பசிபிக் நேர வலயம்

(பசிபிக் நேரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பசிபிக் நேர வலயம் (Pacific Time Zone, PT) என்பது மேற்கு கனடா, மேற்கு ஐக்கிய அமெரிக்கா, மேற்கு மெக்சிக்கோ ஆகிய பகுதிகளின் நேர வலயம் ஆகும். இவ்வலயத்தில் உள்ள இடங்கள் ஒருங்கிணைந்த அனைத்துலக நேரத்தில் இருந்து எட்டு மணி நேரத்தைக் கழித்து (ஒசநே−8) தமது சீர் நேரத்தைப் பேணுகின்றன. கோடை காலங்களில் இவை பகலொளி சேமிப்பு நேரத்தைக் (ஒசநே−7) கடைப்பிடிக்கின்றன.

பசிபிக் நேர வலயம்
Pacific Time Zone
நேர வலயம்
  பசிபிக் நேர வலயம்
ஒ.ச.நே. ஈடுசெய்தல்
PSTஒ.ச.நே −08:00
PDTஒ.ச.நே −07:00
தற்போதைய நேரம்
22:27, 28 அக்டோபர் 2024 PST [refresh]
23:27, 28 அக்டோபர் 2024 PDT [refresh]
ப.சே.நே. பின்பற்றல்
இந்நேர வலயம் முழுவதும் ப.சே.நே. பின்பற்றப்படுகிறது.

ஐக்கிய அமெரிக்காவிலும், கனடாவிலும் இந்நேர வலயம் பொதுவாக "பசிபிக் நேர வலயம்" என அழைக்கப்படுகிறது. குறிப்பாக, இவ்வலயத்தில் நேரம் (நவம்பர் முதல் நடு-மார்ச் வரை) "பசிபிக் சீர் நேரம்" (Pacific Standard Time, PST) எனவும், பகலொளி சேமிப்புக் காலத்தில் (நடு-மார்ச் முதல் நவம்பர் ஆரம்பம் வரை) "பசிபிக் பகலொளிசேமிப்பு நேரம்" (Pacific Daylight Time PDT) எனவும் அழைக்கப்படுகிறது. மெக்சிக்கோவில், இக்காலப்பகுதி வடமேற்கு நேர வலயம் (Zona Noroeste, Northwest Zone) என அழைக்கப்படுகிறது. பசிபிக் வலயத்தில் உள்ள மிகப் பெரிய நகரம் லாஸ் ஏஞ்சலஸ் ஆகும்.

கனடா

தொகு

கனடாவில் ஒரேயோரு பகுதி மட்டுமே முழுமையாக பசிபிக் வலயத்தில் உள்ளது:

கனடாவின் ஒரு மாகாணமும், ஒரு பிராந்தியமும் பசிபிக் நேரத்திலும், மலை நேர வலயத்திலும் பிரிக்கப்பட்டுள்ளன:

மெக்சிக்கோ

தொகு

ஐக்கிய அமெரிக்கா

தொகு

இரண்டு மாநிலங்கள் பசிபிக் வலயத்தில் முழுமையாக உள்ளன:

மூன்று மாநிலங்கள் பசிபிக் வலயத்திலும் மலை நேர வலயத்திலும் உள்ளன:

ஒரு மாநிலம் பசிபிக் வலயத்திலும் அலாஸ்கா நேர வலயத்திலும் உள்ளது:

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசிபிக்_நேர_வலயம்&oldid=3607335" இலிருந்து மீள்விக்கப்பட்டது