பகுப்பு பேச்சு:பழனியப்பா பிரதர்ஸ் நூல்கள்

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Selvasivagurunathan m
  • செல்வசிவகுருநாதன், இங்கே "பிரதர்ஸ்" என்பது சரியா "பிரதர்சு" என்பது சரியா? பொதுவாக நாம் எழுதும் கட்டுரைகளில் வடமொழிச் சொற்களின் "ஸ்" எழுத்தை "சு" என்று மாற்றுவது தமிழ் மரபோடு ஒத்துவரும். ஆனால் ஒரு நிறுவனம் தன்னை "பிரதர்ஸ்" என்று அடையாளம் காட்டும்போது அப்பெயரை மாற்றமின்றி அப்படியே இடுவது தானே சரி. அதுபோலவே, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் என்பதையும் மாற்றாமல் இருப்பது நல்லது. பொதுவான கொள்கையாக, நிறுவனங்கள் தங்கள் பெயரை எவ்வாறு எழுதுகின்றனவோ அந்த முறையையே விக்கியில் கடைப்பிடிப்பது சிறப்பு என்று நான் கருதுகின்றேன்.--பவுல்-Paul (பேச்சு) 03:48, 14 ஆகத்து 2013 (UTC) +1--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 07:02, 15 ஆகத்து 2013 (UTC)Reply
ஐயா வணக்கம்! வெளிப்படையாகச் சொல்வதென்றால்... பழனியப்பா பிரதர்ஸ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் என எழுதுவதே சரியானது என்பது எனது தனிப்பட்ட கருத்தும் கொள்கையும். விக்கியில் எழுதும்போது பல நேரங்களில் நான் இதுபோல குழம்பித் தவிப்பதுண்டு - என்ன செய்வது என்றறியாது. (பிரதர்சு, கவுசு என எழுதியபோதும் இரு மனதோடுதான் எழுதினேன் என்பது உண்மை!) மற்ற பயனர்கள் எவரேனும் இது குறித்து கருத்து தெரிவித்தால், அதன் அடிப்படையிலும் உரிய மாற்றங்களை செய்து விடுகின்றேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:35, 14 ஆகத்து 2013 (UTC)Reply
தமிழ்ச் சூழலில் வழங்கும் நபர்களின் பெயர்களை அவ்வாறே கையாழுவது பொருத்தம் என்றே கருதுகிறேன். இது பல கருத்து மோதல்களைத் தவிர்க்கும். அதே வேளை, நாம் பிற மொழிச் சொற்களை மொழிபெயர்க்கும் போது தமிழ் ஒலிப்புக்கு ஏற்ற மாதிரி மொழிபெயர்ப்பது பொருத்தமானது. இவ்வாறே பிற பல மொழிகளில் கையாழப்படுகிறது. எல்லா மொழிகளின் ஒலிப்புக்களையும் ஒரு மொழி கொண்டிருப்பது சாத்தியம் இல்லை. மேற்கூறப்பட்ட பெயர்கள் தமிழ்ச் சூழலில் வழங்கினாலும் பிற மொழிச் சொற்களே. எனவே அவற்றை தமிழ் ஒலிப்பு முறைக்கு மொழிபெயர்ப்பது பொருத்தமே. --Natkeeran (பேச்சு) 13:21, 15 ஆகத்து 2013 (UTC)Reply
நற்கீரன் கருத்துடன் இணைகிறேன். நிறுவனப் பெயரை மாற்றம் செய்ய வேண்டாம். ஆனால், அந்தப் பெயரில் வரும் வடமொழி எழுத்தை மாற்றி தமிழ்மொழிக்கு ஏற்ற வகையில் அமைப்பதைச் சரியானதாகக் கருதுகிறேன்.இது போல் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் என்பதை அவர்கள் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் என்று சில இடங்களில் விளம்பரப்படுத்தியுள்ளனர். நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் என்று மாற்றம் செய்து நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் என்பதை வழிமாற்றாக அமைக்கலாம். பழனியப்பா பிரதர்ஸ் என்பதை அவர்களும் சில இடங்களில் பழனியப்பா சகோதரர்கள் என்று குறிப்பிட்டிருக்கின்றனர். எனவே பழனியப்பா சகோதரர்கள் என்பதற்குத் தலைப்பை நகர்த்தலாம். பழனியப்பா பிரதர்சு, பழனியப்பா பிரதர்ஸ் போன்றவைகளை வழிமாற்றாக அமைக்கலாம்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 17:20, 15 ஆகத்து 2013 (UTC)Reply
பகுப்பில் வழிமாற்று அமைக்க இயலாது என நினைக்கிறேன். நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், பழனியப்பா சகோதரர்கள் என அந்த நிறுவனங்களே குறிப்பிட்டிருந்தால்... நாமும் அதனை செயல்படுத்தலாம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:29, 15 ஆகத்து 2013 (UTC)Reply
Return to "பழனியப்பா பிரதர்ஸ் நூல்கள்" page.