பசுங்கூரை

(பசுமைக் கூரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பசுங்கூரை என்பது, பகுதியாகவோ அல்லது முற்றிலுமாகவோ, ஏதேனும் தாவரங்கள் வளர்கின்ற ஒரு கட்டிடக்கூரையை குறிக்கும். (பசுமை என்ற சொல் பச்சை நிறத்தை குறிக்காமல் சுற்றுச்சூழலைக் குறிக்கின்றது). இது வேர்தடைக்கென்ற அடுக்கு போன்ற கூடுதல் அடுக்குகளையும் மேலும் நீர் பாசன அமைப்புகளையும் உள்ளடக்கலாம்.

பாரம்பரிய புற்கூரைகளை பரொ தீவுகளின் நிறைய வீடுகளில் காணலாம்
சிகாகோ சிட்டி ஹால்லின் பசுங்கூரை.
மன்ஹட்டனில் உள்ள ஒரு தடிமனான பசுங்கூரை

தொட்டிகளில் பராமரிக்கப்படும் தாவரங்கள் உள்ள கூரை பொதுவாக பசுங்கூரையாக கருதப்படுவதில்லை. எனினும் இக்கருத்து விவாதிக்கபடுகின்றது. கூரை குளங்கள் பசுங்கூரையின் மற்றொரு வகை ஆகும்.

பசுங்கூரைகள் மழைநீர் உறுஞ்சுவது, வெப்பக்காப்பு வழங்குவது, வனவுயிரினங்களுக்கு ஒரு வாழ்விடத்தை உருவாக்கித்தருவது மற்றும் நகர்புற காற்று வெப்பநிலையை குறைப்பது போன்ற பல்வேறு காரணங்களுக்காக பயன்படுகின்றன. வெப்ப தீவு விளைவு என்னும் விளைவைக் குறைக்கவும் இப்பசுமைக்கூரை உதவுகிறது. பசுங்கூரைகளில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று தடிமனாக இருக்கும் கூரை. இதில் பல்வேறு வகையான தாவரங்கள் மிகுதியாக வளர்க்கப்படும். மேலும் இது கனமாகவும் அதிக பராமரிப்பு தேவைப்படுவதாகவும் இருக்கும். மற்றொன்று மெல்லிய கூரை. இதில் சற்று குறைவான எண்ணிக்கையில் தாவரங்கள் வளர்க்கப்படும். மேலும் சிறிது இலகுவாகவும் இருக்கும்.

பசுங்கூரை என்ற சொல் ஏதேனும் பசுமை தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் கூரைகள், உதாரணமாக சூரிய வெப்ப சேகரிப்பான்கள் அல்லது ஒளிமின்னழுத்த பேனல்கள் கொண்ட குளிர் கூரை போன்ற கூரைகளையும் குறிக்கிறது.

சுற்றுச்சூழலுக்கான நன்மைகள்

தொகு

பசுங்கூரைகள்,

  • வெப்பத்தை குறைக்கின்றன (எடையையும் வெப்ப தடை மதிப்பையும் சேர்ப்பதன் மூலம்);

டொராண்டோ பல்கலைகழகத்தின் பிராட் பாஸ், 2005இல் நடத்திய ஓர் ஆய்வின் படி பசுங்கூரைகள் குளிர்க்காலத்தில் வெப்ப இழப்பு மற்றும் சக்தி வீணாதல் ஆகியவற்றை குறைக்கின்றன என்பதும் தெரியவந்துள்ளது.

  • வெள்ளநீர் ஓட்டத்தை குறைக்கின்றன;
  • இயற்கை வாழ்விடத்தை உருவாக்குகின்றன;
  • காற்றிலிருந்து கரியமிலவாயுவையும் மற்ற மாசுகளையும் வடிகட்டுகின்றன. இது ஆஸ்துமா போன்ற நோய்களின் விகிதத்தையும் குறைக்க உதவுகின்றன;
  • மழைநீரிலிருந்து மாசுகளையும் கனரக உலோகங்களையும் வடிகட்டுகின்றன;
  • வெளிச் சத்தத்தைத் தடுக்க உதவுகின்றன; குறைவான அதிர்வெண்கள் கொண்ட சத்தத்தை தடுக்க மண் உதவுகிறது, தாவரங்கள் அதிக அதிர்வெண்கள் கொண்ட சத்தத்தைத் தடை செய்கின்றன;
  • சரியாக நிறுவப்பட்டால், பல பசுங்கூரைகள் ஆற்றல் மற்றும் சூழல்சார் வடிவமைப்பில் தலைமைத்துவம் (LEED) புள்ளிகளுக்கு பங்களிக்க முடியும்;
  • விவசாய இடத்தை அதிகரிக்கும்;
  • பசுங்கூரைகள், தண்ணீரை மண் மூலம் சேமித்துவைக்கின்றன. இதை தாவரங்கள் நீராவி போக்கு(transpiration) மற்றும் ஆவியாதல் மூலம் வளிமண்டலத்திற்கு திருப்பியளிக்கின்றன;
  • பசுங்கூரைகள் மழைநீரை தக்கவைப்பது மட்டுமில்லாமல் நீர் வெப்பநிலையை மிதமாக்குகின்றன. மேலும் எந்தவொரு நீருக்கும் இயற்கை வடிகட்டிகளாக செயல்படுகின்றன;

நிதி நன்மைகள்

தொகு
  • கூரையின் வாழ்நாளை அதிகரிக்கின்றன;
  • ரியல் எஸ்டேட் மதிப்பு அதிகரிக்கும்;
  • சக்தி பயன்பாட்டில் குறைப்பு;
  • வெள்ளநீர் வரி குறைப்பு;
  • கூட்டாட்சி மற்றும் உள்ளூர் வரி சலுகைகள் - உதாரணமாக, 2009 முதல், ஓராண்டு சொத்து வரி கடன் திட்டம் நியூயார்க் நகரில் உள்ளது. இதன்மூலம் எந்தெந்த நில உரிமையாளர்கள் தங்கள் கூரையில் பாதியளவாவது பசுங்கூரையை செயல்படுத்துகிறார்களோ அவர்களுக்கு இச்சலுகை வழங்கப்படும்.

ஒரு பசுங்கூரை பெரும்பாலும் தன்னாட்சி கட்டிடத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்.

பல ஆய்வுகள் 1970 முதல் ஜெர்மனியில் நடத்தப்பட்டிருக்கின்றன. ஜெர்மனியின் தலைநகரமான பேர்லின், பசுங்கூரை ஆராய்ச்சியின் மிக முக்கியமான மையங்களில் ஒன்றாகும். குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில், இன்னும் அதிக ஆராய்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. சுமார் பத்து பசுங்கூரை ஆராய்ச்சி மையங்கள் அமெரிக்காவில் உள்ளன. இது சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் இன்னும் 40 நாடுகளில் நடந்துகொண்டிருக்கின்றன. கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் குறிப்பிட்ட பசுங்கூரைகளில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், பசுங்கூரைகளால், குறிப்பாக நகர்ப்புற பகுதிகளில், வெப்பநிலையை நன்கு குறைக்க முடிவது தெரியவந்துள்ளது. அனைத்து கட்டிடங்களிலும் பசுங்கூரைகளை சேர்ப்பது மேற்பரப்பு வெப்பநிலையை குறைப்பதில் ஒரு வியப்பிக்கும் அளவிற்கு விளைவை ஏற்படுத்தும். 1961-1990 களில் இருந்த வெப்பநிலையை விட தற்போதைய வெப்பநிலையை குறைக்க முடியும். கட்டிடங்கள் அதிகமாகவும் நீராவி போக்கு குறைவாகவும் உள்ள இக்காலத்தில், பசுங்கூரைகள் ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

வகைகள்

தொகு

பசுங்கூரைகள் பராமரிப்பின் அளவை பொருத்தும், தாவரங்கள் வளரும் மண்ணின் ஆழம் பொருத்தும், தடிமனான, மிதமான மற்றும் மெல்லிய என வகைப்படுத்தப்படுகின்றன. மெல்லிய கூரைகள் 10 -25 பவுண்டுகள் கனக்கும் தாவரங்களை ஒரு சதுர அடிக்குள் அடுக்கும். தடிமனான கூரைகள் 80லிருந்து 150 பவுண்டுகள் கனக்கும் தாவரங்களை ஒரு சதுர அடிக்குள் அடக்கும். ஒரு கணிசமான அளவு ஆழம் தேவைப்படுகின்ற பாரம்பரிய கூரைத் தோட்டங்கள் தடிமனான கூரை தோட்டங்களாய் கருதப்படுகின்றன. ஏனென்றால் அவைகளுக்கு மிகுந்த பாசன மற்றும் பராமரிப்பு தேவை உள்ளன. தடிமனான கூரைகள் பொதுவாக பூங்கா போன்றவை. சிறிய மரங்கள், செடிகள், மூலிகைகள், புதர்கள் முதலிய எதையும் இக்கூரை அடக்கலாம். மெல்லிய பசுங்கூரைகள், இதற்கு மாறாக, கிட்டத்தட்ட சுயமாக நீடித்திருப்பதைப்போன்று வடிவமைக்கப்படும். மேலும் பராமரிப்பு குறைவாகவும், வருடத்தில் ஒரேயொரு முறை மட்டுமே களையெடுப்பது போலவும் இக்கூரைகள் அமைகின்றன. மெல்லிய கூரைகள் வழக்கமாக பராமரிப்பிற்காக மட்டுமே அணுகவேண்டுவனவாக இருக்கின்றன. இவை (பொதுவாக மிகவும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட உரங்கள் பயன்படுத்தப்படும்); ஒரு மிகவும் மெல்லிய அடுக்கிலான மண்ணில் கூட நிறுவப்படும். சில பசுங்கூரை வடிவமைப்புகள் தடிமனான மற்றும் மெல்லிய கூரைகள் இரண்டினையும் உட்கொள்ளுமாறு உள்ளன.

வரலாறு

தொகு
 
நார்வே நாட்டு ஹெயடல் நகரில் உள்ள பதினெட்டாம் நூற்றாண்டு பண்ணை வீடுகளில் இருக்கும் புற்கூரைகள்.
 
கனடா நாட்டு டொரோண்டோ நகரில் உள்ள மலையேற்ற சாதனங்கள் கூட்டுறவு அங்காடியில் உள்ள பசுங்கூரை

பசுங்கூரைகள் நூற்றாண்டு காலமான வரலாறு கொண்டுள்ளன.

பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட அடுக்குகள் உள்ள அமைப்பினால், நவீன பசுங்கூரைகள் அமைப்பது ஒரு சமீபத்திய நிகழ்வே ஆகும். நவீன பசுங்கூரைகள் 1960களில் ஜெர்மனியில் முதன்முதலில் உருவாயின. இன்று, ஜெர்மன் கூரைகளில் சுமார் 10% கூரைகள் பசுங்கூரைகளாக உள்ளன என கணிக்கப்படுகிறது. பசுங்கூரைகள் அமெரிக்காவில் விரைவாக பிரபலமாகி வருகின்றன. எனினும் ஐரோப்பாவில் இவை அவ்வளவு பிரபலமாக இல்லை.

ஜெர்மனி, சுவிச்சர்லாந்து, நெதர்லாந்து, நார்வே, இத்தாலி, ஆஸ்திரியா, ஹங்கேரி, சுவீடன், பிரிட்டன், மற்றும் கிரீஸ் போன்ற நிறைய ஐரோப்பிய நாடுகளில் பசுங்கூரைகளை ஊக்குவிக்க, சிறப்பாக இயங்கும் சங்கங்கள் உள்ளன. ஆஸ்திரியாவில் லின்ஜ் நகரத்தில் 1983 இலிருந்து உருவாக்குநர்களுக்கு பசுங்கூரை நிறுவ பணம் வழங்கப்படுகிறது. சுவிச்சர்லாந்தில் இதற்கு 1990 களின் பிற்பகுதியில் இருந்து ஒரு கூட்டாட்சி சட்டம் உள்ளது. பிரிட்டனில் இந்த பழக்கம் மெதுவாகதான் அதிகரிக்கிறது, ஆனால் சில நகரங்களில் குறிப்பாக லண்டன் மற்றும் ஷெஃபீல்டு ஆகியவற்றில் இவற்றின் பயன்பாட்டை ஊக்குவிக்க கொள்கைகள் உருவாக்கபட்டுள்ளன.

ஒருங்கிணைந்த வடிகால்குழாய்-வெள்ளநீர் அமைப்புகள் உள்ள பகுதிகளில், பெரும் புயல்கள் கழிவுநீர் அமைப்பினை தரைபுரண்டு ஓடவிட்டு கழிவுநீரை குளங்குட்டைகளில் சேர்த்து மாசுபடுத்திவிடும். பசுங்கூரைகள் வெள்ள நீரோட்ட அளவை குறைக்கின்றன. மேலும் கூரையில் இருந்து வழிந்தோடி வரும் நீரின் வேகிதத்தை கூட குறைக்கின்றன. பசுங்கூரைகள் மழைநீரில் 75% வரை தக்கவைத்துக்கொண்டு படிப்படியாக நீராவி போக்கு வழியாக அதை வளிமண்டலத்திற்கு வெளிவிடுவன. மேலும் சுற்றுச்சூழல் மாசுகளை அவைகளின் மண்ணில் தக்கவைத்துக்கொள்வன. எலிவேஷன் 314 என்பது வாஷிங்டனில் உள்ள ஒரு புதிய திட்டம் ஆகும். இத்திட்டம் பசுங்கூரைகளை, வெள்ளநீரை வடிகட்டி தேக்கி வைக்க பயன்படுத்துகிறது. இது விலையுயர்ந்த நிலத்தடி வடிகட்டிகளின் பயன்பாட்டை தவிர்க்கிறது.

நகர்ப்புற வெப்பத்தீவு விளைவினை எதிர்ப்பது பசுங்கூரை உருவாக்கத்தின் மற்றொரு காரணம். பாரம்பரிய கட்டிட பொருட்கள் சூரிய கதிர்வீச்சினை உறிஞ்சிக்கொண்டு அதை வெளியிடுகையில் நகரின் வெப்பநிலையை சுற்றியுள்ள பகுதிகளை விட குறைந்தது 4 டிகிரி செல்சியஸ் (7 டிகிரி பாரன்ஹீட்) அதிக சூடாக்கிவிடுகின்றன. மாறாக, பசுங்கூரை கொண்ட சிகாகோ சிட்டி ஹாலில், கூரை வெப்பநிலை ஒரு வெயில் நாளில் 1.4-4.4° செல்சியஸ் (2.5-8.0 °F) அதன் அருகில் இருக்கும் பாரம்பரிய கட்டிடங்களை விட குளிர்ச்சியாக உள்ளது. பசுங்கூரைகள் சிகாகோ, அட்லாண்டா, போர்ட்லேண்ட், மற்றும் பிற அமெரிக்க நகரங்களில் பிரபலமாகி வருகிறது. இது ஏனென்றால் அவற்றின் பயன்பாடு நகர்ப்புற வெப்ப தீவு விளைவை எதிர்க்க உதவுகிறது என்பதால் இந்நாடுகளில் சட்டங்கள் அவற்றின் பயன்பாட்டை ஆதரிக்கிறது. பசுங்கூரைகள் குறைந்த தாக்கம் ஏற்படுத்தும் வளர்ச்சியில் ஒரு வகை. சிகாகோ நகரம் தங்கள் கட்டிடங்கள் மீது பசுங்கூரை வைப்பவர்களுக்கு ஊக்கத்தொகைகளை வழங்கும் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. சிகாகோ சிட்டி ஹால் பசுங்கூரை அமெரிக்காவில் மிக பிரபலமான மற்றும் பழமையான ஒரு பசுங்கூரையாகும். ஒரு பசுங்கூரை அதை சுற்றயுள்ள தட்பவெப்பநிலையை எப்படி மாற்றுகிறது என்பதை ஆராயவே இது முதலில் கட்டப்பட்டது. இந்த ஆய்வு மற்றும் பிற ஆய்வுகளை தொடர்ந்து, ஒரு பெரிய நகரம் அதன் அனைத்து கூரைகளையும் பசுமைபடுத்தினால் அதன் நகர்ப்புற வெப்ப நிலை 7 டிகிரி செல்சியஸ் குறைய முடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு பசுங்கூரை, கூரையின் வெப்பக்காப்பு தன்மையை வெகுவாக மேம்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் கனடா (environment canada) நடத்திய ஒரு ஆய்வில், கோடை குளிர்ச்சி தேவைகளை 26 சதவீதமும், குளிர் வெப்ப இழப்புக்களை 26 சதவீதமும் பசுங்கூரைகள் குறைப்பது கண்டறியப்பட்டுள்ளது. பென் மாநிலம் பல்கலைக்கழகத்தின் பசுங்கூரை ஆராய்ச்சி மையம் கூறுவது என்னவென்றால், ஒரு கூரையின் வாழ்நாள், அதை பசுமைப்படுத்தினால், இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகரிக்கும் என்பதேயாகும்.

சில பசுங்கூரைகளில் நீர்சுத்திகரிப்பிற்கும் ஏற்பாடு இருக்கும். இவ்வகை பசுங்கூரைகள் உண்மையில் நீர் சிகிச்சை குளங்கள் உள்ள கூரைகளாகும். இங்கு பயன்படுத்தப்படும் தாவரங்கள் எவையெனில் calamus, Menyanthes trifoliata, Mentha aquatica போன்றவையாகும்.

பசுங்கூரைகள் தாவரங்கள், பூச்சிகள், மற்றும் விலங்குகளுக்கு வாழ்விடம் வழங்குகிறது. பொதுவாக இவற்றிற்கு நகரங்களில் வாழ குறைந்த இடமே அமையும். 19 மாடிகள் கொண்ட உயரமான நகர கட்டிடங்களிலும் பசுங்கூரைகள் நன்மை பயக்கும் பூச்சிகள், பறவைகள், தேனீக்கள் மற்றும் பட்டாம்பூச்சிகளை ஈர்க்க முடிகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. பசுங்கூரைகள் இடம்பெயரும் பறவைகள் போன்றவற்றிற்கு இயற்கை வசிப்பிடங்களின் பற்றாக்குறையை நீக்குகிறது.

பழுப்பு கூரைகள்

தொகு

உபயோகத்தில் இல்லாத தொழிற்சாலைகள் மதிப்புமிக்க சுற்றுச்சூழலை கொண்டுள்ளன. ஒரு பழுப்பு கூரை பசுங்கூரையிலிருந்து எப்படி வேறுபடுகின்றது என்றால், பழுப்பு கூரைகளின் முக்கிய நோக்கம் அதிக உயிரினங்கள், இன்னும் குறிப்பாக அழிவை நோக்கியுள்ள உயிரினங்களை காப்பதாகும்.

நாடுவாரி உதாரணங்கள்

தொகு

ஆஸ்திரேலியா

தொகு

பசுங்கூரைகள் கடந்த 10 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் பிரபலமடைந்து வருகின்றன. சில ஆரம்பகால உதாரணங்கள் யாவெனின்:- மெல்போர்னில் உள்ள பிரெஸ்வாட்டர் ப்ளேஸ் உறைவிட கோபுரம்(2002)- இதன் பத்தாவது மாடியில் அரை ஏக்கர் தோட்டம் உள்ளது, மெல்போர்ன் நகர கவுன்சிலை அடக்கிய CH2 கட்டிடம் (2006) - ஆஸ்திரேலியாவின் முதல் 6 நட்சத்திர பசுமை ஸ்டார் வடிவமைப்பு வணிக அலுவலக கட்டிடம் (ஆஸ்திரேலியாவின் பசுமை கட்டிட சங்கத்தின் சான்றிதழின்படி), காண்டன் கோபுரம் (2005)- இதன் நான்காவது மாடியில் 75 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள ஒரு புல்வெளி உள்ளது.

ஆஸ்திரேலியாவில் 2008 ல் இருந்து, நகர சபைகள் மற்றும் செல்வாக்குமிக்க வணிக குழுக்கள் பசுங்கூரைகளின் நன்மைகளை ஊக்குவிக்கும் செயலில் உள்ளன. "பசுங்கூரை மெல்போர்னின் மாதிரி" என்பது 'கமிட்டி ஃபார் மெல்போர்னின்' ஒரு திட்டம் ஆகும்.

கனடா

தொகு
 
கோதுமை வயல் போன்று காட்சியளிக்கும் ஒட்டாவாவின் கனடிய போர் அருங்காசியகத்தில் உள்ள பசுங்கூரை. தொலைவினில் கனடிய நாடாளுமன்ற கோபுரங்கள் தெரிகின்றன.

டொராண்டோ நகரில் மே 2009 ல் ஒரு துணைவிதி சட்டம் ஏற்றப்பட்டது. அதன் மூலம் குடியிருப்பு மற்றும் தொழிற்சாலை கட்டிடங்கள் மீது பசுங்கூரைகள் கட்டாயப்படுத்தப்பட்டன. அனால் இச்சட்டம் குறைந்தது ஆறு மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்குதான் பொருந்தும் என்பதால் புதிய சட்டங்கள் போதுமான அளவிற்கு கடுமையாக இல்லை என்று 'ஆரோக்கியமான நகரங்களுக்கான பசுங்கூரை' அமைப்பிலிருந்து இருந்து விமர்சனம் வந்துள்ளது. 31 ஜனவரி 2011 முன், தொழில்துறை கட்டிடங்கள் தங்கள் கூரைகளை 10% அல்லது 2,000 சதுர மீட்டர் அளவிற்காவது பசுமைப்படுத்தியிருக்க வேண்டும். 2008 இல், வான்கூவர் கன்வென்ஷன் சென்டர், அதன் மேற்கு கட்டிடம் மீது ஒரு ஆறு ஏக்கர் பசுங்கூரையை நிறுவியது.இது கனடாவின் பசுங்கூரைகளிலேயே மிக பெரியது ஆகும். 2005 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட ஒட்டாவாவின் புதிய கனடிய போர் அருங்காட்சியகம், புற்கள் கொண்ட பசுங்கூரை ஒன்றை கொண்டது.

எகிப்து

தொகு

எகிப்தில், மண்-அற்ற விவசாயம் கட்டிடங்களின் கூரை மீது தாவரங்கள் வளர்க்க பயன்படுத்தப்படுகிறது. இதில் மண் நேராக கூரை மீது வைக்கப்படுவதில்லை.மாறாக தாவரங்கள் மர மேசைகளின் மீது வளர்க்கப்படுகின்றன. காய்கறிகள் மற்றும் பழங்கள் தான் பெரும்பாலும் இங்கு வளர்க்கப்படுகின்றன.இதனால் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படாத ஆரோக்கியமான உணவு கிடைக்கிறது.

இங்கு ஒரு இன்னும் மேம்பட்ட முறை சோதனையில் உள்ளது. அது யாதெனின் தாவரங்களை அடுத்து மீன் விவசாயமும் ஒரு மூடிய சுழற்சியில் நடப்பது. இது செடிகள், மீன்கள் வெளியிடும் அம்மோனியாவை உறிஞ்சி பயன்பெற உதவுகிறது.அதேசமயம் தண்ணீரை மாற்றும் தேவையும் அகற்றப்பட்டுவிடுகிறது.ஏனென்றால் தாவரங்கள் அம்மோனியாவை உறிஞ்சி நீரை தூய்மைப்படுத்துகின்றன. மீன்கள் கூட தாவரங்களின் வேர்களில் இருந்து சில சத்துக்களை எடுத்துக்கொள்கின்றன.

பிரான்ஸ்

தொகு
 
சொந்த இன தாவரங்கள் கொண்டு உருவாக்கப்பட்ட மேற்கு பிரான்சில் உள்ள L'Historial de la Vendée என்னும் புதிய அருங்காட்சியகத்தின் பசுங்கூரை.

பிரான்சில், லியோனில் உள்ள சர்வதேச பள்ளியில், கேபிளால் தாங்கப்பட்ட பசுங்கூரை ஒன்று உருவாக்க பட்டுள்ளது. இன்னொரு மாபெரும் பசுங்கூரை புதிய அருங்காட்சியகம் L'Historial de la Vendée யில் நிறுவப்பட்டுள்ளது. இது ஜூன் 2006 இல் திறக்கப்பட்டது.

ஜெர்மனி

தொகு

நீண்டகால பசுங்கூரை பாரம்பரியம் ஜெர்மனியில் , 100 ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்ப தொழில்மயமாக்கல் காலத்திலேயே தொடங்கியது. ௭௦கலில், பசுங்கூரை தொழில்நுட்பம் அடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்டது. வெள்ள நீர் பிரச்சினைகள் நகரங்களில் உள்ள மக்களை இதுபோன்ற புதுமையான தீர்வுகளை பற்றி சிந்திக்க வைத்தது. இலகுரக பொருட்கள் கொண்டு நவீன பசுங்கூரை தொழில்நுட்பத்தால் குறைந்த எடை தாங்கும் கூரைகளிலும் பசுங்கூரைகளை வளரவைக்க முடிந்தது. இது உலகின் வேறு எந்த நாட்டிலும் நடைமுறையில் தெரியாத போது ,80களிலேயே நவீன பசுங்கூரை தொழில்நுட்பம் ஜெர்மனியில் அனைவரும் அறிந்த ஒன்றாக இருந்தது.

ஜெர்மனியில் முதல் பசுங்கூரை தொழிற்சாலை வளர்ச்சியில் தர சிக்கல்கள் இருந்தன. FLL நவீன பசுங்கூரை தொழில்நுட்பத்தை கவனிக்க ஒரு குழு அமைத்தது. பல் ஒரு சுதந்திரமான இலாப அமைப்பு ஆகும். அது "தாவர ஆராய்ச்சி மற்றும் அதன் திட்டமிட்ட பயன்பாடுகள் முன்னேற்றம் மற்றும் விரிவாக்கம் மூலம் சுற்றுச்சூழல் நிலைமைகளின் முன்னேற்றம்" எட்டு தொழில் நிறுவனங்கள் மூலம், 1975 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. FLL பசுங்கூரை செயற்குழு ,நீண்ட தொழிலாளி வழிமுறைகளை பதிப்பிட்ட 40 குழுக்களில் ஒன்றாகும் . சில வழிமுறைகள் ஆங்கிலத்திலும் கிடைக்கின்றன. FLL உறுப்பினர்கள் செய்கிற ஆராய்ச்சி மற்றும் தொகுப்பு முடிவுகள் தொடர்ந்து மேம்படுத்தப்படுகின்றன.

தற்போதைய பசுங்கூரை வழிமுறைகள் 2008 இல் வெளியிடப்பட்டது.

Fachvereinigung Bauwerksbegrünung (FBB) உலகின் முதல் பசுங்கூரை சங்கமாக 1990 இல் நிறுவப்பட்டது. FBB 1990 இல் உற்பத்தியாளர்கள் மற்றும் திட்டமிடுபவர்கள், வியாபாரிகள் மற்றும் ஆபரேட்டர்கள் ஆகியோர்க்கு ஒரு திறந்த மன்றமாக நிறுவப்பட்டது. பசுங்கூரை மற்றும் வழக்கமான கூரை தொழில்கள் இரண்டுமே சமமாக கவனிக்கப்படுகின்றன.

இன்றைய நிலவரப்படி ,10,000,000 சதுர மீட்டர் (அல்லது 100,000,000 சதுர அடி) புதிய பசுங்கூரைகள் ஒவ்வொரு ஆண்டும் கட்டப்பட்டு வருகின்றன. சமீபத்திய ஆய்வுகள்படி , இவற்றில் 3/4 மெல்லிய கூரைகளும் 1/4 கூரை தோட்டங்கலாகவும் உள்ளன. ஜெர்மனியில் மிகவும் அதிக பசுங்கூரைகள் கொண்ட இரண்டு நகரங்கள் பெர்லின் மற்றும் ஸ்டுட்கார்ட் ஆகும். ஜேர்மன் நகரங்களில் மூன்றில் ஒரு பங்கு நகரங்கள் பசுங்கூரைகள் மற்றும் மழை நீர் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் சட்டங்கள் கொண்டுள்ளன.

ஜெர்மனி உலகின் மிக அதிக பசுங்கூரைகள் கொண்ட நாடாகும்.மேலும் நவீன பசுங்கூரை தொழில்நுட்பம் பற்றிய மிகவும் மேம்பட்ட அறிவு கொண்ட நாடாகவும் திகழ்கிறது. ஜெர்மனியில் பசுங்கூரை ,இயற்கை ரசித்தல் நிபுணர்களின் 2 -3 ஆண்டுகள் பயிற்சி கல்வி முறையின் ஒரு பகுதியாக இருக்கிறது. பசுங்கூரைகள் ஜெர்மனியில் ஒரு பொது அறிவுக்குரிய பொருளாக இருப்பதால் பசுங்கூரை ஜெர்மன் விக்கிப்பீடியா பக்கத்தைப் பார்ப்பது சிறப்பாக இருக்கும். பசுங்கூரை தொழில்நுட்பம் இணையதளம் வருமுன்னரே ஜெர்மனியில் அமல்படுத்தப்பட்டுவிட்டன.

கரீஸ்

தொகு
 
ஈகோச்டய்ஜி

கிரேக்க நிதி அமைச்சகம் ஏதென்ஸில் உள்ள அரசியல் சதுக்கத்தில் உள்ள கருவூலத்தில் ஒரு பசுங்கூரையை நிறுவியுள்ளது. ஈகோச்டய்ஜி(கிரேக்கத்தில் ஈகோ என்றால் சுற்றுச்சூழல் ஏற்படுத்துவது என்றும், ச்டய்ஜி என்றால் கூரை வீடு பாதுகாப்பு என்றும் பொருள்) பணி செப்டம்பர் 2008 இல் தொடங்கப்பட்டது. மேலும் ஆகஸ்ட் 2009 இல் நடத்திய ஆய்வுகள்,காற்று பதனாக்கத்தில் 50% எரிசக்தி சேமிப்பு அளவிற்கு பசுங்கூரைகள் தரவல்லவை என்று தெரியவந்தது. ஈகோச்டய்ஜி பத்து மாடி கட்டிடம் 1.4 ஹெக்டேர் பரப்பளவு தரையை கொண்டுள்ளது. ஈகோச்டய்ஜி, கூரையில் 52%மும் தரையில் 8%மும் ஆக 650 சதுர மீட்டர் உள்ளடக்குகிறது. இருந்தும் , ஆண்டிற்கு € 5.630 ஆற்றல் சேமிப்பு கணக்கிடப்பட்டுள்ளது.இது காற்று பதனப்படுத்துதலில் 9% சேமிப்பும் முழு கட்டிடத்திற்கு வெப்பமூட்டும் செலவில் ஒரு 4% சேமிப்புமாக பதிவு செய்யப்படுகிறது. தெர்மல் நிழற்பட கருவிகள் மூலம் நடத்திய ஆய்வுகளில் ஈகோச்டய்ஜியால் சிற்றுச்ஹோழல் மட்டுமின்றி பறவை மற்றும் பூச்சி வகைகளும் பெரிகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது .

ஐஸ்லாந்து

தொகு

புல்தரை கூரைகள் ஐஸ்லாந்தின் பாரம்பரிய பண்ணை வீடுகளில் நிறைய காணப்படுகின்றன.

சுவிட்சர்லாந்து

தொகு

சுவிச்சர்லாந்து ஐரோப்பாவின் மிக பழமையான பசுங்கூரைகளில் ஒன்றை கொண்டுள்ளது. இது வோல்லிஷோபின் , ஜூரிச்சில் உள்ள மூஸ் ஏரி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் , 1914 ல் உருவாக்கப்பட்டது. இதன் வடிகட்டி டாங்கிகள் பிளாட் கான்கிரீட் கூரைகள் கொண்டது. சரளை கற்கள் கொண்ட ஒரு வடிகால் அடுக்கும் 15 செ.மீ. தடிமனான ஒரு மண் அடுக்கும் இந்த கூரை மீது பரப்பப்பட்டுள்ளது.இது அச்ப்ஹல்டால் ஆனா ஒரு அடுக்கால் நீர் கசியாதவண்ணம் பார்த்துக்கொள்ளப்படுகிறது.இவை ஏனெனில் உட்புறத்தை குளிர்ச்சியாக வைக்கவும் வடிகட்டும் அமைப்புகளில் பாக்டீரியா வளராமல் தடுப்பதற்குமே ஆகும். இது மண்ணில் ஏற்கனவே இருந்த விதைகளிலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு புல்வெளி ஆகும்.இதில் இப்போது அந்த மாவட்டத்தில் அழிந்துபோன சில தாவர வகைகளும் உள்ளன.குறிப்பாக 6,000 Orchis morio (பச்சை இறக்கை ஆர்க்கிட்) உள்ளன. சமீபகால உதாரணங்கள் கிளினிக்கும் 1 மற்றும் கிளினிக்கும் ௨ ஆகிய பாசெல் மண்டல மருத்துவமனைகள், மற்றும் ஜூரிச் பிரதான ரயில் நிலையத்தில் சிஹ்ல்போஸ்ட் மேடையில் காணலாம்.

ஸ்வீடன்

தொகு

உலகின் முதல் தாவரவியல் பூங்காவாக கருதப்படும் பூங்கா ,மே 1999 இல் ,மால்மொவின் ஒரு புறநகர் பகுதியான ஆகச்ட்டேன்பர்கில் நிறுவப்பட்டது. சர்வதேச பசுங்கூரை நிறுவனம் (IGRI) ஒரு ஆராய்ச்சி நிலையம் மற்றும் கல்வி வசதிகூடமாக ஏப்ரல் 2001 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. (உலகம் முழுவதும் இதே போன்ற அமைப்புக்கள் அதிகரிப்பதால் ,இது பின்னர் ஸ்காண்டிநேவிய பசுங்கூரை நிறுவனம் (SGRI) என்று மறுபெயரிடப்பட்டது.) பசுங்கூரைகள் மால்மோவில் நன்கு நிறுவப்பட்டு உள்ளன.

ஐக்கிய இங்கிலாந்து

தொகு

2003 ல் 'இங்கிலீஷ் நேச்சர்', இங்கிலாந்து கொள்கை இயற்றுபவர்களுக்கு பசுங்கூரைகளின் மீது போதிய கவனம் செலுத்தவில்லை என்றது. இருப்பினும், பிரித்தானிய உதாரணங்கள் நிறைய காண முடியும். ஒரு குறிப்பிடத்தக்க கூரை தோட்டம் லண்டனில் உள்ள கேன்சிங்க்டனில் உள்ள டெர்ரி & டாம்ஸின் பல்பொருள் அங்காடியின் மேல் 1938 லேயே கட்டப்பட்டது. இன்னும் சமீபத்திய உதாரணமாக நாட்டிங்காம் விழா வளாகம் பல்கலைக்கழகத்திலும் , கிரீன்விச்சில் உள்ள சைன்ச்புரிஸ் மில்லேனியம் ஸ்டோரிலும் ஹோர்நிமன் அருங்காட்சியகத்திலும் காணலாம்.

அமெரிக்கா

தொகு

நன்கு பரந்த மெல்லிய பசுங்கூரைகளை அமெரிக்காவில்காணலாம். டியர்பார்ன், மிச்சிகனில் உள்ள ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் ரிவர் ரவ்ஜ் தொழிற்சாலையில், 97 அச்செம்பிலி ப்லாண்டுகளின் கூரைகளில் பசுமைன்கூரைகளை காணலாம். இது வில்லியம் மேச்டோனவால் வடிவமைக்கப்பட்டது. சிகாகோ நகரின் மில்லேனியம் பார்க் பசுங்கூரை உலகின் மிகப்பெரிய தடிமனான பசுங்கூரைகளில் ஒன்றாகும். மற்ற நன்கு அறியப்பட்ட அமெரிக்க உதாரணங்கள் யாவேனின் சிகாகோ சிட்டி ஹால் மற்றும் சான் புருனோ, காலிஃபோர்நியாவில் உள்ள இடைவெளி தலைமையகம் ஆகியவை ஆகும்.

அமெரிக்காவில் மற்றுமாறு பசுங்கூரைக்கான உதாரணம் சியாட்டிலில் நகரில் உள்ள பல்லார்டு நூலகமாகும். இதன் பசுங்கூரை 18000 க்கும் மேலான தாவரங்கள் கொண்டது.

விலைகள்

தொகு

ஒழுங்காக வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்ட ஒரு பசுங்கூரை அமைப்பிற்கான செலவு சதுர அடி ஒன்றுக்கு 15 முதல் 20 டாலர்கள் என்பதாகும்.இது நீர்புகா படலத்தின் செலவை உட்கொள்ளாத செலவாகும்.(கூரையின் பரப்பளவு அதிகமாக அதிகமாக சராசரி செலவு குறையும்) ஐரோப்பாவில், நன்கு வடிவமைக்கப்பட்டு முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டு நிறுவப்பட்ட ஒரு பசுங்கூரை சதுர மீட்டருக்கு 100 முதல் 200 யூரோக்கள் செலவை ஈர்க்கும். இச்செலவு கூரையின் வகையை பொறுத்தும், கட்டிட அமைப்பை பொருத்தும் பயன்படுத்தப்படும் தாவரங்களை பொருத்தும் அமையும்.

செலவின் ஒரு குறிப்பிட்ட அளவு பராமரிப்பு காரணமாக அமையும். மெல்லிய பசுங்கூரைகள் குறைந்த பராமரிப்பு செலவை கொள்வன. எனினும் அவை பராமரிப்பு செலவே இல்லாமல் அமைவதில்லை. பசுங்கூரையின் பராமரிப்பு கணிசமான அளவு உரம் இடுதலை கொண்டுள்ளது. அழகியல் ஒரு பிரச்சினை இல்லை என்றால், உரமிடுதலும் பராமரிப்பும் பொதுவாக தேவை இல்லை. மெல்லிய பசுங்கூரைகளுக்கு வெள்ளநீர் மாசுபாடு தவிர்க்கும் பொருட்டு கட்டுப்பாட்டுடன்-வெளியிடப்படும் உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வழக்கமான உரங்களை மெல்லிய கூரை மீது பயன்படுத்த கூடாது. ஜெர்மன் ஆய்வுகள் சதுர மீட்டருக்கு 5gN என்பதை பசுங்கூரையின் சத்து தேவையாக தோராயப்படுத்தியுள்ளனர். பல சத்துக்கள் உள்ளடக்கிய மண்ணை பயன்படுத்தாமல் இருப்பதும் முக்கியம் ஆகும். FLL வழிமுறைகள் அதிகபட்சமாக-அனுமதிக்கூடிய ஊட்டச்சத்து அளவை குறிப்பிடுகின்றன.

பாதகங்கள்

தொகு

பசுங்கூரையின் முக்கிய குறைபாடு அதன் உயர்ந்த ஆரம்ப செலவு ஆகும். சில வகையான பசுங்கூரைகள் அதிக கட்டமைப்பு வசதிகளை எதிர்பார்ப்பன. இன்னும் குறிப்பாக, உலகில் அதிக நில அதிர்வுக்கு உட்பட்ட பகுதிகளில், இந்த பிரச்னைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சில சமயம் தாவரங்கள் மற்றும் மண்ணின் அதிக எடை காரணமாக ஏற்கனவே நிறுவப்பட்ட கட்டிடங்கள் சிலவற்றில் பசுங்கூரைகளை நிறுவ முடியாது. பசுங்கூரைகளின் வகையை பொறுத்து, பராமரிப்பு செலவு அதிகமாக இருக்கலாம். ஆனால் சில வகையான பசுங்கூரைகளுக்கு சிறிய அளவு செலவே போதுமானது. சில பசுங்கூரைகளுள் நீர்புகாமல் இருக்க கடினமான ஏற்பாடுகள் தேவைப்படுகிறது. ஏனென்றால் தண்ணீரை தக்கவைப்பது மட்டுமில்லாமல் வேர்கள் படலத்தை ஊடுருவாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். நீர்புகா ஏற்பாடுகளை நிறுவுவது அதிக முதலீட்டை வேண்டினாலும் பசுங்கூரையின் அந்த நீர்புகா படலம், புற ஊதா கதிர்கள் (Ultra-violet rays) போன்றவற்றில் இருந்து பாதுகாப்பதால் அப்படலத்தின் ஆயுள் அதிகரிக்கிறது.

இதையும் பாருங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசுங்கூரை&oldid=3925324" இலிருந்து மீள்விக்கப்பட்டது