம்ப7 (பேச்சு) 05:18, 12 நவம்பர் 2012 (UTC)
- கிராமம் என்பது சிற்றூரைக் குறிக்கும் சொல்லே. சிற்றூர் என மாற்றலாம். ஊரும் ஊராட்சியும் வெவ்வேறானவை. நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்டவற்றுக்கு ஏனைய பகுப்புகள் உள்ளன. ”தமிழ் நாட்டில் உள்ள ஊர்களும் நகரங்களும்” என்ற பகுப்பும் உள்ளது. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:42, 19 ஆகத்து 2014 (UTC)
இணைப்புக் குறி
தொகுபொருத்தமானது
இணைக்கப்படுதல் வேண்டும்--Sengai Podhuvan (பேச்சு) 07:09, 21 ஆகத்து 2014 (UTC)