பகுப்பு பேச்சு:பக்கவழி நெறிப்படுத்தல்

இந்த உரையாடல் ஒரு பயனர் பக்கத்திலிருந்து நகலெடுக்கப்பட்டது.

மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கட்டுரைகளுக்கு மட்டுமே பக்கவழிமாற்றுகள் ஏற்படுத்துங்கள். இரண்டு கட்டுரைகளுக்குத் தேவையற்றது. பார்க்க: ஞானப்பிரகாசர். மேலும், பக்கவழிமாற்றுகளுக்கு ஒரு விக்கித்திட்டம் தேவை தானா? நேர மினக்கேடு என்றே நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 11:31, 28 மே 2012 (UTC)Reply

வணக்கம் Kanags, இரண்டு கட்டுரைகள் தற்போதே உள்ளன, இனிவரும் காலத்தில் மேற்கொண்டு ஏதேனும் ஒரு புத்தகமோ, ஆட்களோ வரலாம் அல்லவா ? ஒன்றுக்கு மேற்பட்டு இருந்தாலே, குழப்பம் கண்டிப்பாக வரும். பார்க்க தெளிவு தேவை. தற்போது இத்திட்டத்திற்கான அவசியம் இல்லாவிட்டாலும், கண்டிப்பாக இனிவரும் காலங்களில் இத்திட்டம் பயன்படும். நம்மால் முடிந்தவரை முயல்வோம். :-) -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:39, 28 மே 2012 (UTC)Reply
Kanags நீங்கள் about வார்ப்புரு சேர்த்திருப்பதைப் பார்த்தேன், நன்றாகவே விரைந்து செய்துள்ளீர்கள். நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது போலவே, இன்னும் ஒரு ஞானப்பிரகாசரும் வந்துவிட்டார் ;-) பார்க்க திருவொற்றியூர் ஞானப்பிரகாசர் ???? -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:26, 28 மே 2012 (UTC)👍 விருப்பம்.--Kanags \உரையாடுக 12:50, 28 மே 2012 (UTC)Reply
  • இரு பக்கங்கள் மட்டும் இருந்தால், பிறப்பக்கபோகும் நபருக்காவோ, எழுதாத புத்தக்கத்திற்கோ தனியாக ஒரு பக்கவழிமாற்று தேவையில்லை. ஆனால் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதப்படாமல் இருந்தால் தனி பக்கம் உருவாக்கலாம், சிவப்பு இணைப்பும் கொடுக்கலாம். எ.கா ஸ்ரீகாந்த். இரண்டே பக்கங்கள் இருக்கும் பட்சத்தில் இரு கட்டுரையின் முதல் வரியில் ஒரு குறிப்பு இட்டால் போதுமானது. ஆங்கில விக்கியிலும் இதுவே பழக்கம். ஸ்ரீகாந்த் (பேச்சு) 14:09, 28 மே 2012 (UTC)Reply
தினேசு, சிறீதரனின் கருத்துடன் உடன்படுகிறேன். இத்திட்டத்தை ஒருங்கிணைக்க பகுப்பு பேச்சு:பக்கவழி நெறிப்படுத்தல் பக்கத்திலேயே கூட உரையாடலாம். தனியே பேச்சுப் பக்கத்தில் தகவல் இடத் தேவை இல்லை. பிறகு, ஒரு கட்டுரையின் உள்ளடக்கத்தைப் பற்றி எச்சரிப்பது, உடனடி மேம்பாடுகளை வேண்டுவது போன்ற வார்ப்புருக்களை மட்டும் பக்கத்தின் மேலே இடுவது வழக்கம். குறுங்கட்டுரை வார்ப்புரு பக்கத்தின் அடியில் இருப்பதே வழமை--இரவி (பேச்சு) 13:47, 28 மே 2012 (UTC)Reply
இரண்டு பக்கங்கள் மட்டுமே இருப்பது மட்டுமே காரணமாக நான் கூறவில்லை, இப்பெயருள்ள எழுதாத புத்தகத்தைப் பற்றியோ, பிறக்காத நபருக்காகவோ நானும் வருந்தவில்லை, ஞானப்பிரகாசர் என்பது ஒரு பொதுவான பெயரே! அவர்களைப் பற்றிச் சேர்க்கும் போது குழப்பம் வராமல் இருக்கவே பக்க வழி நெறிப்படுத்தலை வலியுறுத்துகிறேன். எ. கா. தினேஷ் என்ற பெயர் போல இதனையும் பலருக்கு வைத்துள்ளனர். (அப்பாடா, ஸ்ரீகாந்த் போல என் பெயரையும் பதிலில் ஒரு வழியாக சேர்த்து விட்டேன் :-) ) இந்த உரையாடலை அங்கு நகலெடுத்து பதிகிறேன். இனி வரும் காலங்களில் குறுங்கட்டுரை வார்ப்புருவை பக்கத்தின் அடியிலேயே சேர்க்கிறேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:18, 28 மே 2012 (UTC)Reply
பேச்சுப் பக்கங்களில் நெறிப்படுத்தல் திட்டம் தொடர்பான வார்ப்புரு இடுவது தான் தேவையற்ற பணியாகத் தோன்றியது. இப்பகுப்பின் மூலமே இத்திட்டத்தை இலகுவாக ஒருங்கிணைக்கலாம். மற்றபடி, திட்டமே வேண்டாம் என்று கூறவில்லை. பேச்சு:தமிழ் பக்கத்தில் கூறியுள்ள கருத்துகளையும் கவனியுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் இருந்தாலும், வெகு பரவலாக அறியப்படும் பொருளை அதே தலைப்பில் முதன்மைக் கட்டுரையாக இடுவது நன்று. பி. கு.: ச. வெ. சேகர் நாடகங்களில் தான் எப்பாடு பட்டாவது நாடகத் தலைப்பை நாடகம் முடிவதற்குள் சொல்லி விடுவார். அந்த நினைவு வந்தது :) தமிழ் விக்கிப்பீடியா பராமரிப்பு குறித்த தங்கள் பன்முக முனைப்புக்குப் பாராட்டுகள் --இரவி (பேச்சு) 14:35, 28 மே 2012 (UTC) 👍 விருப்பம் -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 02:38, 29 மே 2012 (UTC)Reply

ஒழுங்கமைவு

தொகு

- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:43, 15 ஏப்பிரல் 2024 (UTC)Reply

Return to "பக்கவழி நெறிப்படுத்தல்" page.