படநிலம் பரப்பிரம்மன் கோயில்
பாடநிலம் பரப்பிரம்மன் கோயில் இந்தியாவின் கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் மாவேலிகரா வட்டத்தில் படநிலம் என்னுமிடத்தில் இது பழைய திருவிதாங்கூர் மாநிலத்தின் முக்கிய கோவில்களில் ஒன்றாகும். நூரநாடு மண்டலத்தின் கலாச்சார மையமாக படநிலம் திகழ்கிறது. இக்கோவில் காயங்குளத்திற்கு கிழக்கில்17 கி.மீ. தொலைவிலும், பந்தளத்திற்கு தென்மேற்கே 7 கி.மீ. தொலைவிலும் உள்ளத. இக்கோயில் ஓம்காரம் எனப்படும் பரபிரம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
வரலாறு
தொகுஇக்கோயில் கோயில் சுயம்புவாக உருவானதாக நம்பப்படுகிறது. அதன் உண்மையான வரலாறு, வழிபாடு பற்றிய முழுமையான விவரங்கள் காணப்பெறவில்லை. நூரநாட்டின் நிர்வாக மையமாக இருந்துவருகின்றது. கோயில் நிர்வாகதைக் கட்டுப்படுத்தவும், அதன் மூலம் முழு கிராமத்தையும் கட்டுப்படுத்தவும் கோயிலைச் சுற்றியுள்ள பல்வேறு பிரதேசங்களுக்கிடையேயான மோதல்கள் ஏற்பட்ட வரலாறு உண்டு. அதனால் இவ்வூர் இப்பெயரைப் பெற்றது.
படநிலம் சிவராத்திரி
தொகுசிவராத்திரி [1] இக்கோயிலில் முக்கியமான திருவிழாவாகும். கோயிலின் 15 பிரதேசங்களில் இருந்து கெட்டுக்காளை எனப்படுகின்ற காளைகளின் ராட்சத உருவங்கள் இழுத்துவரப்படுகின்றன. இவற்றில் சில 50 அடிக்கும் மேல் உயரம் உள்ளவையாக இருக்கும். இவ்விழா கேரளாவின் மிகப்பெரிய திருவிழாக்களில் ஒன்றாகும். நூரநாடு பகுதியில் ஏராளமானோர் இந்தப் பிரமாண்ட உருவச்சிலைகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இந்த கிராமத்தை நந்திகேஷா பைத்ருகா கிராமமாக அங்கீகரிக்க கேரள அரசிடம் முன்மொழிவு வைக்கப்பட்டுள்ளது.
கோவில் சிறப்புகள்
தொகு- இக் கோயிலுக்கு பாதுகாப்பு சுவர்களோ கூரைகளோ கிடையாது
- புரோகிதர்கள் பிராமணர்களாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை.
- கோவில் திறப்பதும் இல்லை, அதுபோல மூடப்படுவதும் இல்லை. நடை திறப்பு போன்ற சடங்குகள் இங்கு செய்யப்படுவதில்லை.
- இந்துக்கள் அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதோடு, சிவராத்திரி கெட்டுகழ்ச்சி உள்ளிட்ட கோயில் தொடர்பான அனைத்து கொண்டாட்டங்களிலும் பங்கேற்கலாம். இவ்வூரின் சிறப்பு மத ஒற்றுமை ஆகும். இது இந்தியாவின் உண்மையான கலாச்சாரத்தை நிலைநிறுத்துகிறது.
- சந்தனத்திற்குப் பதிலாக விபூதி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
- முறையான மூலவர் இல்லை. ஓம் என்பதைக் குறிக்கும் கல் உருவம் மட்டுமே மரத்தின் இலைகளால் உருவாக்கப்பட்ட இயற்கையான கூரையின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.
- பரபிரம்மனுக்கு பஜனை செய்வதற்காக பக்தர்கள் விருச்சிக மாதத்தின் முதல் 12 நாட்கள் கோயில் வளாகத்தில் தங்கலாம்.
பிற விழாக்கள்
தொகுஇக் கோயிலில் விருட்சிக விழா, இருப்பதிட்டமோனம், மண்டல சிரப்பு, சப்தாஹ யக்ஞம் போன்ற திருவிழாக்கள் இங்கு நடைபெறுகின்றன.[2] [3]